Published:Updated:

அன்றாடங்காய்ச்சிகள்..! - தி.நகர் சாலையோரக் கடை இளைஞரின் டச்சிங் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Srinivasulu.V )

தினமும் கடை எடுத்து வைக்கும்போது ஸ்கூல் விட்ட மாதிரி உற்சாகம் இருக்கும். வியாபாரம் இருந்தாலும் இல்லாமல் போனாலும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

நான் தி.நகரில் ஒரு சாலையோரக் கடையில் வேலை பார்க்கிறேன். கொரோனா இப்போதுதான் சூழலியல் பேரிடர். உலகமே கோரோனா சுகாதார பேரிடர் என்று அறிவித்தபோது பொருளாதார பேரிடராகப் பிரதிபலித்த இடம் தி.நகர், புரசைவாக்கம்தான்.

வழிபாட்டுத்தளங்கள், நகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், துணிக்கடைகள், ரயில்வே, பணிமனை, உயர்தர உணவகங்கள்... காய்கறிச் சந்தை என வணிக மையமாகவும் சமூக இடைவெளியைச் சீர்குலைக்கும் காரணங்களாகவும் உள்ளன. எனவே, பொது முடக்கத்துக்கு ஒரு வாரம் முன்பாகவே கடை போடத் தடை வந்துவிட்டது. எல்லாம் விதி என்றாகிவிட்டது. காத்திருப்போம்.

தி .நகர்
தி .நகர்

மழையே எங்களுக்கு தற்காலிகத் தடை

நான் என் நண்பனுடைய பைக்கில்தான் கடைக்குச் செல்வேன். எப்போதும் லேட் ஆக்கிவிடுவான். ஒருநாள் மட்டும் அதிசயமாக சீக்கிரம் கெளம்பிடுவான். அன்றைக்கு, ``மழை வரப் போகுதுடா’’ என்று ஆச்சர்யப்படத் தேவையில்லை. கண்டிப்பாக மழை வந்துவிடும். இதன் காரணமாக அவன் தாமதமாகவே வருவான். கேட்டால், வாஸ்து சரியில்லை என்பான்.

நான் இங்கு பகிர்ந்திருக்கும் எல்லா படங்களும் மழை மேகத்தை சுமந்திருக்கும். காரணம் அப்போதுதான் கஸ்டமர் வர மட்டார்கள். ஒவ்வொருவரும் டிக் டாக், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போடுவது என மும்மரமாக இருப்பார்கள்.

பொது முடக்கம் - தி.நகரே இளைப்பாறு...

கோயில்கள் அதிகம் இருப்பதால் வழிபாடுகளுக்கு ஒரு கூட்டம் கூடும். முகூர்த்த தினம் நல்ல வியாபாரம் இருக்கும்.

இந்தப் புகைப்படத்தில் ``கோயில் எங்கடா..?’’ என்று கேட்காதீர்கள். இந்தப் புகைப்படத்தில் கோயில் பூசாரிவரைக்கும் details இருக்கு. (அது நெசமாவே பூசாரியோட புல்லட்தான்.)

எப்போது போனாலும் அந்த இடத்தில்தான் நிற்கும். என் போனில் DSLR அளவுக்கு details இருக்காது. ஆனால், content-க்கு ஏற்ற details இருக்கும்.

எனக்கு புல்லட் ரொம்பப் பிடிக்கும். எந்த அளவுக்கென்றால். என் கடைக்கு முன் யாரையும் பைக் விட அனுமதிக்க மாட்டேன். புல்லட் தவிர.

பூசாரியின் புல்லட்..
பூசாரியின் புல்லட்..

அந்தப் போட்டோவைப் பாருங்க. எனக்கும் புல்லட்டுக்கும் இடையில் தடை இருக்கும். பணம்தான்... ஒருநாள் உடைப்பேன். அந்த வழியாகப் போகும்போது auto connect ஆகும். Feelings uh... ஆனால், வேலைக்குப் போனால்தானே இவையெல்லாம் சாத்தியம். நிலை சீக்கிரமே மாறணும்...

ஐயோ... புல்லட் பற்றிப் பேச ஆரம்பித்தால் சொல்ல வந்ததையும் மறந்துவிடுவேன். இப்போது விஷயத்துக்குப் போகலாம்.

ஆல் ஏரியாவிலும் இவர்தான் கில்லி. தி.நகரிலும் முதலில் இவர்தான் ஃபேமஸ். அதற்கு அப்புறம்தான் எல்லாம். எங்கள் கடைக்கு வரும் கஸ்டமர்கள் பெரும்பாலும் நெத்தியில் திருநீற்று கோடு இருக்கும். அதைப் பார்த்து முடிவு செய்துவிடலாம். கோயிலில் தரிசனம் முடிந்தது என்று. ஆனால், வருத்தம் என்னவென்றால், இப்போது லாக் டெளனில் கடையைக்கூட திறக்கச் சொல்கிறார்கள். ஆனால், வழிபாட்டுத்தளங்கள் லிஸ்ட்லேயே இல்லை. கடை திறந்தாலும் பழைய நிலை திரும்பாது போலும்.

அண்ணன் அன்பழகன்

ஒரு ஏரியாவில் சாதாரண கவுன்சிலர் இருந்தாலே அவரோட ஆதிக்கம் தெறிக்கும். ஆனால், எம்.எல்.ஏ ஆக இருந்த அன்பழகன் அண்ணன் அந்த மாதிரியான பந்தாக்களை நான் பார்த்ததில்லை. ரொம்பவே எளிமையானவர். அவருடைய பழக்கடையும் அப்படித்தான். பார்க்கத்தான் எளிமையாக இருக்கும். ஜூஸ் அவ்வளவு தரமாக இருக்கும். அந்த இடத்தில் அவ்வளவு தரம் தேவையில்லை. சுமாராக இருந்தாலே நல்ல வியாபாரம்தான்.

உழைக்கும் மக்களே அதிகம் மக்கள் நலனை நாடுகின்றனர். அதைப் பலமுறை உணர்ந்தவனாகவே அவரைப் பற்றி இங்கு எழுதுகிறேன்.

அவருடைய இழப்பு வியாபாரிகளுக்கு பேரிழப்பு.

தி நகர்
தி நகர்

பெரிய கடைகள்:

சில வருடங்களுக்கு முன்னால் சென்னை சில்க்ஸ் தீப்பிடித்தது நாம் அறிந்ததே. அப்போது பிளாட்பாரத்தில் கடை போட்டவர்களாலும் வியாபாரம் செய்ய முடியவில்லை. அந்நேரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு அவர்கள் செய்த உதவியை என்றும் மறக்க மாட்டோம். ``அந்தக் கடைக்கு இப்படி ஆகிடுச்சே’’ என்றுதான் கவலைப்பட்டோம். அந்தக் கடை இல்லாததால் அந்தப் பகுதியில் மக்கள் கூட்டமும் குறைந்தது. டைம் பாஸ் கஸ்டமர் அதிகமாக ஆகிவிட்டார்கள். வியாபாரிகள் அதிருப்தியிலேயே இருந்தோம். ``இனிமேல் அவ்ளதான்’’ என்று நினைத்தோம்.

``பாகுபலி எப்போ வருவார்’’ என்று தேவசேனா காத்திருந்தது போல சென்னை சில்க்ஸுக்காக காத்துக்கொண்டிருந்தோம். அந்த நாளும் வந்தது. Rebirth.. கூட்டம் கூட ஆரம்பித்தது. முதல் ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் அமோகம். கடை திறப்புக்காக ஸ்பீக்கரில் பாட்டு போட்டார்கள். அன்று இரவு விஷ்வரூபம் பாட்டு ஒலித்தது.

தி நகர்
தி நகர்
பெரிய மரத்தின் அடியில் வளரும் செடி போலத்தான் எங்க வாழ்க்கை.
சுபி தாஸ் - தி.நகர் நடைப்பாதை வியாபாரி

``எவனென்று நினைத்தாய் எதைக்கண்டு சிரித்தாய்.” looping mode. எதிர்பார்த்த நாள்... எதிர்பாராத காட்சிகள்... வெறித்தனம் ஓவர்லொடட்... எங்கள் பக்கமும் AC காத்து வீச ஆரம்பித்தது.

பெரிய மரத்தின் அடியில் வளரும் செடி போலத்தான் எங்கள் வாழ்க்கை. ஆனால், இப்போ சின்ன கடைகள் திறந்தாலும் பெரிய கடைக்கு அனுமதி இல்லை. ஒரு வகையில் எங்களுக்கும் இழப்பு தான். பெரிய கடைகள் திறக்கும் வரை.

தி நகர்
தி நகர்

உயிர் பிழைத்தல்..

தி.நகர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டது. வெள்ளம்... புயல்... இப்போது கொரோனா. ஆனால், எல்லா நேரத்திலும் ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலே உள்ள படத்தில் விளக்குகளின் ஒளி போல.

``படிச்சவனுக்கு ஐ.டி கம்பெனி. படிக்காதவனுக்கு நைடி கம்பெனி’’ என்று சந்தானம் ஒரு படத்தில் சொல்லுவார். நான் B. SC computer science படித்துவிட்டு ஐ. டி-க்கு போகாமல் வியாபாரத்துக்கு வந்துவிட்டேன். ஐ.டி-யில் சேர்ந்தவுடன் மாதம் 8,000... 2 வருடத்துக்கு ட்ரைனிங். ஆனால் எனக்கு வீட்டுக்கடன் மட்டுமே மாதம் 15,000.

ஒன்று மட்டும் சொல்லுவேன். நான் தி.நகர் வரும் முன் ஒரு மொபைல் ஷோரூமில் வேலை பார்த்தேன். AC ரூம்... white collar வேலை. ஒரு பிரச்னையும் இல்லை. Tempered glass போடுவது.

அங்கேயே இருந்திருந்தால்... தூசி படாமல் bubble வராமல் கிளாஸ் ஒட்டியிருப்பேன். தி. நகரில் தூசி பட்டாலும் bubble வராமல் எப்படி கிளாஸ் ஒட்டுவது என்று கற்றுக்கொண்டேன். அதான் உயிர்பிழைத்தல்.. உவமையாக சொன்னேன் பாஸ்.

அன்றாடங்காய்ச்சிகளின் அடிப்படை தகுதியே அதுதான்.

சுபி தாஸ்
சுபி தாஸ்

இழப்பதற்கு ஒன்றுமில்லை...

தினமும் கடை எடுத்து வைக்கும்போது ஸ்கூல் விட்ட மாதிரி உற்சாகம் இருக்கும். வியாபாரம் இருந்தாலும். இல்லாமல் போனாலும். வியாபாரம் இருந்தால். இருக்கும் வரை... இல்லையா நடையைக் கட்டிவிடுவோம். சீக்கரம் போய் ரெஸ்ட் எடுத்துவிட்டு அடுத்த நாள் விட்டதைப் பிடிக்க கெளம்பிடுவோம். அதுதான் நாளை நாளை என்று இன்னும் எத்தனை நாளை ஆனாலும் சேமிப்பு குறைந்தாலும் உற்சாகம் குறைய விடுவதில்லை என்று நினைக்கிறேன்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்..! இப்படி இயற்கை, விவசாயிகளுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை. வியாபாரிகளுக்கும்தான். நன்றி. வணக்கம்!

- சுபி தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு