Published:Updated:

லாக்டவுன் நாள்களைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள அசத்தலான 10 யோசனைகள்! #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

லாக் டவுன் நாள்களைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்வதற்கான 9 வழிகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் கல்வியாளரும் தொழில் முனைவோருமான `ஆனந்தம்' செல்வகுமார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா நம் அனைவரையும் 21 நாள் வீட்டிற்குள் முடக்கிவைத்திருக்கிறது.

வீட்டுக்குள் எப்படி சும்மா இருப்பது ,பொழுதே போகமாட்டேங்குது. என்ன செய்றது தெரியல… என்று புலம்புகிற நண்பர்களை நிறைய பார்க்கிறோம். ஆனாலும் அதே நண்பர்களுக்குத்தான் கொரோனாவுக்குப் பிறகான நம் தொழிலையோ, வேலையையோ, எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையும் இருக்கிறது.

இங்கே நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன.

வாய்ப்பு 1: கொரோனா-வுக்குப் பிறகு எப்படியெல்லாம் இருக்குமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருப்பது.

வாய்ப்பு 2: கவலைப்படுவதற்காக நாம் செலவிடுகிற அதேநேரத்தைச் சவால்களை எதிர்கொள்வதற்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ளலாம்.

Representational Image
Representational Image

எந்த வாய்ப்பைப் பயன்படுத்த போகிறோம் வாய்ப்பு ஒன்றா அல்லது வாய்ப்பு இரண்டா?

லாக் டவுன் நாள்களைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வதற்கான 9 வழிகள்..

1. நம் தொழிலை மேம்படுத்த, நம் வியாபாரம் அல்லது நிர்வாகம் சார்ந்த புத்தகங்களையோ, ebook,video, audio book உள்ளிட்ட ஏதோ ஒரு வடிவத்தில் படித்தோ, கேட்டோ நம்மை sales, marketing, HR, personal growth போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் நம்மை வலுப்படுத்திக்கொள்வதன் மூலம், கொரோனாவுக்கான பிந்தைய சவால்களைச் சந்திக்க நாம் தயாராக இருப்போம்.

2. நாம் இதுவரை செய்ய ஆசைப்பட்ட ஆனால் நேரம் பற்றாக்குறையால் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கும் செயல்களைப் பட்டியலிட்டு ஒன்றொன்றாகச் செய்து முடிக்கலாம்.

3. நம் கணினியில் மற்றும் கைபேசியில் உள்ள தகவல்கள், photos,videos, ஆகியவற்றைச் சரியான முறையில் folder உருவாக்கி பிரித்து வைக்கலாம், தேவையில்லாதவற்றை delete செய்யலாம்.

4. நமக்கு மிகவும் பிடித்த மற்றும் கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட விஷயங்களை online மூலம் கற்றுக்கொள்ளலாம்.

5. நம் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இணையதளத்தைப் பயன்படுத்தி நாம் எதிர்பார்க்கிற வாடிக்கையாளர்களின் தகவல்களைச் சேகரிக்கலாம்.

Representational Image
Representational Image

6. Digital marketing / social media மூலம் நீங்களாகவே உங்கள் வியாபாரத்தை ஆயிரக்கணக்கான மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பதை கற்றுக்கொள்ளலாம்.

7. வாடிக்கையாளர்களை தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடல்நலனை அறிந்துகொள்வதோடு நமது அன்பையும் தெரியப்படுத்தலாம். இது நமக்கும் நம் வாடிக்கையாளர்களுக்குமான நட்புறவை அதிகப்படுத்தும்.

8. நம் நீண்டகால நண்பர்கள் மற்றும் நம் வாழ்வில் சந்தித்த முக்கியமான நபர்களைத் தொடர்புகொண்டு பேசி உறவைப் புதுப்பிக்கலாம்.

9. நிகழ்காலத்தில் நாம் அனைவரும் கைபேசி மற்றும் கணினி வசம் சென்றதால் நம் உடலளவில் மிக அருகில் இருந்தாலும் மனதளவில் மிக தூரமாகச் சென்றுவிட்டோம். அதனால் இந்த 21 நாள்களை நம் குடும்ப உறுப்பினர்களோடு தாராளமாக நேரம் செலவிடலாம். அனைவரும் ஒன்றாகக் கூடி கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம்.

10. மனைவியோடு சேர்ந்து ஒரு சில வேளையாவது சமையுங்கள். குழந்தைகளோடு மனம் திறந்து பேசி அவர்கள் மனதில் இருப்பதை தெரிந்துகொள்ளலாம். குழந்தைகளோடு விளையாடுங்கள். அவர்களின் எதிர்காலம் பற்றி விவாதியுங்கள்.

- கல்வியாளர் `ஆனந்தம்' செல்வகுமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு