Published:Updated:

Child Labour: குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச நாள்: நம் நாட்டின் சட்டங்கள் வலுவாக உள்ளனவா?

Child Labor- குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச நாள்

கடந்த இருபது ஆண்டுகளில், குழந்தைத் தொழிலில் இருந்து மீட்டல் மற்றும் பள்ளி சேர்க்கை ஆகியவற்றில் தமிழ்நாடு மிக சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. ஆனால், அந்த முன்னேற்றத்தையெல்லாம் பின்னுக்கு இழுக்கும் விதமாக கோவிட் அமைந்துவிட்டது

Child Labour: குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச நாள்: நம் நாட்டின் சட்டங்கள் வலுவாக உள்ளனவா?

கடந்த இருபது ஆண்டுகளில், குழந்தைத் தொழிலில் இருந்து மீட்டல் மற்றும் பள்ளி சேர்க்கை ஆகியவற்றில் தமிழ்நாடு மிக சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. ஆனால், அந்த முன்னேற்றத்தையெல்லாம் பின்னுக்கு இழுக்கும் விதமாக கோவிட் அமைந்துவிட்டது

Published:Updated:
Child Labor- குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச நாள்
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 2002-ம் ஆண்டில் குழந்தைத் தொழிலுக்கு எதிரான உலக தினத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று, குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையையும், குழந்தை உழைப்பை ஒழித்து, குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு என்ன செய்ய முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுவதற்கு பல்வேறு அரசுகள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்நாளை கடைபிடிக்கின்றனர்.
Child Labor
Child Labor

2015-ம் ஆண்டில் உலகத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வளர்ச்சி இலக்குகள் (SDGs), குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இலக்கை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக " கட்டாய உழைப்பை ஒழிப்பதற்கும், நவீன அடிமைத்தனம் மற்றும் மனித கடத்தலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், குழந்தைகளைப் படைவீரர்களாகப் பயன்படுத்துவதை தடை செய்வதற்கும், 2025-ம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர்களை முழுமையாக ஒழிக்கவேண்டும் " என்று உலக சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆனால் இது நம் நாட்டில் சாத்தியமா? அதை அடைவதற்கு நம் நாட்டின் கொள்கைகள், சட்டங்கள், செயல்திட்டங்கள் சரியாக உள்ளனவா?

குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை 2013, 18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தையே என்பதை அங்கீகரிக்கிறது. ஆனால், அதன் பின்னர் வெளிவந்த குழந்தைத் தொழில் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல் திருத்தச்சட்டம் 2016, 18 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அனைத்து விதமான தொழில்களிலும் இருந்து விடுவிக்கும் நோக்கத்தைக்கூட கொண்டிருக்கவில்லை. எனவே அனைத்து குழந்தை பாதுகாப்பு சட்டங்களும் 18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் விரிவுபடுத்திட வேண்டும்.

Child Labor
Child Labor

35 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கான தேசியக் கொள்கை வளர்ச்சி இலக்கு (SDG) 8.7-க்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கான தேசியக் கொள்கையில் குழந்தைத் தொழில் பிரச்னையைக் கையாள்வதற்கான செயல் திட்டம் உள்ளது. அனைத்து விதமான நலத்திட்டங்களிலும் குழந்தைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்; குழந்தைகளுக்குப் பயனளிக்கும் பொது மேம்பாட்டுத் திட்டங்களை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. மேலும், மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில், அரசின் பல்வேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முக்கிய குழு செயல்படும் என்கிறது. ஆனால், ஒருங்கிணைந்த பணி என்பதை போலியோ சொட்டு மருந்து போடும் நாளில் மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசின் பல்வேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக, இந்த ஆண்டு ஜூன் 12, குழந்தைத் தொழிலுக்கு எதிரான உலக தினம் “குழந்தைத் தொழில் முறையை ஒழிக்க உலகளாவிய சமூகப் பாதுகாப்பு” என்ற கருப்பொருளின் கீழ் அனுசரிக்கப்படுகிறது. சமூக பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் திட்டங்களில் அதிக முதலீடு செய்ய சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) அழைப்பு விடுத்துள்ளது. சமூகப் பாதுகாப்பு என்பது ஒரு மனித உரிமை. இது நெருக்கடி காலங்களில் குடும்பங்கள் குழந்தைத் தொழிலை நாடுவதைத் தடுப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கொள்கை கருவி. இருப்பினும், கோவிட்-19 நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே, உலக மக்கள்தொகையில் 46.9 சதவிகித பேர் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு சமூகப் பாதுகாப்பு திட்டத்தால் பயன்பெற்றிருந்தனர். குழந்தைகளுக்கான பாதுகாப்பு இன்னும் குறைவாகவே உள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில், குழந்தைத் தொழிலிலிருந்து மீட்டல் மற்றும் பள்ளி சேர்க்கை ஆகியவற்றில் தமிழ்நாடு மிக சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. ஆனால், அந்த முன்னேற்றத்தையெல்லாம் பின்னுக்கு இழுக்கும் விதமாக கோவிட் அமைந்துவிட்டது என குழந்தைத் தொழில் ஒழிப்பு பிரசாரம் (CACL), தமிழ்நாட்டில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கிறது.

கோவிட்-19-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 280 விழுக்காடு அதிகரித்துள்ளது; கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாகவும், பள்ளிகளை மூடிய காரணத்தாலும் வேலை செய்யும் குழந்தைகளின் விகிதம் 28.2 விழுக்காட்டிலிருந்து 79.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது என CACL கண்டறிந்துள்ளது.

ஆகவே, கொரோனாவால் ஏற்பட்ட நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, தொழில்துறையின் பொருளாதார வீழ்ச்சி, குடும்பங்களின் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றை குழந்தைகளின் தோளில் சுமத்தாமல், அவர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துவோம். குழந்தைத் தொழிலை முழுமையாக ஒழிப்பதற்கும், குழந்தைத் தொழில் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கும் வலுவான கொள்கைகள் மற்றும் சட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.

- பெ. ஜோசப் விக்டர் ராஜ்

முன்னாள் தேசிய அமைப்பாளர்

குழந்தைத் தொழில் ஒழிப்பு பிரச்சாரம் (CACL)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism