Published:Updated:

பூனை தலைவனும் இரவுக்கூட்டமும்! - மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இருட்டில் அது நடந்துவந்தால், அதன் பழுப்புநிற கண்கள் மட்டுமே நமக்குத் தெரியும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அதன் உடல் முழுவதும் கறுப்பு நிறமாக இருந்தது.

அதன் கால்கள் ஒவ்வொன்றும் மிகவும் நேர்த்தியாக இருந்தன.

இருட்டில் அது நடந்துவந்தால், அதன் பழுப்புநிற கண்கள் மட்டுமே நமக்குத் தெரியும்.

நிமிர்ந்து அது நம்மைப் பார்த்தால்,

பத்து 'ஹாரர் ஹாலிவுட்' திரைப் படங்கள் நினைவுக்கு வரும்.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், அதை 'டெரரான' கறுப்புப் பூனை என்று சொல்லலாம்.

பகலில் அடிக்கடி என் கண்களில் தென்படும் அது,

இரவில் ஏனோ அதிகமாகக் காண முடியாது.

எங்கே போகும்?

Representational Image
Representational Image

இன்று எப்படியாவது கண்டுபிடித்திட வேண்டுமென அதைப் பின்தொடர்ந்தேன்.

மெதுவாக நடந்துசென்று,

தெருவின் முகப்புப் பகுதியை அடைந்த அது,

சுற்றுமுற்றும் நோட்டமிட்டபடியே மறைவான இடம் ஒன்றைச் சென்றடைந்தது.

அங்கு, அதற்காகவே காத்திருந்த பல கறுப்புப் பூனைகள் கூடி இருந்தன.

கூட்டத்தின் தலைவனான அது,

மற்ற பூனைகளுக்கு நடுவில் அமர்ந்து ரகசியக் கூட்டத்திற்கு தலைமைதாங்கியது.

'இன்று சாப்பாடு போடாதவர்களின் பெயர்ப் பட்டியலைப் போட்டு,

அவர்களுக்கு எதிரான ஆலோசனைக் கூட்டமாக இருக்கலாம்.

கடந்த ஒருவாரமாகத் தங்களின் பாதையில் குறுக்கே சென்ற மனிதர்களை ஆராய்ந்து,

அவர்களை ஒதுக்கிவைக்கும் படலமாக இருக்கலாம்.

வெள்ளை நிற பூனைகளை மட்டும்,

தூக்கிக் கொஞ்சும் நிறப்பாகுபாடு பார்க்கும் மனிதர்களுக்கான எச்சரிக்கை பொதுக் கூட்டமாக இருக்கலாம்.

அல்லது

நாய்களுடன் மட்டுமே கட்டித் தவழும், இனப்பாகுபாடு பார்க்கும் மனிதர்களுக்கான உண்ணாவிரத போராட்டமாகக்கூட அது இருக்கலாம்.'

Representational Image
Representational Image

எதுவாக இருந்தாலும், அங்கு மனிதர்களுக்கு எதிரான மிகப் பெரிய சதி ஒன்று நடந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

மெல்ல அங்கிருந்து நடையைக் கட்டிய நான்,

அடுத்த நாள் முதல், தினமும் ஒரு லிட்டர் பால் 'எக்ஸ்ட்ரா' ஆர்டர் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

-மருத்துவர். சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு