Published:Updated:

கே.பி.ஜானகி அம்மாள்- பழங்குடிகளுக்காகப் போராடிய 'ஜெய் பீம்' பெண்மணி! | The Legend

கே.பி.ஜானகி அம்மாள்
News
கே.பி.ஜானகி அம்மாள்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட முதல் தென்னிந்திய பெண்மணி இவர்தான்.

இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை வலுக்கட்டாயமாக யுத்தத்தில் ஈடுபடுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். இதை எதிர்த்து போர் எதிர்ப்பு கூட்டங்கள் பலவற்றை நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சி. அதில் பேசிய ஜானகி அம்மாள் " நாங்கள் அடிமைப்பட்டு கிடைப்பதால் தானே எங்களை போரில் ஈடுபடுத்துகிறீர்கள்" என்றார். இதனால் இராஜதுரோக சட்டம் என்றழைக்கப்படும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார் ஜானகி அம்மாள். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் தென்னிந்திய பெண்மணி இவர்தான்.

இதுதவிர ஜானகி அம்மாள் பங்குபெற்ற மிகமுக்கிய இரண்டு போராட்டங்கள் உண்டு. மதுரைக்கு அருகே துவரிமான் என்ற கிராமத்தில் பண்ணையார்களால் மிகுந்த கொடுமைகளுக்கு உள்ளாகிவந்தனர் விவசாயத் தொழிலாளர்கள். அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நிலத்தைக் கைப்பற்றும் போராட்டதில் கலந்துகொண்டார் ஜானகி அம்மாள். அப்போது துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய போலீசாரை பார்த்து என்னை சூடு என்று துணிச்சலுடன் முன்னேறினார். மதுரையில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ஹார்வி மில்லின் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடியது இவர் கலந்துக்கொண்ட மற்றொரு முக்கியப் போராட்டம்.

சிறுவயதிலேயே நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தது, சுதந்திர போராட்டத்திற்காக சுமார் 200 பவுன் நகைகளை விற்று செலவுசெய்தது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடங்கப்பட்ட போது தமிழ்நாட்டின் முதல் தலைவராக பணி செய்தது என தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சமூகப்பணிக்காக அர்ப்பணித்த ஜானகி அம்மாளை பற்றி முழுமையாக அறிய முழு வீடியோ இதோ