Published:Updated:

`சின்னஞ்சிறு சைக்கிளும் ஒரு சின்ட்ரெல்லாவும்!' -மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

அம்மாவுக்கும் குழந்தைக்குமான க்யூட் உறவை உணர்த்தும் மைக்ரோ கதை..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தெருவின் கடைசி வீடது. யாருமற்ற வீதியில் தன் கால் எட்டா சைக்கிளில் வலம் வர சின்ட்ரெல்லாவுக்கு ஆசை.

தள்ளும் காற்றின் வேகத்திற்கு எதிராக வினையாற்றத் தெரியாத நிலைமை அவளுக்கு. திருட்டுத்தனமாய் ஓட்டிய நாளில் முட்டிகால் கிழித்து ரத்தம் தெரிந்தது.

அழுதுகொண்டே அம்மாவைத் தேடினாள். எல்லா வலிகளுக்குமான மருந்து அவளிடம் மட்டுமே ஒளிந்து கிடப்பது அவளுக்குத் தெரிந்துவிட்டிருந்தது. வேலை பளுவில் வீட்டிற்கு வந்தவளுக்கு, என் வழியும் ரத்தம் கோபமாய்ப் பீறிட்டது..

``சொல்வதைக் கேட்பதில்லை நீ ...’’

எனத் திட்டித் தீர்த்தாள் மடியில் அமர்த்திக்கொண்டே..

``என் அனுமதியின்றி சைக்கிளை இனி தொடதே’’ என வீட்டோ அதிகாரம் விழுந்தது சைக்கிளின் மீது.... எவரின் ஆலோசனையும் இன்றி!

Representational Image
Representational Image

பிரச்னை முடிந்ததா ..? இல்லை இல்லை .. கால் வளர்ந்தது.. காலம் உருள உருள .. நண்பர்கள் வட்டமும் பெருகியது .. விளையாடிக்கொண்டிருக்கும் போதெல்லாம் அந்தப் பச்சை நிற சைக்கிள் அவளை அழைத்தபடியே இருக்கும் .. மூச்சிரைக்க முதல் மாடிக்கு ஓடி வருவாள்.

குளியலறை கதவினை அடித்து தட்டுவாள். கிச்சனில் பதறி நிற்பாள். போனிடை பேச்சில் இடை புகுவாள்.

``அம்மா நான் சைக்கிள் ஓட்டட்டுமாம்மா...?’’ என்ற கேள்வியோடு.. என்றோ நானிட்ட முன்வரைவில்லா சட்டத்தின், ஒப்புகை சீட்டிற்காய் ஒவ்வொரு நாளும் காத்துக் கிடக்கின்றாள். அவளின் தந்தை, வீதியில் அவளுடன் விளையாடி நின்ற போதும்!

Representational Image
Representational Image

நான் சிலையாகி நிற்கிறேன். குழந்தைமையின் வீதிகளில், அம்மாக்களின் வார்த்தையில் பொதிந்த அன்பின் ஆன்மாக்களை எப்படி இவர்கள் சுவீகரித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைந்து நினைந்து!

இப்போது அருகே உறங்கிக்கொண்டிருக்கிறாள்.. அவளின் துரத்தும் கனவில், எதற்காகவேனும் எனை துணைக்கழைக்கக் கூடும் .... சற்று பொறுங்கள் .... நான் உறங்கிவிட்டு வருகிறேன் ... சில அனுமதி சீட்டுகள் என்னிடம் இருப்பதாய் அவள் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்!

-சித்த மருத்துவர். சித்ரா சுப்பையா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு