Published:Updated:

`இன்னைக்கு ஆயுத பூஜை இல்லையா..!’ - வாசகரின் பல்ப் வாங்கிய மொமண்ட் #MyVikatan

Representational Image
Representational Image ( Sanket Kumar / Unsplash )

ஒன்றும் புரியாமல் மேலே பார்த்தேன் ஒருவேளை வளையங்கள் சுத்தி பிளாஷ்பேக் ஏதேனும் வருகிறதா என்று பார்த்தேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கண் விழிக்கும்போதே காதில் விழுந்த அந்தப் பக்தி பாடலும் சாம்பிராணி வாசமும் புகை மூட்டமும் ஆயுத பூஜை இன்று என்பதை ஞாபகப்படுத்தியது...

மணியைப் பார்த்தேன் ஆறரை அவசரமாக எழுந்து குளிப்பது வரை முடித்துவிட்டு வெளியே வந்தேன்.

சமையலறையில் பிரசாதம் ஏதோ தயாராகிக்கொண்டிருந்தது... ஊற்றப்பட்ட நெய்யின் முறுகும் மணம் அதில் வறுபடும் முந்திரிப் பருப்பு... பசியைத் தூண்டியிருந்தது.

Representational Image
Representational Image
Gaelle Marcel / Unsplash

காலை வணக்கம் என்ற என்னை அசிரத்தையாகவே பார்த்த என்னவளின் கண்களில் காதலைக் காணோம்... குளித்தும் விட்டேன் வேட்டி கட்டி திருநீற்று பட்டையுடன் பக்தி பழமாய் இருக்கும் இந்த முகத்தைப் பார்த்தும் ஏனிந்த நிலை.

ஒன்றும் புரியாமல் மேலே பார்த்தேன் ஒருவேளை வளையங்கள் சுத்தி பிளாஷ்பேக் ஏதேனும் வருகிறதா என்று பார்த்தேன்.

`அங்க என்ன லுக்கு எல்லாம் நானே பண்ணியாச்சு... கட்டாயம் பண்ணிடறேன் நிச்சயம் பண்ணிடறேன்னு சொல்லிட்டு ஒட்டடையும் அடிக்கல, ஒதுங்க வைச்சும் தரல. மத்தியானம் சாப்பிட்டு மல்லாக்கப் படுத்து தூங்கிக்கிட்டு, அங்கிட்டுப் போங்க வழியை மறைச்சுக்கிட்டு..!’

ஓகோ இதுதான் காரணமோ...

ஆனால், இது ஒண்ணும் புதுசு இல்லயே நாம மறக்கறது வழக்கம்தானே... இது எப்பவும் பண்றதுதானே அதுக்கா இவ்வளவு ரியாக்ஷன். வாய்ப்பில்லையே...

Representational Image
Representational Image
Pixabay

ஆயுதபூஜையில் ஆயுதங்கள் இருக்குமே அந்தத் தைரியத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடமே கேட்டுவிட்டேன்...

என்னை ஏறயிறங்கப் பார்த்துவிட்டு,

``மத்தியானம் தூங்கி எந்திருச்சுட்டு எதுக்கு இந்த வேட்டியும் பட்டையும்..? அதுவும் நாளைக்கு ஆயதபூஜைக்கு வச்சிருந்த புதுவேட்டியக் கட்டிக்கிட்டு என்னாச்சுனு கேள்வி வேற... ’’

``என்னது ஆயுதபூஜை நாளைக்குத்தானா...’’

நவரசங்களையும் காட்டி நவராத்திரியை சிறப்பித்து ஓடினேன்..!

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு