Published:Updated:

சுதந்திரம் என்றால் என்ன...? - வாசகர் சொல்லும் குட்டி ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

எவையெல்லாம் நம் மகிழ்ச்சியை கட்டுபடுத்த முயல்கின்றதோ அல்லது தடுக்கின்றதோ அதனை விடுத்து வெளியேறுவதையே சுதந்திரம் என்ற உணர்வாய் பார்க்க பழகியிருக்கின்றோம்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சுதந்திரம் என்றால் என்ன......?

எழுபத்து நான்கு ஆண்டுகளாய்...

எத்தனை குழப்பமான கேள்வி இது..

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை தரும் கேள்வி ஆனால் எல்லா பதில்களுமே சரியானது..

எவையெல்லாம் நம் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றதோ அல்லது தடுக்கின்றதோ அதனை விடுத்து வெளியேறுவதையே சுதந்திரம் என்ற உணர்வாய் பார்க்க பழகியிருக்கின்றோம். அது நிரந்தரமான மகிழ்ச்சியா அல்லது தற்காலிகமானதா என்பதை புரிந்து கொள்ள நம் அறிவு உதவுகின்றதா..!!?

Representational Image
Representational Image
Pixabay

’’இன்றைய அசாதாரண அரசியல் சூழலுக்கு ஆளும்கட்சியின் பதவி ஆசைதான் காரணம் ... இல்லை எதிர் கட்சிகளின் செயல்பாடுகளே.. இல்லையில்லை இது மத்திய அரசின் செயல்பாடுகளால்.. இதுவே அந்த மொழிப்பற்றாளர் ஆட்சியிலிருந்திருந்தால் ..... அவர் சாகாமலிருந்திருந்தால்..... இவர் நோயின்றியிருந்திருந்தால்.... அவர் கட்சியை துவக்கியிருந்தால்.... இவர் கட்சியை சரியாய் கவனித்திருந்தால்.... மனைவி மற்றும் மச்சினரின் பேச்சை கேட்காமலிருந்திருந்தால் ....’’

நண்பர்களின் கருத்துக்கள் எரிச்சலையும் தலைவலியையும் தந்தது. வெளியே சென்று டீ குடிக்கலாம் என்று வெளியில் வந்தேன். அவர்களோ அவர்களது உரை வீச்சுகளை நிறுத்துவதாயில்லை...

எண்ணெய் சட்டிக்குள் தத்தளிக்கும் உளுந்து வடை போல எல்லோரையும் சூரியன் வறுத்து கொண்டிருந்தது. அதிலும் குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து வெளியே வரவும் அது சட்டிக்குள் இருந்து அடுப்பிற்குள்ளாகவே குதித்தது போல் இருந்தது...

முதல்நாள் இரவு அவசரமாய் வண்டியை நகர்த்தியபோது இடித்துவிட்ட குட்டைத்தூண் வலது கால் பாதத்தை பதம் பார்த்திருந்தது..

இன்று சற்றே நடையை மாற்றி தத்தித் தாவும் மனம் போல கால்களை கட்டி நடக்க வைக்கப்படும் கழுதையாய் நடந்தேன். கண்ணில் படும் மனிதரெல்லாம் துக்கமாய் விசாரிக்க தூண் பல முறை திட்டு வாங்கியது.

தூணை திட்டுவது குற்றமா.. ஆம் எனில் ஏன் குற்றம்.. மனம் ஆழமாய் யோசிக்க ஆரம்பித்தது...

Representational Image
Representational Image
Pixabay

எத்தனையோ முறை அவசரமாகவும் கவனமே இல்லாமலும் சென்றிருந்தும் இடிக்காத அந்த தூண் இன்று மட்டும் ஏன் இடித்தது?

அப்படி என்ன அவசரம் நேற்று.... சற்றே மெதுவாய் இரண்டு நிமிட தாமதமாக சென்றிருக்கலாமே....

தாமதம் ஏன் இரண்டு நிமிடத்திற்கு முன்னால் கிளம்பியிருந்தால்..

இறைவன்தான் தூணிலும் துரும்பிலும் இருப்பாரே அவர் ஏன் என் கால்களை காப்பாற்றவில்லை.

இந்த தூண் எதற்காக ஏன் இந்த இடத்தில் வைக்கப்பட்டது.

யாரால் தூண்டப்பட்டு வைக்கப்பட்டது..

மக்கள் சென்று வரும் சாலையில் இந்த தூண் வைத்ததில் என்ன உள்ளர்த்தம் இருக்க முடியும்...

முதலில் இங்கு தெருவிளக்கு இருந்திருந்தால் கண்ணில் பட்டிருக்குமே...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்ற தேர்தல்களில் எல்லாம் அரசியல் கட்சிகளின் வாக்குறுதி தெருவிளக்கு அமைத்து தருவதாய் இருந்ததே....

.................தட்ட்ட்ட்.......

மீண்டும் இடித்து கொண்டேன்.


இன்னமும்கூட சரி செய்யப்படாத சாலை....

அப்பாவின் குரலில் ஒவ்வோர் முறையும் ’’தூணா வந்து இடித்தது நீதானே இடித்துக் கொண்டாய் பிறகு அதையேன் திட்டுற’’ என வந்து போனது...

இப்படித்தானே நமக்கு கிடைத்த சுதந்திரத்தின் அர்த்தம் புரியாது நாம் அலைந்து கொண்டிருக்கின்றோம். சுதந்திரம் என்பது இன்று கிடைக்கும் உணவு போலானது. கிடைத்தவுடன் போதும் என்று இருந்தோமேயானால் நாளைய உணவு கேள்விக்குறியே.

சுதந்திரம் என்பது நமது கடமையை உணர்ந்து, நமக்கும் நமது சூழலுக்கும் நமைச்சார்ந்தோருக்கும் பயனுள்ளவர்களாக இருந்து நமது மகிழ்வை பெருக்கி கொள்வதே... மற்றபடி ஆங்கிலேயர்களிடமிருந்து கிடைத்ததாக கருதுவோமேயானால் நமக்கான அடிமை வாழ்வு இன்னும் முடியவில்லை என்பதே..

சுதந்திரம் என்றால் என்ன...? - வாசகர் சொல்லும் குட்டி ஸ்டோரி #MyVikatan

இந்த நாள் நமக்கு சுதந்திரம் என்ற ஒன்று இவ்வுலகில் உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டும் நன்னாள்...

அதை நமக்கு புரிய வைக்க தங்களது வாழ்வை தவமாக்கி வரமாய் சுதந்திரத்தை உணரவைத்த அனைத்து தியாகிகளுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.....

ஆம் இன்று அந்த சுதந்திரத்தை நினைவூட்டும் நாள் .... அதை உணர அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு