Published:Updated:

``உங்கள் அதிகாரிகிட்ட பொய் சொல்லலாமா..?’’ - மேலாண்மையியல் குட்டி ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இன்றைய நிர்வாகங்களின் அரிச்சுவடி என்று கூறக்கூடிய வகையிலான இரண்டு மேலாண்மையியல் நீதிக்கதைகள் இதோ...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கதை: 1

ஒரு தவளையும், இரண்டு வாத்துக்களும் நண்பர்களாக இருந்தன. தவளை இருந்த குளத்தில் நீர் குறைந்துகொண்டே செல்வதால், அது வேறு குளத்துக்குச் செல்ல விரும்பியது.

வெகுதூரத்தில் இருக்கும் ஒரு சிறந்த குளத்தை வாத்துகள் கண்டறிந்து வந்து தவளையிடம் கூறின. ஆனால், அவ்வளவு தூரம் தவளையால் பயணம் செய்ய முடியாது என்பதால், தவளை பயணிக்க மாற்று யோசனை தேவைப்பட்டது.

பலகட்ட யோசனைகளுக்குப் பிறகு இறுதியாக ஒரு தீர்வை அவை கண்டறிந்தன. ஒரு குச்சியின் இரு முனைகளை வாத்துகள் பிடித்துக்கொள்ள, குச்சியின் மத்தியில் தவளை தன் வாயில் கவ்விக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

Representational Image
Representational Image
Pixabay

குச்சியைக் கவ்வியவாறு வாத்துகள் இரண்டும் பறக்கத் தொடங்கின. குச்சியைக் கவ்வியிருந்த தவளையும் அவற்றுடன் மகிழ்ச்சியாகப் பறந்தது. சிறிது தூரம் சென்றதும் ஒரு கிராமத்து மக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர்.

அப்போது ஒருவர்,`இது அற்புதம்! தவளை பயணிக்க இவ்வளவு சிறந்த வழியைக் கண்டுபிடித்தவர், மிகவும் புத்திசாலியாகத் தான் இருக்க வேண்டும்’ என்றார். அதற்குத் தவளை பெருமிதத்துடன், ``அந்தப் புத்திசாலி நான்தான்" என்றது. அதன் பிடி குச்சியிலிருந்து விடுபட்டது. தவளை பரிதாபமாகக் கீழே விழுந்து இறந்தது!

நீதி: குழுப்பணியில் தனிப்பட்ட பெருமை தேவையற்றது!

`முதல்ல உங்க மேனேஜரைப் பேசவிடுங்க..!' - மேலாண்மையியல் குட்டிக் கதைகள் #MyVikatan

கதை 4:

குழந்தைகள் இல்லாத ஒரு பேரரசி, அவளது இறப்புக்குப் பின் யார் அரசியாவது என்பதைத் தீர்மானிக்க ஒரு போட்டியை நடத்த முடிவு செய்தாள். அவள் தலைநகரத்தில் உள்ள அனைத்து சிறுமிகளையும், தன் அரண்மனைக்கு வரவழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு பூச்செடியின் விதையைக் கொடுத்தாள்.

பிறகு சிறுமிகளை நோக்கி, ``இந்த விதையினை நடவு செய்யுங்கள். இதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். ஒரு வருடத்துக்குப் பின், இதிலிருந்து வளரும் பூவை மீண்டும் கொண்டு வாருங்கள். யார் மிக அழகான பூவைக் கொண்டு வருகிறாரோ அவரே அடுத்த பேரரசி" என்றாள்.

Representational Image
Representational Image
Pixabay

அனைவரும் விதைகளைப் பெற்றுக்கொண்டு சென்றனர். அதை மண்தொட்டியில் இட்டு வளர்க்கத் தொடங்கினர். ஒரு ஏழைச் சிறுமியும், தனது விதைகளைத் தொட்டியில் நட்டு, சூரிய ஒளியில் வைத்தாள். அதற்கு ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சினாள். ஆனால், அவள் விதையிலிருந்து எதுவுமே முளைக்கவில்லை.

அந்த ஆண்டின் இறுதியில் பூக்களை ஆய்வு செய்ய நிர்ணயிக்கப்பட்ட நாள் வந்தது. அவள், தன் பூந்தொட்டியை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்றாள். மற்ற எல்லா குழந்தைகளும் வண்ணமயமான, அழகான பூக்களைக் கொண்டு வந்திருந்தனர். இவள் வெறும் தொட்டியைக் கைகளில் வைத்துக்கொண்டு சோகத்துடன் நின்றாள்.

சிறுமிகளை உற்றுநோக்கிய பேரரசி, காலியான பூந்தொட்டியை வைத்துக்கொண்டிருக்கும் சிறுமியிடம் வேகமாக நடந்து வந்தாள். அவளைப் பார்த்து சிரித்தபடியே.``இவளே அடுத்த பேரரசி!" என்று மகிழ்வுடன் கூறியவள், தொடர்ந்தாள்,

``சிறுமிகளே நான் உங்களுக்குக் கொடுத்த அனைத்து விதைகளும் வேகவைக்கப்பட்டவை. அவை ஒருபோதும் முளைக்காது. ஆனால், நீங்கள் வேறு பொய்யான பூக்களைக் கொண்டு வந்துள்ளீர்கள். இதோ இவள் உண்மையாக நடந்து கொண்டாள். இவள் ஒரு நியாயமான பெண். எனக்குப் பிறகு இவள்தான், இந்த நாட்டின் பேரரசி" என்றாள் மகிழ்வுடன்!

நீதி: உங்கள் அதிகாரியிடம் எப்போதும் உண்மையைச் சொல்லுங்கள். சில சமயங்களில் அது கடினமாக இருந்தாலும் கூட!

Representational Image
Representational Image
Pixabay

ஒரு பணியாளர் தன் வேலையை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வது மட்டும் போதாது. அவற்றை ஏன் செய்கிறார் என்பதையும் அவர் அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறே ஒரு நிர்வாகி, தனது ஊழியர்களிடம் நல்ல பெயரை ஒருபோதும் வாங்க முடியாது! அவர் அதைப் படிப்படியாகவே சம்பாதிக்க வேண்டும்!

எப்போதுமே மூளை கூறுவதை மட்டுமே செயல்படுத்தாமல், அவ்வப்போது ஆழ்மனதின் எண்ணங்களைச் செயல்படுத்தவும் வாய்ப்பு கொடுக்கும் ஒருவரது நிர்வாகம் சிறப்பான ஒன்றாகவே அமையும்!

நிர்வாகத்தில் நாம் ஒவ்வொரு முறை திட்டமிடத் தவறும் போதும், நாம் தோல்வியடையத் திட்டமிடுகிறோம் என்றே பொருள்! ஏனெனில், நல்ல நிர்வாகம் என்பது பிரச்னைகளை சுவாரஸ்யமாக்கும் மற்றும் தீர்வுகளை ஆக்கபூர்வமாக்கும் ஒரு சிறந்த கலை!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு