Published:Updated:

`ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்!' -லாக்டெளன் ஸ்ட்ரெஸில் இருந்து மீள்வோமா? #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இல்லத்தரசிகளும், வீட்டில் இருந்து பணிபுரியும் (WORK FROM HOME ) பெண்களும் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

முதல்கட்ட ஊரடங்கு நம்மில் பலருக்கும் புதுமையான மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்பதே உண்மை. ஒரு பக்கம் கொரோனா பற்றிய ஊடகச் செய்திகள் பீதியைக் கிளப்பிக்கொண்டிருந்தாலும், `நம்ம ஊருக்கெல்லாம் கொரோனா வராது’ என்ற அற்ப தைரியத்தில், பல்லாங்குழி, பரமபதத்தில் ஆரம்பித்து அனைத்து விளையாட்டுகளையும் ஆடிப் பார்த்துவிட்டோம்.

Representational Image
Representational Image
Pixabay

நமது பாரம்பர்ய உணவு வகைகளில் ஆரம்பித்து Dalgona Coffee வரை சமைத்துப் பழகினோம். சமைத்ததை வாய்க்குப் பகிர்ந்தோமோ இல்லையோ Facebook , Instagram மற்றும் வாட்ஸப்பில் பகிர்ந்தோம். இவை ஒருபுறம் இருக்க, சிறு வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை Tiktok அலப்பறைகள் வேறு. சீன அரசியல் காரணமா அல்லது இந்த அலப்பறைகள் காரணமோ.. அதற்கும் ஆப்பு வைத்தது அரசு.

அலட்சியத்துடன் நாள்களைக் கடந்துகொண்டிருந்த நமக்கு கொரோனாவின் தீவிரம் புரிய ஆரம்பிக்கையில் மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கத் தொடங்கிவிட்டது. ஊரடங்குக் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்படுதல், மீண்டும் தீவிரப்படுத்தல், மீண்டும் தீவிரமான தளர்வு, தளர்வான தீவிரம் என யூகிக்க முடியாத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தருணங்களில், உளவியல் கண்ணோட்டத்தில் மன அழுத்தம், பதற்றம், கவலை போன்றவற்றால் பாதிக்கப்படாத ஒரே ஒரு மனிதரைக்கூட இனிமேல் பார்க்க முடியாமல் போகும் நிலை.

Representational Image
Representational Image
Pixabay

இந்த மன அழுத்தத்தின் பாதிப்பும் பாதிப்பின் தீவிரமும் மாறுபடுகிறது. இல்லத்தரசிகளும் மற்றும் வீட்டில் இருந்து பணிபுரியும் (WORK FROM HOME ) பெண்களும் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

ஆண்களைப் பொறுத்தவரை WFH என்றால் Work From Home மட்டும்தான். பெண்களைப் பொறுத்தவரை WFH என்பது மூன்று விதமாக இருக்கிறது. Work From Home, Work For Home & Work For Husband.

கணவரை அலுவலகத்துக்கும், குழந்தைகளைப் பள்ளிக்கும் அனுப்பி விட்டு அவர்கள் வீடு திரும்பும் முன் வீட்டுக் கடமைகளை முடித்து, கிடைக்கும் சிறிது நேரத்தில் ஓய்வெடுக்கும் இயல்பு வாழ்க்கை முறை முடங்கி சில மாதங்கள் ஆகின்றன. கல்விக்கூடங்கள் திறக்கப்படும் நாள் தெரியாமல், பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

Representational Image
Representational Image
Pixabay

வீட்டுச் சூழ்நிலையில் நைட் ஷிஃப்ட், டே ஷிஃப்ட் என மாறி மாறி அலுவலகப் பணி செய்வதும், இணைய வழியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது என்பதும் பெரிய சவாலாகவே உள்ளது, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு. இவர்களை எல்லாம்விட, கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பற்றிய பயம், ஒரு பக்கம் வயிற்றில் வளரும் குழந்தையின் நலம் குறித்த கவலைகள் ஒரு பக்கம் என்று அவர்களின் மகிழ்ச்சி முழுமையாக முடங்கியுள்ளது.

கொரோனா பிரிவில் பணிபுரியும் சில செவிலியர்கள் கொரோனா குறித்தே எல்லாவற்றையும் பார்ப்பதால், Adjustment Disorder என்னும் மனநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

JAMA எனப்படும் ஆய்வு இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையில், உலகளவில் பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள், மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகிய உளவியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது.

Representational Image
Representational Image
Pixabay

கோவிட்-19 போன்ற உலகளாவிய பிரச்னைகள் நம்மிடமிருந்து மோசமானவற்றையோ சிறப்பானவற்றையோ வெளிக்கொண்டு வர மிக முக்கிய காரணியாக விளங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆகவே, இன்னபிற கேளிக்கைகளில் இருந்து சற்றே விடுபட்டு, குடும்பத்தோடு ஒன்றிணைந்து, நம்மை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கும் நமது பிள்ளைகளுக்கும் காலம் மற்றும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப உடல்ரீதியாகவும் மனரீதியாகவும், நம்மை தயார் செய்து கொள்ள நம்பிக்கை விதைகளை விதைப்போமா... உணர்ச்சிரீதியான இப்போராட்டத்தை வெல்வோமா... இக்காலத்தின் ஓலங்கள் பூமிப்பந்தின் ஒவ்வொரு துருவத்திலும் ஓங்கி ஒலிக்க மீண்டு வருவோமா என்று பல கேள்விகள் நம்முன் எழுகின்றன.

கொரோனா: `சென்னை, மும்பையைவிட அதிகம்!’ - திணறும் பெங்களூரு; அச்சத்தில் மக்கள்!

ஆனால், மனிதகுல வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் இப்படியான பல்வேறு இடர்களை வென்று மீண்ட தடம்தான் வரலாற்றின் பக்கங்களில் இருக்கிறது. கொரோனாவும் நாளை அப்படி நாம் கடந்த ஒரு தடயமாகத்தான் இருக்கும். ஆனால், அது தந்த சோதனைகளும் அதைக் கடந்த நம் சாதனைகளும் நம் எல்லார் மனதிலும் நிலைத்து நிற்கும் என்பது மட்டும் உண்மை.

- நித்யா இறையன்பு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு