``இனி இப்படி நடக்கக் கூடாது..!’’ - ஹிரோஷிமா நாகசாகி கற்றுத் தரும் பாடம் #MyVikatan

அணுகுண்டை பிரயோகிக்க முடிவெடுத்த பின் எங்கு வீசுவது என்ற பட்டிமன்றமே நடந்தது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
போரற்ற உலகை உருவாக்க, போட்டிகளற்ற உலகை உருவாக்க வேண்டும்.ஜே.கிருஷ்ணமூர்த்தி
உலக வரலாற்றில் அதிக சேதத்தையும், அதிக படிப்பினையையும் கற்றுக் கொடுத்தது, இரண்டாம் உலகப் போரே. சூரியன் உதிக்கும் நாடு எனப் பெயர் பெற்ற ஜப்பான்... பசிபிக் கடலின் மேற்குப் புறமாக இருக்கும் பல தீவுகளைக் கொண்ட நாடு. அன்றைய இரு வல்லரசுகளான ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆகவே ஆகாது. அதனால்தான் இத்தாலி ஜெர்மனியுடன் கைகோத்து அச்சு நாடுகளாக அன்றைக்கு வலம் வந்தன.

1941 டிசம்பர் 11 வரை அமெரிக்கா மறைமுகமாக பிரிட்டனுக்கு உதவினாலும் நேரடியாகக் களத்தில் இறங்கவில்லை. அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நினைத்த ஜப்பான் அமெரிக்க போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கும் Pearl (harnour ) துறைமுகத்தை சிதைத்து விட்டால் அமெரிக்காவை ஒடுக்கிவிடலாமென நினைத்து ஜப்பானிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிய 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இதன்பின்தான் நேரடியாகப் போரில் குதித்தது அமெரிக்கா.
#அணுகுண்டு
''வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்'', உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும். என்பது போல் அமெரிக்கா பொறுத்திருந்து பழி தீர்த்தது.1942-ம் ஆண்டு அணுகுண்டு தயாரிக்கும் மான்ஹாட்டன் திட்டத்தை ரகசியமாகச் செயல்படுத்தியது. 1940-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டானியம் அமெரிக்க அணுகுண்டு தயாரிப்புக்கு உதவியது. யுரேனியத்தை நியூட்ரான்களின் தாக்குதலுக்கு உட்படுத்துவதன் மூலம் புளூட்டோனியம் பெறப்பட்டது.

ஒரு அணுவை இரண்டாகப் பிளப்பதற்கும் இணைப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அணுப்பிளவை நிகழ்த்த யுரேனியம் மீது நியூட்ரான் என்ற நுண் துகள்களால் அதைத் தாக்குவார்கள். அடி வாங்கிய யுரேனிய அணு வெடித்து இரண்டாக உடைவதுடன் வெப்பத்தையும் இன்னும் சில நியூட்ரான்களையும் பிரசவிக்கிறது. அந்த நியூட்ரான்கள் அருகில் இருக்கும் வேறு யுரேனியம் அணுக்களைத் தாக்கி உடைக்க, இந்த வினை முடிவில்லாமல் யுரேனியம் பாக்கி இருக்கும் வரை தொடரும்.
மூன்று ஆண்டுகளில் 1945-ம் ஆண்டு ட்ரினிடி தீவில் அணுகுண்டை சோதித்துப் பார்த்தது அமெரிக்கா. எப்படியாவது ஜெர்மனிக்கு முன் கண்டுபிடித்தவிட வேண்டும் எனும் யூகம் வெற்றியைத் தந்தது. ஒரு சாதாரண குண்டை விட 10 லட்சம் மடங்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது.
1943-ல் இத்தாலியும், 1945-ல் ஹிட்லர் இறந்த பின் ஜெர்மனியும் சரணடைந்தது. ஜப்பானுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி கெடுவாக அமெரிக்கா விதித்தது. அதைப் புறக்கணித்ததால் அணுகுண்டைப் பயன்படுத்தி ஜப்பானை பணியவைக்க ட்ரூமன் முடுவெடுத்தார்.
#எங்கு வீசலாம்
அணுகுண்டை பிரயோகிக்க முடிவெடுத்த பின் எங்கு வீசுவது என்ற பட்டிமன்றமே நடந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி, மையப்பகுதி, அரண்மனைகள், ஆலயங்கள் என விவாதித்து இறுதியில் நாகசாகி, கொகுரா, ஹிரோஷிமா, கியோட்டோ, நீகேடா எனும் ஐந்து நகரங்கள் தேர்வாகின.
இறுதியில் ஹிரோசிமா, நாகசாகி, கொகுரா தேர்வாகிறது.

சான்பிரான்ஸிஸ் கோவிலிருந்து இன்டியானாபொலிஸ் கப்பல் மூலம் யுரேனிய குண்டிற்கான மூலப்பொருள்கள் டினியன் தீவுக் வந்தடைந்தது.
அமெரிக்க சோதனையின்போது புளூட்டோனியத்தால் செய்யப்பட்ட குண்டு பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ஹிரோஷிமாவில் பிரயோகிப்பது யுரேனியம் என்பதால் படைத்தலைவர் பால் டிப்பெட்ஸ் அதற்கான பொருள்களை பயன்படுத்த ஆயத்தமானார். காலை 7.45 மணிக்கு டினியன் தீவிலிருந்து மூன்று விமானங்கள் ஹிரோஷிமாவை நோக்கிக் கிளம்பின.
ஹிரோஷிமா ஹேன் சூ தீவில் அமைந்துள்ள நகரம் ஹிரோஷிமா. 73 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 2 லட்சத்துக்கும் மேல் மக்களைக் கொண்ட நகரம்.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் நாள் காலை எப்போதும் போல் விடிந்தது அம்மக்களுக்கு. காலை 8.15 மணிக்கு என்ன நடக்கப் போகிறதென தெரியாமல் மக்கள் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தனர். வானில் மூன்று விமானங்கள் பறந்தன.
ஹிரோஷிமாவில் வானிலை தெளிவாக இருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன் டினியல் தீவிலிருந்து கர்னல் டிப்பெட்ஸும், உடன் ராபர்ட் லூயிஸும் உலகின் முதல் அணுகுண்டை பிரயோகிக்கப் போகிறோம் என்ற இறுமாப்புடன் பறந்தனர். எனோலாகே எனும் விமானத்தில் பத்தடி உயரமும், 71 அடி விட்டமும், யுரேனியம்-235 நிரப்பப்பட்ட `லிட்டில்பாய்’ எனும் குண்டை ஜப்பானிய நேரப்படி காலை 8.15 மணிக்கு 31,000 அடி உயரத்திலிருந்து 4,100 கிலோ எடைகொண்ட அந்தக் குட்டி அரக்கன் வெளியில் குதித்தான்.

நிலத்தில் வெடிக்காமல் 1,850 அடி உயரத்திலேயே வெடித்தன. விமானிகள் பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிந்து பார்வையிட்டனர். எனினும், பேரொளிக்குப் பின் எங்கும் புகை மண்டலமாகவே இருந்தது.1 கி.மீ பரப்பிலிருந்த ஆயிரக்கணக்கான கட்டடங்கள் விழுந்தன. ஹிரோஷிமாவில் இருந்த 60,000 கட்டடங்கள் சேதமடைந்தன.
1,40,000 பேர் உடனடியாய் இறந்தனர். குண்டு வெடித்த மையத்தில் 5,000 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியதால் உடல்கருகி இறந்தனர். ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு வெப்பம் இருந்தது. 16 மணி நேரம் கழித்து அமெரிக்கா அணுகுண்டு வீசியதை அறிவித்தது. அதுவரை என்ன வகை குண்டென்றே யாருக்கும் தெரியவில்லை. குண்டு வெடித்த துயரம் அடங்கியவுடன் கதிர்வீச்சு ஆரம்பித்து. இதில் பல ஆயிரம் பேர் மாண்டனர். நகரை விட்டு தள்ளி இருந்தவர்களும் தப்பவில்லை.
#அடுத்த குறி நாகசாகி
ஹிரோஷிமா பேரழிவுக்குப் பின் ஆகஸ்ட் 9-ம் நாள் டோக்கியோவில் குழு கூடி நேச நாடுகளிடம் சரணடைய விவாதித்தனர். சரணடைய காலதாமதம் ஆனதால் அமெரிக்க ஆகஸ்ட் 11-ம் தேதி திட்டமிட்டபடி கொகுரா நகரைத் தாக்க குறி வைத்தது. அங்கு அன்று மேகங்கள் சூழ்ந்திருந்ததால் திட்டம் மாறி நாகசாகியில் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 11 மணிக்கு FAT MAN எனும் புளூட்டானியம் குண்டை வீசியது.
இதுதான் சோதனை வெடிப்புக்கு உட்படுத்தப்பட்ட குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 4,500 கி.கி எடையும், 1.5 மீட்டர் விட்டமும், 3.2 மீட்டர் நீலமும் உடையது.1,950 அடி உயரத்தில் வெடிக்க வைக்கப்பட்டு விழுந்தது. அதே அளவு உயிர்சேதம் இங்கும் நிகழ்ந்தது. ஜப்பான் நிலைகுலைந்து போனது. இதற்குப் பின்னும் சரணடையாவிட்டால் செப்டம்பரிலும் அக்டோபரிலும் மீண்டும் குண்டு வீச இரு திட்டங்கள் வைத்திருந்தது அமெரிக்கா.

ஆனால், ஜப்பான் 1945 ஆகஸ்ட் 15-ம் தேதி மன்னர் ஹிரோஹிடோ ரேடியோ மூலம் தன்னம்பிக்கை உரையாற்றினார். செப்டம்பர் 2-ம் தேதி போர்நிறுத்தத்தில் கையெழுத்திட்டது. ஜெனரல் டோஜோ தூக்கிலிடப்பட்டார்.
உயிர்தப்பியவர்கள் நிலைதான் மோசம். மரணத்திலிருந்து தப்பித்தாலும் கதிரியக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புதான் அதிகம். பல குழந்தைகள் பிறப்பிலேயே ஊனமாகப் பிறந்தனர். தழும்புகளுடன் இன்னும் வாழ்கின்றனர். இருநகரமும் அணு ஆயுதத்தால் உருவாகும் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் வரலாறாக உள்ளது.
#எல்லாம் அணுமயம்
அணுகுண்டு வீச்சால் பேரழிவு ஏற்பட்டாலும் உலக நாடுகள் பாதுகாப்புக்காக குண்டுகள் தயாரிக்கத் தொடங்கின. அணுகுண்டுகளைத் தவிர்த்தாலும் மின்தேவைக்காக அணு உலைகளைப் பயன்படுத்தும் முறையும் நடைமுறைக்கு வந்தது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா என அதிகாரமிக்க நாடுகளாக விளங்குகின்றன. இனி ஒரு துயர சம்பவம் நடக்கக் கூடாது என்பதே ஹிரோஷிமா நாகசாகி உலகத்துக்குக் கற்றுத் தரும் பாடம்.
- மணிகண்டபிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.