Published:Updated:

Marudhanayagam: கமல்ஹாசன் எடுக்க நினைத்த கதை; சுதந்திரப் போராட்ட வீரர் மருதநாயகத்தின் வரலாறு!

மருதநாயகம்

1763ஆம் ஆண்டு, மழைக்காலத்திற்கு இடையிலும் 22 நாள்கள் தாக்குதல் நடைபெற்றது. யூசுப் கான் போர்த் திறமையைப் பற்றி உலகறியும். கும்பினியார் படைகள் பெரிதும் சேதத்தினை எதிர்கொண்டன.

Marudhanayagam: கமல்ஹாசன் எடுக்க நினைத்த கதை; சுதந்திரப் போராட்ட வீரர் மருதநாயகத்தின் வரலாறு!

1763ஆம் ஆண்டு, மழைக்காலத்திற்கு இடையிலும் 22 நாள்கள் தாக்குதல் நடைபெற்றது. யூசுப் கான் போர்த் திறமையைப் பற்றி உலகறியும். கும்பினியார் படைகள் பெரிதும் சேதத்தினை எதிர்கொண்டன.

Published:Updated:
மருதநாயகம்
மருதநாயகம் என்ற ஒற்றைச்சொல் நம் செவிகளுக்குப் பரிச்சயமாவதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன்தான்.1997ம் ஆண்டு படப்பிடிப்பைத் தொடங்கி , பட்ஜெட் காரணங்களால் நின்றுபோன இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் சுதந்திரப் போராட்ட வீரர் மருதநாயகத்தின் வாழ்கையை மையப்படுத்தியது.
Marudhanayagam: கமல்ஹாசன் எடுக்க நினைத்த கதை; சுதந்திரப் போராட்ட வீரர் மருதநாயகத்தின் வரலாறு!

அந்தத் திரைப்படத்தின் ரசிகர்களான பலருக்கு இருக்கும் கேள்வி, ’யார் அந்த மருத‌நாயகம், அவர் சுதந்திரப் போராட்ட வீரரா’ என்பதுதான். தான் எங்கு சென்றாலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்திப் பல பெயர்களுக்கு சொந்தக்காரராக விளங்கிய ஆளுமைதான் மருதநாயகம், யூசுப் கான், கமாண்டோ கான் சாகிப் என்ற ஒற்றை நபர். பொறாமை, துரோகம் போன்றவற்றால் மாண்ட வீரர்களின் வரலாறு அதிகம். அப்படிப்பட்ட வரலாற்றில் ஒன்றுதான் மருதநாயகத்தின் வரலாறு. அவர் வாழ்க்கை குறித்த சுருக்கமான பதிவு.

1725ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்து, மதுரை மக்களின் நாயகனாக விளங்கியவர்தான் மருதநாயகம் எனும் யூசுப் கான். சிறுவயதிலேயே இஸ்லாத்தைத் தழுவியதால் மருதநாயகம், யூசுப் கானாக உருப்பெற்றார்.

இளமைப் பருவத்திலேயே புதுச்சேரிக்குச் சென்று, பிரெஞ்ச் கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார் யூசுப் கான். அதன் பின்பு, கும்பினிப் படையின் வீரனாகச் சேர, தஞ்சாவூர் சென்று கல்வி கற்றதோடு தமிழ், ஆங்கிலம், போர்த்துக்கீசியம், பிரெஞ்ச், உருது போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டார். நாளடைவில் கும்பினியார் யூசுப் கானைப் பணிகளுக்காக நெல்லூருக்கு அனுப்பினார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனது அசாத்திய திறமையால் குறுகிய காலத்திலேயே ஹவல்தாராகவும், சுபேதராகவும் பதவி உயர்வு பெற்றார். ஆற்காட்டு நவாப் பதவிக்கான சண்டையில் கும்பினியார் தலையிட்டனர். அப்போது நடைபெற்ற அந்த யுத்தத்தில், யூசுப் கான் போர்த் திறமையைக் கண்டு வியந்து, மேஜர் ஸ்டிரிங்கர் லாரன்ஸ் யூசுப் காணுக்கு ஐரோப்பிப்ய போர்ப் பயிற்சிகளை அளிக்க உத்தரவிடுகிறார். அதன் பின் தங்கப்பதக்கமும், கான் சாகிப் என்கிற பட்டமும் வழங்கினார். அதன் பின்பு அவர் கமாண்டோ கான் சாகிப் என அழைக்கப்பட்டார். பிரெஞ்ச் படைகள் மதராஸினை முற்றுகையிட்டுவிட்டனர் என்ற செய்தியை அறிந்த யூசுப் கான், மதராசப்பட்டினம் விரைந்தார்.

மருதநாயகம் கான்சாகிப் புத்தகம்
மருதநாயகம் கான்சாகிப் புத்தகம்

தனது போர்த் திறமையால் பிரெஞ்சுப் படைகளை வென்றார். யூசுப் கானின் போர்த் திறமையை எண்ணி அப்போது மதராசப்பட்டினத்தின் கவர்னராக இருந்த ஜார்ஜ் பிகட், யூசுப் கானை மதுரையின் கவர்னராக நியமித்தார். யூசுப் கான் மதுரையின் கவர்னராகப் பதவி வகித்த காலத்தில் குளம், ஏரி போன்றவற்றைப் பழுது பார்த்து மக்களுக்கு நீர் வசதிகளைச் சீர் செய்தார். விவசாயிகளுக்கும் நெசவுத் தொழிலாளர்களுக்கும் முன்பணம் கொடுத்து உதவினார். அந்த நெசவுத் துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். அவரது கவர்னர் பதவிகாலத்தில் நிதித்துறையையும் வணிகத்துறையையும் ஊக்கப்படுத்தினார். கோவில் நிலங்கள் அபகரிக்கப்படுவதைக் கண்டு அதைத் தடுக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தார். இப்படிப்பட்ட நற்செயல்கள் நிறைந்ததுதான் யூசுப் கான் கவர்னராகப் பதவி வகித்த காலம்.

இதனால் மதுரை மக்களின் செல்வாக்கையும், நன்மதிப்பையும் பெற்றார். யூசுப் கான் புகழ் மதுரை மக்களிடம் கொடிகட்டிப் பறந்தது. இதை எண்ணிப் பொறாமை அடைந்த ஆற்காட்டு நவாப் யூசுப் கானுக்குப் பல நெருக்கடியைக் கொடுத்தது, நாளடைவில் இந்தப் பகைமை கும்பினியாருக்கும் ஏற்பட்டது. மதுரை மக்கள் மத்தியில் ஆங்கிலேயருக்கு எதிரான மனநிலையை யூசுப் கான் உருவாக்குகிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யூசுப் கானைக் கைது செய்ய உத்தர‌விட்டனர்.

மருதநாயகம்  நினைவிடம்
மருதநாயகம் நினைவிடம்

இந்தச் செய்தியை அறிந்த யூசுப் கான் தன்னை மதுரையின் சுதந்திர ஆட்சியாளனாக அறிவித்தார். 1763ம் ஆண்டு, மழைக்காலத்திற்கு இடையிலும் 22 நாள்கள் தாக்குதல் நடைபெற்றது. யூசுப் கான் போர்த் திறமையைப் பற்றி உலகறியும். கும்பினியார் படைகள் பெரிதும் சேதத்தினை எதிர்கொண்டன. அதன் பின் மும்பை, மதராசப்பட்டினத்திலிருந்து போர் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அதன் பின் யூசுப் கான் கோட்டைக்குள் செல்லும் உணவு, தண்ணீர் போன்றவற்றை கும்பினியார் தடுத்தனர். இதனால் யூசுப் கான் படைவீரர்கள் சோர்வடைந்தனர்.

இறுதியில், உடன் இருந்தவர்களின் துரோகச் செயலால் யூசுப் கான் கும்பினியார் பிடியில் சிக்கிக்கொண்டார். அதன் பின் மதுரைக் கோட்டைக்குத் தெற்கே உள்ள ஒரு மாமரத்தில் மருதநாயகம் எனப்படும் யூசுப் கான் தூக்கிலிடப்பட்டார். இருமுறை கயிறு அவிழ்ந்தது, மூன்றாவது முறை மருதநாயகத்தின் உயிரை இழுத்துக்கொண்டது. இறந்த பின்பு யூசுப் கான் மதுரை மக்களின் முக்கியச் சின்னமாக மாறி விடுவார் என்பதை எண்ணி, யூசுப் கான் தலையை திருச்சிக்கும், கால்களைத் தஞ்சாவூருக்கும் திருவிதாங்கூருக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும் கும்பினியார் அனுப்பிவிட்டனர். உடலை மட்டும் இறந்த இடத்திலேயே புதைத்துவிட்டனர்.

கான் சாகிப் பள்ளிவாசல்
கான் சாகிப் பள்ளிவாசல்
யூசுப் கான் புதைக்கப்பட்ட இடத்தில் ஷேக் இமாம் என்பவர் தர்கா ஒன்றை எழுப்பினார், அது சாஹிப் பள்ளி வாசல் என்று அறியப்படுகிறது. இதுதான் சுதந்திரப் போராட்ட வீரர் மருதநாயகத்தின் வரலாறு. இதைத்தான் கமல்ஹாசன் படமாக எடுக்க விரும்பினார்.