Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: காவேரி மருத்துவமனைகள் குழுமம் சார்பில் ரூ.1 கோடி நன்கொடை!

காவேரி மருத்துவமனைகள் குழுமம் நிதியுதவி
காவேரி மருத்துவமனைகள் குழுமம் நிதியுதவி

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு ரூ.1 கோடி நன்கொடையை காவேரி மருத்துவமனைகள் குழுமம் வழங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டின் முன்னணி மருத்தவமனைகள் குமுமங்களுள்‌ ஒன்றான காவேரி மருத்துவமனை கோவிட் பெருந்‌தொற்றுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு ரூ.1 கோடி நன்கொடையை மருத்துவமனைகள் குழுமம் வழங்கியிருக்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ‌அவர்களை நேரில் சந்தித்த டாக்டர்‌. S.சந்திரகுமார்‌ (நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர்‌), டாக்டர்‌. S.மணிவண்ணன்‌ (நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்‌), மற்றும் டாக்டர்‌ S.அரவிந்தன்‌ (இணை நிறுவனர் & செயலாக்க இயக்குநர்‌) ஆகியோர் ‌இந்‌த நன்கொடைக்கான ரூ.1 கோடி காசோலையை வழங்கினர்.

தமிழ்நாட்டில்‌ கோவிட்‌-19 பரவலைத் தடுக்கவும்‌, தடுப்பூசி மருந்துவ வழங்கல்‌, உரிய சிசிச்சையை வழங்குதல் ஆகியவை உட்பட இப்பெருந்தொற்றுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்களது குமுமத்தின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் ‌என்று தங்களது பொறுப்புறுதியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் காவேரி மருத்துவமனைகள் குழுமம் தெரிவித்‌தது.

அடுத்த கட்டுரைக்கு