Published:Updated:

`பறவைகளுக்கு பாஸ்போர்ட் இல்லை!' -பால்கனி ஞானோதயம் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

சாப்பாடு கிடைக்கும் இடமல்ல இது. வீடு கட்ட இடம் சரிப்படுமா என்று பார்க்கிறது போலும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

ஹாலுக்கும் பால்கனிக்கும் இடையே முழு உயர கண்ணாடிச் சுவர். நேற்று மாலை டீ குடித்துக்கொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறேன். குருவி போல ஆனால் கொஞ்சம் பெரிதான ஒரு பறவை வந்து பால்கனி railings-ல் உட்காருகிறது. என்ன பறவை என்று தெரியவில்லை. கவனித்தேன்.

இந்த பால்கனி, மாடியின் கூரை வரையானது. எனவே, ஒரு இருபது அடி உயரம். கட்டடம் வெளிப்புறம் தட்டையாக இல்லாமல் மடங்கி மடங்கி கட்டப்பட்ட டிசைன். அழகாக தலையை திருப்பி திருப்பி மொத்த இடத்தையும், மேலே வரை நோட்டமிடுகிறது.

Representational Image
Representational Image
Pixabay

கொஞ்சம் தாவி இன்னொரு இடத்திலிருந்து பழையபடி அதே நோட்டம். சாப்பாடு கிடைக்கும் இடமல்ல இது. வீடு கட்ட இடம் சரிப்படுமா என்று பார்க்கிறது போலும். அடுத்த சில நொடிகளில் பல நினைவுகளும் சிந்தனைகளும் எனக்கு.

``எங்க வீட்டுக்குள்ள வந்து கூடு கட்டு"...

``பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை, கண்டங்களைத் தாண்டி பறந்து விடும்"

என்று எழுதத் தோன்றிய மனதின் சிந்தனைப்போக்கு, வாழ்க்கையைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, இருபது வருடங்கள் முன் அகஸ்டினிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தபோது அவன் சொன்ன, ``பைபிளில் அதான் சொல்லியிருக்கு, அந்தப் பறவையைப் போல் இரு, அது விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை."

6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆஸ்டெரியோனிஸ் பறவை எப்படியிருக்கும்? - மண்டை ஓடு, எலும்புகள் கண்டுபிடிப்பு!

அதுவே வீடு கட்டிக் கொள்கிறது. அதுவும் தனக்கென்று வீடு தேவையில்லை, முட்டையைப் பாதுகாத்து குஞ்சை வளர்த்து தன் இனத் தொடர்ச்சியை உறுதி செய்யத்தான். கொஞ்ச நாள்கள் கழித்து இந்த அம்மா யாரோ, அந்தக் குட்டிப் பறவைகள் யாரோ, மீண்டும் இன்னொரு பால்கனி - இன்னொரு புது கூடு - புதிய குஞ்சுகள்.. திரும்பத் திரும்ப ...(எத்தனை வீடுகள் வேணும்னாலும் தானே கட்டிக்குதே! நம்மால்..?)

Representational Image
Representational Image
Pixabay

இருபத்தைந்து வருடங்கள் முன் சங்கர நாராயணன் சொன்னதும் ஞாபகம் வந்தது, "leading a married life and bringing new lives to this world is all our duty to the society”. அவர் இதைச் சொன்னதும் நான் அப்படி நகைத்திருக்கிறேன். அது என்ன அப்படி ஒரு கடமை என்று இன்னமும் புரியவே இல்லை. ஆனால், அந்தக் கடமை ஒரு பக்கமாக நடந்துகொண்டிருக்கிறது.

-மணிசங்கர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு