Published:Updated:

‘மார்கழி மாற்றம்’ - மாற்றுத்திறனாளிக் கலைஞர்களின் ‘மார்கழித் திருவிழா’!

SciArtsRUs USA
News
SciArtsRUs USA

உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி நிகழ்த்துக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்த நிகழ்வு, களம் அமைத்துக் கொடுக்கிறது.

மாற்றுத்திறனாளி கலைஞர்களுக்கான ‘மார்கழி மாற்றம்’ திருவிழா, டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் மயிலாப்பூர் தக்‌ஷிணாமூர்த்தி அரங்கில் நடைபெறவிருக்கிறது.

Artablities 4 All
Artablities 4 All

அமெரிக்காவில் செயல்பட்டுவருகிறது ‘SciArtsRUs USA' அமைப்பு. இந்த அமைப்பு ‘Artablities 4 All' என்ற முன்னெடுப்பின் மூலமாக, ‘மார்கழி மாற்றம்’ என்ற நிகழ்வை ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி நிகழ்த்துக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்த நிகழ்வு, களம் அமைத்துக் கொடுக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
லாஸ் ஏஞ்சலீஸில் வசிக்கும் SciArtsRUs-ன் நிறுவனர் டாக்டர் ரஞ்சனி கௌசிக், இந்த நிகழ்வுகளுக்காக சென்னை வந்திருக்கிறார். இந்த முன்னெடுப்பு குறித்துப் பேசிய அவர், “காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகள் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற செய்தியை உலகளவில் கொண்டுசெல்ல விரும்புகிறோம். மார்கழி நிகழ்வுகளின்போது, இதுபோன்ற எல்லோரையும் உள்ளடக்கிய நிகழ்வுகள் அரிதாகவே இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி கலைஞர்களை உள்ளடக்கிய கச்சேரிகளை உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டு கலைகளை உண்மையாக அணுகக்கூடியதாக மாற்ற விரும்புகிறோம்,” என்றார்.
ரஞ்சனி கௌசிக்
ரஞ்சனி கௌசிக்

டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் மயிலாப்பூர் தக்‌ஷிணாமூர்த்தி அரங்கில் ‘மார்கழி மாற்றம்’ நடைபெறவிருக்கிறது. இதைத் தொடர்ந்து SciArtsRUs-ன் யூடியூப் சேனல் வழியாக இணையவழி நிகழ்வுகள் டிசம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“Wings Unlimited” என்ற தலைப்பில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிகழ்வில், இந்தியாவிலிருந்து 40 கலைஞர்கள் உள்பட, உலகம் முழுவதும் இருந்து 70-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிருக்கின்றனர்.

மேலும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும், வளர்ந்துவரும் மாற்றுத்திறனாளி கலைஞர்கள், விழித்திறன் சவால் கொண்ட ஸ்ரீரங்கம், மதுரையைச் சேர்ந்த பாடகர்கள், பெங்களூருவிலிருந்து 6 பரதநாட்டியக் கலைஞர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.