Published:Updated:

லாக்டெளன் தொடர் கதை! - ஹவுஸ் ஓனரின் புலம்பல் #MyVikatan

Old age - Representational Image
Old age - Representational Image ( Pixabay )

எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள் என்றாலும் சில வர்க்கத்தினரை வாழ்க்கை படுபாதாளத்தில் தள்ளி விட்டது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மூன்றாவது முறையாக அவன் கூப்பிடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் பிரபு.

அவன் எதற்கு கூப்பிடுகிறான் என்று தெரியும்.

இது ஒரு தர்ம சங்கடமான நிலைமை.

லாக்டௌன் ஆரம்பத்தில் ஏதோ ஒரு முறை வந்து கேட்டான் ரமேஷ்.

"கஷ்டமாக இருக்கிறது. யாரும் கார் ஓட்ட கூப்பிடுவதில்லை’’ என்று அழுதான்

'ஐயோ பாவம்' என்று ஐநூறு ரூபாய் கொடுத்து அனுப்பினான் பிரபு.

அது தொடர்கதையாகி பலமுறை கொடுத்தாகிவிட்டது.

இப்போது மறுபடியும் வரப்போகிறான்.

Taxi
Taxi
Pixabay

எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள் என்றாலும் சில வர்க்கத்தினரை வாழ்க்கை படுபாதாளத்தில் தள்ளி விட்டது.

நாம்தான் அவர்களைத் தேடிப் போக வேண்டும் என்றிருந்தது போக அவர்களே நம்மை தேடி வருகிறார்கள்.

வேலைக் கொடு வேலைக் கொடு என்றால் என்ன வேலைக் கொடுப்பது?

வெளியே போக எல்லோருமே பயப்படும் நேரத்தில் என்ன வேலை தரமுடியும்?

ரமேஷ் வந்து கேட்டபோது பிரபு அதுதான் சொன்னான்.

"ஆமாம் சார்... வேலை இருந்தால் நான் உங்களை ஏன் தொந்தரவு செய்ய போகிறேன். கஷ்டமாக இருக்கிறது சார்!’’ என்று கண் கலங்கினான்.

இந்தப் பிரச்னையில் யாரைக் குறை சொல்ல முடியும்?

அரசாங்கம் என்ன செய்ய முடியும்?

ஒரு புறம் நோயின் தாக்கம் மறுபுறம் வறுமையின் கொடுமை.

எவ்வளவோ பெரிய வசதியானவர்களையே சும்மா புல்லை பிடுங்கி போடுவதை போல தூக்கி எறிந்து விட்டதே!

"என்னிடம் மட்டும் ஏது பணம்? வீட்டு வாடகையே மூன்று மாதமாக வரவில்லை. எல்லோருக்கும் என்னை பார்த்தால் ஏமாளியாக தெரிகிறதா?’’

"என்ன சார் இப்படி சொல்லிட்டே? உன்ன மாதிரி ஆளுங்களாலதான் என்னைப் போல கஷ்டப்படுகிறவர்கள் ஒருவேளையாவது சாப்பிட முடிகிறது. வீட்டையே சும்மா கொடுத்திருக்கே. என்னையும் கொஞ்சம் கவனிக்க கூடாதா?" தலையைச் சொறிந்தான்.’

"இதுதான் கடைசி, இனி மேல் தரமாட்டேன்!’’

"லாக்டெளன் இதுதான் கடைசியா இருக்கணும்னு வேண்டிக்கோ சார்!"

முத்தாய்ப்புடன் கிளம்பி போனான்.

நிஜமாகவே லாக்டெளன் எப்போது முடியும்? தொடர்கதையா தொடரும் கதையா தெரியவில்லையே?!

- காந்திமதி உலகநாதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு