Published:Updated:

`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Blake Barlow / Unsplash )

கிட்டத்தட்ட அவன் வீட்டைவிட்டு தனிக்குடித்தனம் சென்று 6 வருடங்கள் ஓடிவிட்டன...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்று அவன் எப்பவும்போல வந்து அம்மாவிடம் நலம் விசாரித்தான். அம்மாவும் எப்பவும்போல் உண்மையான அன்புடன் பொய் சொன்னாள்.

``நல்லா இருக்கேன்டா.. கார்முகில் என்ன பண்றான்" என்று தன் பேரனை விசாரித்தாள். வார்த்தை வராத சிறுபிள்ளையைப்போல் ஹ்ம்ம் கொட்டினான் முகிலன். கிட்டத்தட்ட அவன் வீட்டைவிட்டு தனிக்குடித்தனம் சென்று 6 வருடங்கள் ஓடிவிட்டன. அந்த ஆறு வருடங்களில் முகிலன் தாயைக் காண வந்த எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதெல்லாம் மனதில் கொள்ளாத மீனாட்சி மகனுக்கு சுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

Representational Image
Representational Image
Chris Benson / Unsplash

நாவில் சுவைபடும் முன்பே நாசியில் அதன் வாசனை மோந்து அமிர்தம் உண்ட மகிழ்ச்சி அடைந்தான். அன்னைக்குத் தெரியாதா மகனுக்கு என்ன பிடிக்கும் என்று. திருமணம் ஆன பின்பு தேன்மொழியின் வார்த்தைகள் மட்டுமே அவன் காதில் விழுகிறது என்று அறிந்த தாயும் மகனை அவனது சந்தோஷத்துக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்தாள். அப்படி இருந்தும் தேன்மொழி சிறிது காலம் சென்றதும் அவனைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றுவிட்டாள்.

அன்னை மீது அன்பு, மனைவி மீது பாசம் இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தவித்தான் முகிலன். குழந்தை பிறந்தபோது அருகே இருந்து அனைத்து வேலைகளையும் செய்தவள் மீனாட்சி. கார்முகில் தன்னைப் பாட்டி என்று அழைக்கும் காலம் வரும் வேளை பார்த்து பிரிந்து சென்றுவிட்டார்கள். இதை எண்ணி எண்ணியே மீனாட்சி மனம் வெதும்பினாள்.

அவன் காபி குடிக்கும் மணித்துளிகளில் இந்தக் கடந்த காலம் எல்லாம் ஓடியது மீனாட்சி மனதில்.

``அம்மா தேன்மொழிக்கு உடம்பு சரி இல்லை ஒரு வாரமா.. அதோட கார்முகிலைப் பாத்துக்க வர்ற செல்லம்மாவும் வரல. நீ வந்து ஒரு மாசம் தங்கிட்டுப் போயேன்" என்றான். மறுப்பெதுவும் பேசாமல் உடனே புறப்படத் தயாரானாள், மீனாட்சி.

-வா. ச. அமர்நாத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு