Published:Updated:

`எதையும் மாற்றும் காதலே!’ -நொடியில் தைரியம் கொடுத்த ரிங்டோன் #MyVikatan

Representational Image
Representational Image ( Ben White on Unsplash )

பெரும்பாலும் ஆழ்மனதில் இன்றும் பாகுபாட்டின் வேர்கள் அழிக்கப்படவும் இல்லை, அகற்றப்படவும் இல்லை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

``என்ன காதலோ.. என்ன எழவோ.. அதெப்படி, முன்பின் தெரியாத ஒருத்தர் மேல இவ்ளோ காதலும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் வருதோ தெரியல? எல்லாம் வயசு செய்யற கோளாறுதான். இப்போ உனக்கு எவ்ளோ சொன்னாலும் புரியப் போறது இல்ல. ஆனா ஒன்னு மிர்த்தி, நம்ம குடும்பத்துக்கு இந்தக் காதல் கல்யாணம் எல்லாம் Set ஆகாது. வேற சாதி, வேற மதம்-ன்னு சொல்ற, கண்டிப்பா நம்ம வீட்டுல ஒத்துக்க மாட்டங்க, ஒழுங்கா இந்தக் காதல் கத்தரிக்காயெல்லாம் மூட்ட கட்டி வச்சுட்டு நம்ம வீட்டுல சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்க. கொஞ்சம் யோசிச்சு பாரு என் மாமியார் வீட்டுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா அவங்க நம்ம குடும்பத்த பத்தி என்ன நினைப்பாங்க?

Representational Image
Representational Image
Ben White on Unsplash

நீ matured ஆன பொண்ணு மிர்த்தி.... உனக்கு திரும்பத் திரும்ப சொல்லணும்னு அவசியம் இருக்காதுன்னு நினைக்கறேன். அம்மாகிட்ட இந்த விஷயத்த எடுத்துட்டு போக வேண்டிய கட்டாயம் வராதுன்னு நம்புறேன், Hope you will understand''

என்று சொல்லி தன் கையிலிருந்த Mobile-ஐ மிர்த்தியிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் மிர்த்தியின் அக்கா சுவாதி.

கையில் Mobile.. கண்களிலோ கலவரம்.. இதயத்தின் படபடப்போ எதிரொலியாய் காதுகளை செவிடாக்கிக் கொண்டிருந்தது. சுவாதி சொன்ன வரிகளை மிர்த்தியின் மனம் அசைபோடத் தொடங்கியது,

``முன்பின் தெரியாத ஒருத்தர் மேல இவ்வளோ காதலும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் எங்கிருந்து வருதோ?"

உலகில் விடை காண முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்று. இந்த நாகரிக உலகத்தில் எல்லோரும் ஒன்றாகத்தான் வளர்கிறோம், படிக்கிறோம், ஒன்றாகத்தான் வேலை பார்க்கிறோம், ஏன் கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றுகிறோம்.

இருப்பினும் கல்யாணம் என்று வரும்போது இன்றைக்கும் ஒருபடி பின்தங்கித்தான் இருக்கிறோமோ என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் வெளிப்படையாக பாகுபாடுகள் பார்க்கப்படவில்லை என்றாலும் பெரும்பாலும் சக மனிதர்களை மனிதர்களாய் பார்க்காமல் சாதி மதம் என்கின்ற மாயத் திரைக்குப் பின்னால் வைத்துப் பார்க்கும் நிலை இன்றும் முற்றிலும் மாறிவிடவில்லை.

Representational Image
Representational Image
Ben Rosett on Unsplash

``இந்த காலத்திலுமா பாகுபாடெல்லாம் பாக்குறாங்க” என்று புருவம் உயர்த்தி வெளிப்படையாய் கேள்விகள் பல கேட்கப்படலாம். ஆனால், பெரும்பாலும் ஆழ்மனதில் இன்றும் பாகுபாட்டின் வேர்கள் அழிக்கப்படவும் இல்லை, அகற்றப்படவும் இல்லை.

படிப்பறிவு பெற்ற சமூகமாய் வளர்ந்திருக்கும் நமக்கோ இன்றும் நினைவிருக்கும் சிறு வயதில் படித்த வரிகள் `சகமனிதர்களிடம் பாகுபாடுகள் பாராட்டல் தவறு, அது ஒரு பாவச் செயல்' என்றெல்லாம்.

முரண்பாடு என்னவென்றால் 5 வயதில் `சாதிகள் இல்லயடி பாப்பா' என்று சொல்லித்தரும் அதே சமூகம்தான் 25 வயதில் நம்ம சமூகத்துக்குள்ளதான் கல்யாணம் பண்ணணும் என்று சொல்லித் தருகிறது. என்ன ஒரு முரண்பட்ட சிந்தனைகள் இவை.

இப்படி சமூகத்தின் முரண்பட்ட முடிச்சுக்குள் மூழ்கிக்கிடந்த மிர்த்தியின் கையிலிருந்த Mobile திடீரென ஒலித்தது, திடுக்கிட்டவளாய்…

Ringtone

``எனை மாற்றும் காதலே...... எனை மாற்றும் காதலே

எதையும் மாற்றும் காதலே

எனை மாற்றும் காதலே

உனை மாற்றும் காதலே

எதையும் மாற்றும் காதலே...."

புத்துணர்ச்சி பெற்றவளாய் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

-ஐஸ்வர்யா சந்திரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு