Published:Updated:

`இருட்டுக்கடை' அல்வா உரிமையாளர் மரணம் உணர்த்திய பாடம்! -நெல்லை வாசகி #MyVikatan

Representational Image
Representational Image ( Jude Beck on Unsplash )

ஒருவரை ஒருவர் முந்தி அடித்துக்கொண்டு கீழே பிடித்து இழுத்து தள்ளி மேலே வரத்துடித்த மனித சமுதாயம் இன்று உயிருடன் நலமாக இருந்தாலே பெரும் மகிழ்ச்சி என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

சில தினங்களுக்கு முன்பாக பிரபல `இருட்டுக்கடை' அல்வா உரிமையாளர் கோவிட்-19 உடன் போராடி வந்த நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் குடும்பம் மட்டும் அல்லாது திருநெல்வேலி அல்வாவை ருசி பார்த்த அத்துணை பேரும் வருத்தம் கொண்டனர். இந்த முடிவு அனைவரையும் புரட்டிப் போட்டிருந்தது. எப்படி இப்படியொரு முடிவுக்கு வந்திருப்பார் என்று அவரின் மரணம் குறித்து சிந்திக்கும்போது சில விஷயங்களை உணர்ந்தேன்.

ஒருவரை ஒருவர் முந்தி அடித்துக்கொண்டு கீழே பிடித்து இழுத்து தள்ளி மேலே வரத்துடித்த மனித சமுதாயம் இன்று உயிருடன் நலமாக இருந்தாலே பெரும் மகிழ்ச்சி என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

Representational Image
Representational Image
Sasha Freemind on Unsplash

முன்பெல்லாம் ஒருவரை காணும்போதெல்லாம் ``என்னங்க நலமாக இருக்கீங்களா" என்று கேட்போம். ஆனால், சில வருடங்களாகவே இந்த ஒற்றை அழகான, ஆரோக்கியமான தேவையான கேள்வியை பல தேவை இல்லாத கேள்விகள் ஆட்கொண்டுவிட்டன.

எத்தனை மதிப்பெண்.. எப்போ கல்யாணம்.. பொண்ணு வீட்ல எவ்ளோ நகை போடறாங்க.. எப்போ வெளிநாடு போகப் போற.. எப்போ லைப்-ல செட்டில் ஆகப் போற.. எப்போ சென்னைல வீடு வாங்கப் போற.. என்றெல்லாம் பல அசௌகரிய கேள்விகள் நம்மைச் சுற்றி இடம்பெறும். இந்தக் கேள்விகள் அனைத்தும் நம் மனித அடிப்படை இயல்புகளை மறக்கச் செய்து பணம் பண்ணுவதற்கு மட்டுமே நம்மை தயார் செய்து வந்தன.

கொரோனா அச்சம்; மன உளைச்சல்! -தற்கொலை முடிவை நாடிய `இருட்டுக்கடை' அல்வா உரிமையாளர்

எங்கள் ஊரில் (திருநெல்வேலி) நீங்கள் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் ``என்ன அண்ணாச்சி சும்மா இருக்கீங்களா?" என்று கேட்பார்கள். இதன் அர்த்தம் சும்மா உட்கார்ந்திருப்பது போன்று ஆகிவிடாது. சுகமாக இருக்கீங்களா என்ற கேள்வியே மருவி, சும்மா இருக்கீங்களா என்று ஆனது. இதன் ஆழ்ந்த கருத்து இந்தக் கொரோனா காலத்தில்தான் எனக்கு ஆழமாகப் புரிகின்றது. காசு, பணம், அந்தஸ்து என்று அனைத்தையும் தாண்டி ஒரு மனிதன் சக மனிதனை நல்லா இருக்கியா என்று கேட்கும் ஒற்றைக் கேள்வி எவ்வளவு அன்பானது, ஆழமானது, அக்கறையானது. ஒருவரையொருவர் நலம் விசாரிப்பதும், இதமாகப் பேசுவதும் மன அழுத்தங்களை சரிசெய்யும். தற்கொலை எண்ணங்கள் வராமல் தடுக்கும். எவ்வளவு வசதி, பணம் இருந்தாலும் அன்பும் ஆறுதலும் இல்லாவிடில் மன அழுத்தம் மேலோங்கும்.

Representational Image
Representational Image
Cytonn Photography on Unsplash

இன்று ஒருவரை ஒருவர் முகம்கூட பார்த்துப் பேச முடியாத காலத்தில் சக மனிதனின் வார்த்தைகள், நன் வார்த்தைகள் எவ்வளவு பலம் பொருந்தியது என்று நாம் எல்லோருமே உணர்ந்திருப்போம். இந்தக் கொடிய காலகட்டம் கடந்த பின்னர் நாம் அனைவரும் தேவையில்லாத பணமதிப்பு கேள்விகளை குறைத்துக்கொண்டு மனித ஸ்பரிசத்தை உண்டு பண்ணும் இதமான ஆரோக்கியமான கேள்விகளைக் கேட்டுப் பழக முற்படுவோம்.

-நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு