Published:Updated:

குன்றக்குடி அடிகளார் : காவி உடையில் ஒரு கம்யூனிஸ்ட் | The Legend

குன்றக்குடி அடிகளார்
News
குன்றக்குடி அடிகளார்

செம்மலர் என்னும் பெயரில் கம்யூனிச இதழ் தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆயுள் சந்தாதாரர் குன்றக்குடி அடிகளாரே.

பெரியாரின் இறை மறுப்பு பிரசாரத்திற்த் தொடக்கத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிப்பவராக இருந்தவர் குன்றக்குடி அடிகளார். பெரியார் எங்கெல்லாம் சென்று பிரசாரம் மேற்கொண்டாரோ அங்கெல்லாம் அடிகளாரும் சென்று அவரின் கருத்துக்களுக்கு எதிரானவற்றைக் கூறி வந்தார். மதத் தலைவர்கள் பலரையும் ஒன்றிணைத்து தெய்வீக தமிழ் பேரவை என்ற பெயரில் இறை மறுப்பு பிரசாரத்துக்கு எதிராக இயங்கி வந்தார். இவ்வாறு பெரியாருடன் தொடக்க காலத்தில் இருந்தே கருத்து ரீதியான மோதல் போக்கினைக் கடைபிடித்தார் குன்றக்குடி அடிகளார்.

இப்படி இருக்கையில் 1955-ம் ஆண்டு பெரியாரைச் சந்திக்கும் சூழல் அடிகளாருக்கு ஏற்படுகிறது. ஓர் வீட்டின் மாடியில் அடிகளார் காத்திருக்க அவரை சந்திக்க படியேறி வந்தார் பெரியார். தன்னைவிட சுமார் 50 வயது மூத்தவரான பெரியார் தன்னிடம் பேசிய விதம் அவரை மிகவும் கவர்ந்தது. பின்னர் பெரியாரின் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் பொறுமையாக கேட்ட அவர் பெரியாரின் மிகப்பெரிய பற்றாளராக மாறினார். அதுமட்டுமல்லாமல் கம்யூனிச கருத்துக்கள் மீதும் பற்றுக்கொண்டிருந்தார். செம்மலர் என்னும் பெயரில் கம்யூனிச இதழ் தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆயுள் சந்தாதாரர் குன்றக்குடி அடிகளாரே.

கடவுள், மதம் ஆகியற்றெல்லாம் தாண்டி தமிழ்பற்று, சமூக சீர்திருத்தம், மத நல்லிணக்கம், சாதி மறுப்பு, மனித நேயம் போன்ற பல்வேறு தளங்களிலும் இயங்கி வந்த மடாதிபதி குன்றக்குடி அடிகளாரை பற்றி முழுமையாக அறிய கீழுள்ள வீடியோவை காணுங்கள்.