Published:Updated:

சின்ன உலகம்..! - மைக்ரோ கதை #MyVikatan

Representational image
Representational image ( Pixabay )

கோபத்தில் அவனிடம் இருந்து வெளிவரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எரிகற்களாய் வந்து விழும். அந்த எரிகற்களால்தான் மனைவி ராதிகாவை காயப்படுத்திவிட்டான்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அது நூற்றுக்கு நூறு செந்திலுக்கு பொருந்தும் என்றே சொல்லலாம்.

ஆம், அவன் மனைவி ராதிகாவுக்கு கணவன் செந்தில், அஸ்வின், அஸ்வந்த் இந்த 2 பிள்ளைகள் மற்றும் அவர்கள் இருக்கும் வீடு. இதுதான் அவளுக்கு உலகம்.

அப்படிப்பட்டவளை செந்தில் இன்று காயப்படுத்திவிட்டான்.

பசங்க இருவரும் பள்ளிக்குச் சென்ற உடன் இவர்கள் இருவருக்கும் பேச்சு வாக்கில் சண்டை வந்தது.

Representational image
Representational image
Pixabay

கோபத்தில் அவனிடம் இருந்து வெளிவரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எரிகற்கலாய் வந்து விழும்.

அந்த எரிக்கற்களால்தான் மனைவி ராதிகாவை காயப்படுத்தி விட்டான்.

திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்தச் சண்டை அவளுக்குப் புதிதல்ல.

8 ஆண்டுகளாய் விழுந்துகொண்டிருக்கும் எரிகற்கள் எல்லாம் அவள் மனதை வெந்தவைத்துள்ளது.

யாரும் அற்ற ஒரு இடத்தில் இப்போது ராதிகா நின்று கொண்டிருந்தாள். சண்டையை நினைத்து தன் மனதை அங்கே பறந்தும், கூவிக்கொண்டும் இருக்கும் பறவைகளைப் பார்த்தும்,

சுற்றி அந்தப் பசுமை வெளியில் வீசும் இதமான காற்றை ரசித்தவாறும் தன் காயம்பட்ட மனதை இவற்றின் மூலம் இலகுவாக்கிக் கொண்டிருந்தாள்.

ராதிகாவின் செல்போனுக்கு தொடர்ந்து கணவன் செந்திலின் கால் வந்து கொண்டிருந்தது.

ராதிகா பறவைகளைப் பார்த்து புத்துணச்சி பெற்றுக் கொண்டிருந்தாள்.

இப்படித்தான் ராதிகா ஒவ்வொரு முறையும் தனக்குள் வரும் கோபத்தை, மனஅழுத்தத்தை இயற்கையைப் பார்த்து தனித்து கொள்வாள்.

செந்தில் வீட்டில் கால் பண்ணியபடி இருக்க, வீட்டு வாசலில் இருந்து தேங்காய் விற்கும் பெரியவர் ஒருவர், "அம்மா... அம்மா தேங்காய் கொண்டு வந்திருக்கேன்" என்று அழைக்க.

"செந்தில் வேண்டாங்க" என்றான்.

Representational image
Representational image
Pixabay

அடுத்து ஒரு பெண்மணி "அம்மா... அம்மா கீரை கொண்டு வந்திருக்கேன்" என்று குரல் கொடுக்க,

"வேண்டாங்க" என்றான்.

அடுத்து 21 வயது உள்ள இளைஞன் "அக்கா... அக்கா வெங்காயம், தக்காளி கொண்டு வந்திருக்கேன்" என்று அழைக்க,

"வேணாம்பா" என்று கூறினான்.

அடுத்து ஒரு பெரியவர், "அம்மா... அம்மா நம்ம காட்டுல வெளஞ்ச புடலங்காய்,வெண்டைக்காய் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்" என்று அழைக்க,

"வேணாங்க" என்றான்.

இப்படி அன்றாடம் தெருவில் வரும் இவர்களிடம் எல்லாம் அவ்வளவு சிநேகிதம் ராதிகாவுக்கு.

ராதிகாவைப் பார்க்காமல் ஒருபோதும் இவர்கள் கடந்து போகமாட்டார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லிச் சொல்லி களைத்துப் போனான் செந்தில்.

அடுத்து "அம்மா... அம்மா" என்று வாசலில் ஒரு மாடு அழைத்தது.

அழைத்து கொண்டிருக்கும் இந்த மாட்டிற்கு தினமும் ராதிகா பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு செய்யும் காய்கறி, தக்காளி போன்றவற்றை சேகரித்து சாப்பாட்டில் வடிக்கும் கஞ்சியோடு கொண்டு வந்து ஒரு பாத்திரத்தில் வைப்பாள்.

மாடு அதைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்.

இப்படி மாடு வரை அவளின் சிநேகம்.

Representational image
Representational image
Pixabay

மாட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தான் செந்தில்.

அவனின் மூளை யோசிக்கலானது. இன்று ஒரு பொழுது சாய்வதற்குள் மனைவியை இத்தனை பேர் அழைக்கின்றனரே, ஒருவர் கூட தெருவில் வருபவர்கள் மனைவியை அழைக்காமல் கடந்து போகவில்லையே என்று அவளின் இந்த சிநேகத்தை நினைத்து பூரித்துப் போனான்.

இப்படி ஒரு மனைவியை மனம் என்னும் தங்கத்தட்டில் வைத்து எப்படி நாம் தாங்க வேண்டும்? அதை விட்டுவிட்டு 8 ஆண்டுகளாய் எப்படி நடந்துகொண்டோம் என்று வருந்தினான்.

இவர்களைக் காட்டிலும் நாம் இனி மனைவியிடம் சிநேகம் கொள்ள வேண்டும். ஒரு போதும் மனைவியிடம் கடும் சொற்களை உதிர்க்க கூடாது. இல்லையேல் அந்த மாட்டை விட அறிவு குறைவானவன் என்று உறுதி கொண்டான்.

மேகக் கூட்டங்களை ராதிகா பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் தன் கணவன், 2 பிள்ளைகள் மற்றும் வீட்டின் உருவம் தெரிந்தது அந்த உலகத்தைப் பார்த்து மகிழ்ந்து போனாள்.

பள்ளியில் இருந்து குழந்தைகள் வீட்டிற்கு வருவதற்குள், வீட்டில் இருக்க வேண்டும் என்று கிளம்பினாள் ராதிகா.

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு