Published:Updated:

ஆபீஸ் வேலையும் ஃபேஸ்புக்கும் ஒரே சமயத்தில் பார்க்கலாமா? - வாசகர் பகிரும் அறிவியல் #MyVikatan

Representational Image
Representational Image ( Franck V / Unsplash )

மல்டிடாஸ்க்கிங் செய்பவரா நீங்கள்? அப்படியென்றால் உஷாராக இருங்கள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வேலை தேடுபவர்களுக்கான LinkedIn வெப்சைட்டில் நிறைய பேர் தாங்கள் மல்டிடாஸ்க் செய்பவர்கள் என்று தங்களுடைய புரொஃபைல்களில் அப்டேட் செய்வதுண்டு. அதேபோல், கணினி துறையில் வேலை செய்யும் பல பேர், ஒரே நேரத்தில் இரண்டு வேலையைச் செய்வார்கள். ஒரு விண்டோவில் ஆபீஸ் வேலையையும் மற்றொரு விண்டோவில் இ-மெயில், சாட்டிங் , செய்தி , ஸ்டாக் மார்க்கெட் மற்றும் முகநூல் போன்றவைகளைப் பார்ப்பதுண்டு.

இந்த மாதிரி மல்டிடாஸ்க்கிங் செய்பவராக நீங்கள் இருந்தால், உங்களை மாற்றிக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கான கட்டுரைதான் இது. அடிப்படையில் இரண்டு உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்

மல்டிடாஸ்க் என்பது ஒரு மாயை. மல்டிடாஸ்க் செய்வதாக நம் மனம் நினைத்தாலும், உண்மையில் மல்டிடாஸ்க் என்ற ஒன்றே கிடையாது. மனிதர்களால் மல்டிடாஸ்க்கிங் செய்யவே முடியாது. அப்படிச் செய்தால், இரண்டு வேலைகளையும் 100 சதவிகிதம் சரியாகச் செய்ய முடியாது.

Representational Image
Representational Image

1.மல்டிடாஸ்க் என்பது ஒரு மாயை: (Multitasking = Context Switching)

மல்டிடாஸ்க் செய்யும்போது, நம் மூளை முதல் வேலையை சில நேரத்தில் முடிக்க நம் உடலுக்கு கட்டளையிட்டு, திடுமென மாறி அடுத்த வேலையை சில நேரத்தில் முடிக்க கட்டளையிடுகிறது. மறுபடியும் அது திரும்ப பழைய வேலையைத் தொடர கட்டளை இடுகிறது. திடுதெப்பென ஒருவேலையிலிருந்து அடுத்த வேலைக்கு மாறுவதற்கு நம் மூளை எடுத்துக்கொள்ளும் இந்த இடைப்பட்டநேரத்தை Switch cost என்று சொல்வார்கள். இது ஒரு Loop ல், தொடர்ந்து இந்தப் படத்தில் இருப்பது போல்செல்லும். உண்மையில் நாம் மல்டிடாஸ்கிங் செய்யவில்லை. சூழலைத்தான் மாற்றி மாற்றி அமைத்து, ஒன்றன்பின் ஒன்றாக ஒரு வேலையை முடித்து, அடுத்த வேலையைத் தொடர்கிறோம்(context switching).

இப்படி நம் மூளை switch cost செய்யும்போது, ரத்த குளுக்கோஸ் நம் மூளைக்குச் சென்று குழப்பம், மற்றும் பதற்றத்தை உருவாக்க வழி செய்யும். அதனால் நமக்கு கவனச்சிதறல்கள் உருவாகி, அதுவே நம் ஆபீஸ்வேலைகளில் தாமதம் மற்றும் பல தவறுகளை உருவாக்க காரணமாக அமைகிறது.

2.மனித மூளை மல்டிடாஸ்க்கிங் செய்ய உகந்தது அல்ல:

மல்டி டாஸ்க் நமக்கு ஏற்றதல்ல என்று விளக்க நியூரோ சைன்டிஸ்ட்கள் சொன்ன அந்த டெஸ்ட்டை இங்கே உங்களுக்கு வழங்குகிறேன். முயன்றுபாருங்கள். பிறகு தெளிவாகப் புரியும்.

Representational Image
Representational Image

இரண்டு ஒயிட் ஷீட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். முதல் ஒயிட் ஷீட்டில் கீழே சொல்கிற மாதிரி இரண்டு வரிகளில் எழுதுங்கள். முடிவில் எவ்வளவு நேரம் ஆனது என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

மல்டிடாஸ்க் இல்லாத முறை ( முதல் வரி முடித்து அடுத்த வரி)

முதல் வரி:

1 2 3 4 5 6 7 8 9 10 11..........

இரண்டாம் வரி:

I am a great multitasker

அடுத்த ஒயிட் ஷீட்டில் கீழே சொல்வது போல் எழுதுங்கள்.

மல்டி டாஸ்க் முறை:(1 I, 2 a, 3m..... ஒன்றன் கீழ் ஒன்றாக ஒரே நேரத்தில் எழுதவும்)

1 2 3....

I a m...

இரண்டுக்கும் உண்டான வேறுபாட்டை உணருங்கள்.. மல்டிடாஸ்க் இல்லாத முறையில் சுலபமாகவும் வேகமாகவும் எளிதாகவும் இருந்த உணர்வு, மல்டி டாஸ்க்கில் கஷ்டமாகவும், தாமதமாகவும் மற்றும் குழப்பமாகவும் இருந்ததாக உணர்வீர்கள்.

மல்டி டாஸ்க் செய்வதால் 100 சதவிகிதம் எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது.

“மல்டிடாஸ்கிங் நல்லது இல்லடா, ஒரு வேலையை முடிச்சிட்டு அடுத்த வேலையைச் செய்யுடா” என்று என் டீன்ஏஜ் மகளுக்கு மேலே சொன்ன எல்லாவற்றையும் விளக்கினால், “அதெப்படி, நான் ஒரே நேரத்தில் பியானோவில் இரு கைகளையும் உபயோகிக்கிறேன். அது மட்டும் இல்லாமல் என் கால்களையும் ஒருங்கிணைத்து இசையமைக்கிறேன். சும்மா Switch cost அது இதுன்னு கதை விடாதீங்க” என்றாள். நான்சொன்னேன், இப்போ பியானோ வாசிப்பது உனக்கு ஈஸியா இருக்கு. ஆனால், முதன் முதலில் நீ பியானோ கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது உன்னால் ஈஸியாக பியானோ வாசிக்க முடிந்ததா?” என்றேன். அவளிடம் பதில் இல்லை.

Representational Image
Representational Image

ஆம். எல்லோருக்கும் தொடர்ந்து ஒரே மாதிரி வேலை அமைவதில்லை. மேலும், பிடித்த வேலையும்அமைவதில்லை. பிடித்த வேலையும் ஒரே மாதிரியான வேலையும் தொடர்ந்து ஒருவருக்கு அமையுமானால், அவர் ஈடுபாட்டோடு வேலை செய்வார். அப்போது, அவரின் மூளை switch cost ஐ கையாள எளிதாகப் பழகிவிடும். ஆனால், ஒருவருக்கு தன் அன்றாடம் செய்யும் வேலைகள் எப்போதும் ஒரே மாதிரியாகவும் ஆர்வமாகவும், எல்லா நேரமும் அமைவதில்லை. நிறைய புதுப் புது சவால்களோடுதான் ஒருவருக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும்வேலை அமைகிறது.

அதனால் நாம், மல்டிடாஸ்க்கை தவிர்ப்பதே நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. அப்படி தவிர்த்தால், நம்வேலைகளில் புரொடக்டிவிட்டியை அதிகமாக்கலாம். தினமும் 8 மணி நேரம் வேலை செய்து முடித்தவுடன் புத்துணர்வோடு இருப்பதை உணரலாம். ஒருவித அழற்சி ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

பொறுப்பேற்றல்:

நான் உளவியலில் முறைப்படி தேர்ச்சிபெற்றவன் அல்ல. Focus ஐ இம்ப்ரூவ் செய்வதற்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு seminar ல் நான் கற்று கொண்டதை வைத்தே அடிப்படையாக எழுதியிருக்கிறேன்.

நன்றி:

Dr Sahar Yousef

Neuro scientist and Faculty

UCLA

-பாலமுருகன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு