Published:Updated:

சாமானியர்களின் கொண்டாட்டமான சதுர்த்தி பண்டிகை! - அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது? #MyVikatan

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி ( Vikatan Team )

அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அம்பானி முதல் அமிதாப் வரை மும்பையின் மிக முக்கிய பிரமுகர்கள் இந்த Laulbaugch Raja விநாயகரின் தீவிர பக்தர்கள் ஆகும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என்பது இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய ஒரு திருவிழா ஆகும்.

நாடு முழுவதும் பல லட்சம் விநாயகர் சிலைகள் சிறிய அளவில் இருந்து மிகப்பெரிய அளவில் சதுர்த்தியன்று நிறுவப்படும். 10 நாள்கள் வரை சிலைகள் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு பிறகு அருகில் உள்ள ஆற்றிலோ கடலிலோ கொண்டு கரைக்கப்படும். விநாயகர் சிலை வைப்பதற்கு பந்தல் போடும் நாளிலிருந்து சிலையைக் கரைப்பதற்கு எடுத்துச் செல்லும் நாள்வரை பல மக்களின் கொண்டாட்டமாக இது இருக்கும்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி
Vikatan Team

விநாயகரை முழுமுதற்கடவுளாக பல லட்சக்கணக்கான மக்கள் வழிபடுகின்றனர். இந்தியாவில் பொங்கல் கொண்டாடப்படும் ஜனவரி மாதத்திலிருந்து சதுர்த்தி வரை பெரிய பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், சதுர்த்தி என்பது பண்டிகைகளில் தொடக்கமாகும். சதுர்த்திக்குப் பிறகு தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புதுவருடப் பிறப்பு மற்றும் பொங்கல் எனத் தொடர்ந்து பண்டிகைகள் அணிவகுக்கும். அதனால்தான் ஆடி மாதத்தில் தள்ளுபடி விலையில் பழையவை கழிக்கப்பட்டு புது சரக்கு வர வைக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தி மும்பை நகரின் அடையாளங்களில் ஒன்றாகும். அங்கு ஒவ்வொரு ஏரியாவிலும் பிரசித்திபெற்ற விநாயகர் சிலைகள் நிறுவப்படுகின்றன.

அதில், மிகவும் பிரசித்திபெற்றது Laulbaugch Raja என்னும் சிலை ஆகும். ஒவ்வோர் ஆண்டும் இந்தச் சிலை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அறிவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பர். இந்த விநாயகரை சந்திப்பதற்கு பொதுவாக இரண்டு வரிசைகளை வடிவமைத்து இருப்பர். முதல் வரிசையில் விநாயகரைத் தரிசிக்க வரும் மக்கள், அவரின் கால் பாதத்துக்கு அருகில் சென்று தொட்டு வணங்கி ஆசி பெற முடியும். இந்தத் தரிசனம் பெறுவதற்கு 30 முதல் 40 மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி
Vikatan Team

அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அம்பானி முதல் அமிதாப் வரை மும்பையின் மிகப் முக்கிய பிரமுகர்கள் இந்த Laulbaugch Raja விநாயகரின் தீவிர பக்தர்கள் ஆகும். மற்றொரு வரிசையில் பல அடி வரை உயரமாக உள்ள விநாயகரை தரிசிப்பதற்கு 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகும். இந்த விநாயகர்தான், அதிக மும்பை மக்களால் தரிசிக்கப்படும் விநாயகர் என்ற சிறப்பைப் பெற்றவர்.

`யோகம் அருளும் ஈச்சனாரி விநாயகர்..!' -இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #worshipathome

ஆனால், மும்பையில் பணக்கார கணபதி இவர் அல்ல. அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர் கிங் சர்கிள் பகுதியில் எழுந்தருளும் குரு கணேஷ் சேவா மண்டல் (GSB Seva Mandal) கணபதி ஆகும். இவர் உடலில் 400 கிலோ வரை தங்க ஆபரணங்கள் பூட்டப்பட்டிருக்கும். மேலும், பல்லாயிரக்கணக்கான வெள்ளிப் பொருள்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு இருப்பார். வைர வைடூரியங்கள் மூலம் மேலும் அழகு சேர்க்கப்பட்டிருக்கும். இந்த விநாயகருக்கு இன்ஷூரன்ஸ் மட்டும் 350 கோடி அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் என்றால் இதன் மதிப்பை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி
Vikatan Team

நம் தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் நிறுவப்படுகின்றன. தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் நிறுவுவதை நாம் பார்க்க முடியும்.

இந்த விநாயகர் சிலைகளை சார்ந்த வியாபாரம் என்பது நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவு கொண்டதாகும். இந்தப் பண்டிகை 40,000 கோடி வரை பணப்புழக்கத்தைக் கொண்டு வரும் ஒரு நிகழ்வாகும். கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகள் 1,200 கோடிகள் வரை வியாபாரம் கொண்டிருக்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம். விநாயகர் சதுர்த்தி என்பது ஏறக்குறைய ஐபிஎல் போன்ற 32 மடங்கு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நிகழ்வு ஆகும்.

கொரோனா ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், இந்த விநாயகர் ஊர்வலங்கள் நிலை என்ன ஆகும் என்ற குழப்பம் நிலவி வருகிறது. கொரோனாவைக் காரணம் காட்டி ஊர்வலத்தைத் தடை செய்தால் அதை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி
Vikatan Team

ஏற்கெனவே தொடர் ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாகப் பெரும் சிரமங்களை அடைந்து வருகின்றனர். இந்தியாவின் வியாபாரம், பண்டிகைகள் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. பண்டிகை காலத்திலும் மக்களை வீட்டுக்குள் பூட்டி வைத்தால் சாமானிய மக்களுக்கும் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்திவிடும். ஒடிசாவில் தேர் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்துள்ளது. அதன் அறிவிப்புகளிலும் சுதந்திர தினம் பற்றிய செய்தி மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதனால், பண்டிகை காலத்திலாவது தன் வியாபாரம் சரியாகும் என்ற நோக்கில் கவலையோடு காத்திருக்கும் மக்களுக்கு என்ன பதில் தரப்போகிறது அரசு என்று அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

- ஷியாம் சுந்தர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு