Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: Matrimony.com ரூ.50 லட்சம் நிதியுதவி!

Matrimony.com நிதியுதவி
Matrimony.com நிதியுதவி

"கொரோனா பேரிடரை எதிர்த்து போராடுவதற்கு உதவும் வகையில் நாங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்." - திரு.முருகவேல் ஜானகிராமன்

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த matrimony.com நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு.முருகவேல் ஜானகிராமன் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா பேரிடரைச் சமாளிக்க ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

"கொரோனா பேரிடரை எதிர்த்து போராடுவதற்கு உதவும் வகையில் நாங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நாங்கள் தற்போது கொடுத்திருக்கும் நிதியும் அதன் அங்கமே!" என திரு.முருகவேல் ஜானகிராமன் தெரிவித்தார்.

மேலும், கொரோனா பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக இந்த நிறுவனம் சார்பாக ரூ.20 லட்சம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கும் ரோட்டரி கிளப் சார்பாக ஒரு மருத்துவமனைக்கு வென்டிலேட்டர்கள் வாங்கவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு கூடுதலாக ரூ.15 லட்சம் வழங்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய திரு.முருகவேல் ஜானகிராமன், "தற்போது, எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் நிதியுதவி அளிக்கவிருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு நிகராக நாங்களும் உதவி செய்யவிருக்கிறோம். இது பேரிடர் காலம் என்பதால், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக நாம் அனைவரும் நம்மால் முடிந்ததை நிச்சயம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்!" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு