Published:Updated:

சீனா பக்கத்துலயே இருக்கோம்; ஆனா இங்கு லாக் டவுன் இல்ல! - தைவான் சூழலை விவரிக்கும் தமிழர்#MyVikatan

Dr. செந்தில்குமார்
Dr. செந்தில்குமார்

தைவான் எப்படி கொரோனா பாதிப்பில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டது என்பது குறித்து அங்கு வசிக்கும் தமிழரும் ஆராய்ச்சியாளருமான Dr. செந்தில்குமார் பார்த்தசாரதி விவரிக்கிறார்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எனது பெயர் Dr. செந்தில்குமார் பார்த்தசாரதி. தேசிய தைவான் பல்கலைக்கழகத்தில் postdoc ஆராய்ச்சியாளராக 2018 முதல் பணியில் இருக்கிறேன். எனது கண்ணோட்டத்தில் சில வார்த்தைகள் இன்றைய சூழலைக் கணக்கில்கொண்டு உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை...

இந்திய தேசமே முடங்கிக்கிடக்கிறது. காலம் தாழ்த்தப் பட்டிருந்தாலும் இப்போதாவது செயலில் இறங்கினார்களே என்று மகிழ்ச்சி. ஆனால், எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மைதான். அதே நேரம் மக்களாகிய நாமும், இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது விருப்பம். அப்போதுதான் பின்விளைவுகளைத் தவிர்க்க முடியும்.

Current scenario
Current scenario

சீன தேசத்திற்கு மிக மிக அருகினில் இருந்தாலும், இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 9) தைவானில் வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 400-க்கும் கீழே. இறந்தவர்களின் எண்ணிக்கை 5 மட்டுமே. இதற்கு, தைவான் அரசாங்கத்தின் பாராட்டும்படியான தடுப்பு நடவடிக்கைகளே காரணம். ஜனவரி மாத நடுவினிலே அவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இதற்குக் காரணம்.

1 .வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர்க்கு 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுதல்.

2 . தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் மில்லியனில் அபராதம் செலுத்த வேண்டும்.

3 . மக்களுக்கு அரசாங்கமே மாஸ்க் சலுகை விலையில் வழங்குகிறது. (இரண்டு வாரத்திற்கு ஒருமுறை 9 எண்ணம்.)

4 . மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் அனுமதி இல்லை.

5. மாஸ்க்கை கண்ட இடங்களில் வீசி எரிந்தாலும் அபராதம். தகவல் கொடுப்போருக்கு சன்மானம்.

6 . அனைத்து இடங்களிலும் தெர்மல் பரிசோதனை.

7. சிகிச்சைக்குப் பின்னரும் சில நாள்கள் கட்டாய தனிமைப்படுத்துதல். (அதனால்தான் தொற்று பிறருக்கு பரவுவது கட்டுக்குள் இருப்பதாகத் தோன்றுகிறது) இன்னொரு முக்கியமான விஷயம், தைவானில் இன்னும் லாக்டவுன் நடைமுறைக்கு வரவில்லை (லாக்டவுன் அறிமுகப்படுத்தப்படாத ஆறு நாடுகளில் தைவானும் ஒன்று).

அப்படி இருந்தும், வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் விதிகளை மதித்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். சுய சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதால் தொற்று கட்டுக்குள் இருக்கிறது. வரும் நாள்களிலும் வைரஸ் தொற்று கட்டுக்குள் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. எதிர் வரும் நாள்களில் இங்கு லாக்டவுன் கொண்டு வரப்பட்டாலும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

தைவான்
தைவான்

இன்னொரு முக்கியமான விஷயம், தைவான் மேற்கொண்ட பரிசோதனை எண்ணிக்கை 40,000-க்கும் அதிகம். இதுவரை நமது இந்தியா நாடு செய்த பரிசோதனைகள் கிட்டத்தட்ட 1,70,000. 3 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு செய்த பரிசோதனையைக்கூட இன்னும் நமது தமிழ்நாடுகூட செய்யவில்லை என்பதுதான் என்னை அதிகம் பாதித்த விஷயம். அனைத்து மாநில அரசாங்கமும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டால் மட்டுமே சமூக பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும். அதுபோல, அரசாங்கத்தைக் குறை கூறுவதை விட்டுவிட்டு மக்கள் ஊரடங்கை மதித்து நடந்தாலே போதும். மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதை தினமும் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. சுய ஒழுக்கம் எவ்வளவு முக்கியமோ, சுய சுகாதாரமும் முக்கியம். மக்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது விருப்பம். தனிமைப்படுத்துதலைவிட தனிமைப்படுதலே சிறந்தது...என் தாய்நாடும் மீண்டெழும், நம்பிக்கையுடன் அயல் நாட்டில்…

- முனைவர் செந்தில்குமார் பார்த்தசாரதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு