Published:Updated:

`எதார்த்தம்..!' - 10 செகண்ட் லாக்டெளன் 4.0 கதைகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

லாக்டெளன் 4.0-வின் எதார்த்தங்களை உணர்த்தும் ஒரு வரிக் கதைகள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

# 01. இறுதி யாத்திரை:

நடந்தே புலம்பெயர்பவரின் நைந்துபோன செருப்பின் மீது இறுதி ஊர்வலத்தில் வீசப்பட்ட பிய்ந்துபோன பூவொன்று விழுந்தது.

Representational Image
Representational Image

# 02. ஜனநாயகம்:

வழிபாட்டுத் தலத்தின் பூட்டைப் பார்த்து மந்தகாசப் புன்னகை சிந்தியது மதுக்கடைப் பூட்டு.

# 03. உழைப்பாளி:

எட்டு மணி நேர வேலையை எதிர்நோக்கி ஆவலாய் செய்திகளைப் பார்த்தது மின்விசிறி.

Representational Image
Representational Image

# 04. விடுமுறை:

தன் வாழ்வைத் தொலைத்த மனிதனாய் வாரம் ஒருமுறை வந்து வந்து போகிறது ஞாயிறு.

#05. சுத்தம்:

கடைக்கு வருவோர் எல்லாம் தன்னைக் கை கழுவச்சொல்வதால், கையைக் கழுவுவதா அல்லது கிளாசைக் கழுவுவதா எனும் குழப்பத்தில் ஆழ்ந்தார் டீ மாஸ்டர்.

Representational Image
Representational Image

# 06. இணையாத கல்வி:

அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாத மாணவனிடம் ஆண்ட்ராய்டு போன் வசதி உள்ளதா என்றது புத்தகம்.

# 07. இயல்புநிலை:

ரயில் தண்டவாளத்தின் நடுவில் முளைத்திருந்த பூச்செடியின் இறுதி விருந்தைப் பதற்றத்துடன் ஏற்றது தேனீ.

Representational Image
Representational Image

# 08. பார்சல் உலகு:

மணிக்கணக்கில் அரசியல் பேசிய டீக்கடை பெஞ்சுகள் உலகப் பொருளாதாரம் போல குப்புறக் கிடந்தன.

# 09. கேமரா போன்:

வலதுகை கொடுப்பது இடதுகைக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே தெரிகிறது.

Representational Image
Representational Image

# 10. குடிநோயாளி:

நோயுடன் வாழப் பழகச் சொல்லும் அறிவிப்பைக் கேட்டு சோகமாய் புன்னகைத்தார் நோயாளியுடன் வாழும் மனைவி.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு