Published:Updated:

Digital Learning: டிஜிட்டல் வழிக் கற்றலில் செயல்திறன் குறைபாடா? வெளியான தரக்குறியீடு

Digital Learning

2019-20 ஆண்டுக்கான மாவட்ட செயல்திறன் தரக்குறியீட்டில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் டிஜிட்டல் கற்றல் மிகவும் மோசமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digital Learning: டிஜிட்டல் வழிக் கற்றலில் செயல்திறன் குறைபாடா? வெளியான தரக்குறியீடு

2019-20 ஆண்டுக்கான மாவட்ட செயல்திறன் தரக்குறியீட்டில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் டிஜிட்டல் கற்றல் மிகவும் மோசமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
Digital Learning
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் கற்றல் தற்போது கொஞ்ச கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பு வருகிறது.

பாதிப்பை மேலும் குறைக்கும் விதமாகப் பல்வேறு புது முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதிய செயலிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

Digital Learning
Digital Learning

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமானபோது கணினிகள், இணையதள வசதிகள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளைக் கையாளப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவாக இருந்ததாகவும் இதனால் நாட்டின் 61 சதவிகித மாவட்டங்களில் டிஜிட்டல் கற்றல் குறைவாக இருந்ததாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய கல்வி அமைச்சகம். கணினிகள் மற்றும் இணைய வசதி ஆகியவற்றை மாணவர்கள் கையாளும் விதம், இணைய வழி மூலம் கற்பிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் சதவிகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட வாரியான கணக்கீடுபடி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் 2019-20 ஆண்டுக்கான மாவட்ட செயல்திறன் தரக்குறியீட்டில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் டிஜிட்டல் கற்றல் மிகவும் மோசமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களில் சுமார் 180 மாவட்டங்கள் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவும், 146 மாவட்டங்கள் 11 முதல் 20 சதவிகிதத்துக்குள்ளும், 125 மாவட்டங்கள் 20 முதல் 30 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தரக் குறியீட்டில் கிராமப் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற பள்ளிகள் எனத் தனித்தனியாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ள நிலையில் சண்டிகர், டெல்லி போன்ற நகரப்பகுதிகள் 50-க்கு 25 முதல் 35 மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் பீகாரின் அராரியா மற்றும் கிஷன்கஞ்ச் போன்ற இடங்கள் 2 மதிப்பெண்களே பெற்றுள்ளன. பின்தங்கிய மாவட்டங்களான அசாமின் தெற்கு சல்மாரா- மங்காச்சார் மற்றும் திரிபுராவின் தாலாய் போன்ற மாவட்டங்கள் தலா 1 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளன.

Digital Learning
Digital Learning

இதற்கு மாறாக தேர்வு மற்றும் கற்றல் முடிவுகளை பொறுத்தவரை எந்த மாவட்டமும் 20 சதவிகிதத்திற்கும் குறைவாக மதிப்பெண்களைப் பெற்றிருக்கவில்லை. அதேபோல 2019-20-ம் ஆண்டிற்கான தரக்குறியீட்டில் சண்டிகர்,பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் கேரளா முதலிய மாநிலங்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளன.மேலும் டிஜிட்டல் கற்றல் பிரிவின் கீழ், சுமார் 20 மாவட்டங்கள் 2018-19 ஆண்டைவிட அதற்கடுத்த ஆண்டில் 20 சதவிகிதத்துக்கு மேல் முன்னேற்றம் கண்டுள்ளன. அதேபோல 43 மாவட்டங்கள் 10 சதவிகிதத்துக்கும் மேல் முன்னேற்றம் கண்டுள்ளன.