Published:Updated:

கோயில் புறாக்கள்...! - அனுபவப் பாடம் #MyVikatan

Representational Image
Representational Image

குடும்ப நிகழ்வுகளையும் சந்தோஷங்களையும் பகிர்ந்துக்கொள்ளவும் மனதிற்கு தேவையான ஆறுதலைப் பெறவும் என எங்களுக்கு எல்லாமும் அந்த கோபுரமும் புறாக்களும்தான்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மிகவும் ‌கம்பீரமான எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் சதுரவீதிகளையும்... கோயிலுக்குள் ஆடி வீதி என்றும் அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணிவீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என அழகான வடிவமைப்புடன் கூடியது....

நானும் என்னவளும் அக்கோயிலின் தெப்பக்குள படிக்கட்டுகளில் உட்கார்ந்து எதிரே தெரியும் கோபுரத்தையும் அதன் மீதுள்ள மின்விளக்கையும் அதில் அமர்ந்திருக்கும் இரண்டு புறாக்களையும் பலநாட்களாய் பார்த்து வருவதில் அவற்றுடன் நெருங்கிய நட்பு இருந்தது...

``அந்த கோபுரத்திற்கு மின்விளக்கு அமைக்க உங்க அப்பாதான் ஏறினார் மற்றோர் பயந்து ஏறாதபோது..'' என என் அம்மா, அவரது அம்மா எப்போதும் சொல்வார்கள் என சொல்ல கேட்டுகேட்டு அந்த கோபுரம் எங்களது தாத்தா பாட்டியாகவே மாறியிருந்தது....

Representational Image
Representational Image
Ashithosh U from Pexels

அந்த இரண்டு புறாக்களையும் எங்களது தாத்தா பாட்டியாகவே பாவிப்போம். குடும்ப நிகழ்வுகளையும் சந்தோசங்களையும் பகிர்ந்துகொள்ளவும் மனதிற்கு தேவையான ஆறுதலை பெறவும் என எங்களுக்கு எல்லாமும் அந்த கோபுரமும் புறாக்களும்தான்..

சாமியை பார்க்க முடியாமல் போனால் கூட கவலைபட்டதில்லை அந்த புறாக்களை பார்க்காவிட்டால் ஏதோ போல இருக்கும்....

இன்று நல்லவேளை பார்த்துவிட்டோம்... ஒரு அப்பமும் வடையும் வாங்கி வந்தேன்... ஆம் அவர்களோடு சேர்ந்து உண்பது எங்களது வழக்கம்....

மெதுவாக சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தேன்....தாத்தா இன்னைக்கு இவளோட பிறந்தநாள் .. முதல்ல வாழ்த்துங்க அப்புறமா மத்தத சொல்றேன்... இரண்டு புறாக்களும் ஒரு சேர பறந்து பின் மீண்டும் *அமர்ந்தனர்*...

இன்னைக்கு காசு கொஞ்சம் கம்மியா தான் இருக்கு அதுக்காக இவளுக்கு புதுசு எடுத்து குடுக்காம எப்படி இருக்கறது... அதுக்கெல்லாம் திட்றா... ஒன்று மற்றொன்றை தாண்டி மீண்டும் அமர்ந்தனர்.... சரிதான் என்ன செய்ய நமக்கானவங்கன்னு நம்பிட்டேன் .... அதுவும் அளவுக்கதிகமா நம்பிட்டேன் ... தப்பு என்னோடது தான் என்னோட கண்மூடித்தனமான முட்டாள்தனம் நிறைந்த நம்பிக்கை அவங்களோட ஆசைய தூண்டி நம்புனவங்களையே ஏமாத்துற அளவுக்கு செஞ்சுடுச்சு.... ரெம்பவே சிக்கல்தான் இப்ப நிலைமை கஷ்டமாதான் இருக்கு அதுக்காக அவங்கள சபிக்கவா முடியும் என்னருந்தாலும் நம்மவங்கதானே....

நேர்மையா மட்டுமே இருந்து, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழனும்கிற மாதிரி சிறப்பா வாழ்ந்து காட்டுன உங்களோட வழி வந்த எங்கள்ள பலருக்கு அது ஏன் இல்லை... இதுதான் அந்த ஜெனரேசன் கேப்போ... ரத்தத்தில ஊறுன ஒன்னாதானே அது இருந்திருக்கும்... ஜீன்லயும் ஆழமாய் பதிஞ்சிறுக்கனுமே....

Representational Image
Representational Image
Ashithosh U from Pexels

வறுமையிலும் நேர்மை னு கம்பீரமா வாழ்ந்த உங்களை பத்தி சின்ன வயசுலருந்தே கதை கதையாய் கேட்டுதானே வளர்ந்தோம்... யாராயிருந்தாலும் அரவணைக்கும் அன்பான உங்கள் குணம் எங்கள்ள பலருக்கு குறைஞ்சுருச்சே ஏன்... நம்மவங்களுக்கு நாமே பண்ணலன்னா வேற யாரு பண்ணுவாங்க அப்பிடின்னு நினைச்சுதானே பண்ணோம் அது தப்போன்னு நினைக்கும் அளவு மனச காயப்படுத்திக்கிறோமே ....


இருவரும் அசைவின்றி அமர்ந்திருந்தனர்....


"பேயா யுழலுஞ் சிறுமனமே!

பேணா யென்சொல் இன்றுமுதல்

நீயா யொன்றும் நாடாதே

நினது தலைவன் யானேகாண்"

... பாரதியின் வரிகள் மனதினுள் வந்து போயின...


ஒரு காகம் புறாக்களை துரத்தியது .... இரண்டும் மூன்று நான்கு சுத்து சுத்திவிட்டு மீண்டும் அமர்ந்தனர்...


மீண்டும் காகம்.... மீண்டும் சுற்றுகள்.... இப்படி மீண்டும் மீண்டும் சில நிமிடங்கள் காகம் சோர்வுற்றதாய் விலகி பறந்தது... மீண்டும் அமர்ந்து என்னை கூர்ந்து பார்ப்பதாய் உணர்ந்தேன்...


எவ்வளவு பிரச்சினை வந்தாலும் நீ நீயாய் இரு வெற்றி உனக்கே என்றதாய் பட்டது...


மீண்டும் பாரதி.....

"வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது

வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற

சாத்திரங் கேளாயோ?"


இது புரியும் என்றே நினைக்கிறேன்.... அதுசரி நமக்கு நடிகர் கமலின் ட்வீட் கூட புரிவதில்லை... இதுவோ பாரதியுடையது ..... முயலுங்கள் புரியலாம்....

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு