Published:Updated:

கொரோனா நிவாரணம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை பங்களிப்பு!

மீனாட்சி மிஷன் மருத்துவமனை

ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் பங்களிப்பு.

கொரோனா நிவாரணம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை பங்களிப்பு!

ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் பங்களிப்பு.

Published:Updated:
மீனாட்சி மிஷன் மருத்துவமனை

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனைகளுள் ஒன்றான மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), தமிழ்நாடு மாநில அரசுக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் என்ற தொகையையும் நன்கொடையாக தந்திருக்கிறது. மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாக அலுவலர் டாக்டர். B. கண்ணன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, நிவாரண நிதிக்கான பங்களிப்பை காசோலையாக வழங்கினார்.

டாக்டர். B. கண்ணன்
டாக்டர். B. கண்ணன்

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். S. குருசங்கர் கூறுகையில், “முதலமைச்சரின் உத்வேகமான தலைமையின் கீழ் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் கோவிட்-19 – ன் பாதிப்பிலிருந்து இம்மாநில மக்களை பாதுகாப்பதற்காக தைரியமான மற்றும் பயனளிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிகிச்சை உட்பட, பல்வேறு வகையான நிவாரணங்களை முழுமூச்சுடன் அது வழங்கி வருகிறது. சவால்மிக்க இந்த காலகட்டத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அரசுடன் இணைந்து உறுதியான ஆதரவை நாங்கள் வழங்கி வருகிறோம்”.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் கூறுகையில், "கோவிட் நோயாளிகளுக்கு அதிக அக்கறையுடனும், கருணை மனப்பான்மையுடனும் வழங்குவதற்கு எங்களால் முடிந்த அளவு சிறப்பான சிகிச்சைப்பணிகளை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்களின் நலன் கருதி மாநில அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். இப்பெருந்தொற்றை கட்டுப்படுத்தி, மிக விரைவில் தமிழ்நாடு வெற்றிவாகை சூடும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism