Published:Updated:

விதை..! - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

என் மனைவி, அம்மாவிடம் பல நேரம் நன்றாக இருப்பாள் சில நேரம் சிடுசிடுவென்று இருப்பாள். அன்று ஒருநாள்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சிறுவயதில் தந்தையை இழந்த எனக்கு இன்றுவரை உறுதுணையாக இருப்பவர் என் அம்மா. விசித்திரமான வினோதமான இந்த வாழ்க்கையை வாழ்வதில் எதிர்கொள்ளும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள தினமும் நம்பிக்கையை விதைத்து கொண்டிருப்பவள்.

எனக்கு திருமணமாகி மகன், மகள் என சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆம் எனக்கும் வரம் கொடுத்து இருக்கிறான் இறைவன் நல்ல மனைவி. ஆம் என் மனைவி, அம்மாவிடம் பல நேரம் நன்றாக இருப்பாள் சில நேரம் சிடுசிடுவென்று இருப்பாள்.

Representational Image
Representational Image

ஒருநாள் ``உனக்கு நான் முக்கியமா, உன் அம்மா முக்கியமா என்று கேட்டாள். நான் கூறினேன்

``எனக்கு நீயும் முக்கியம், அம்மாவும் முக்கியம். என் வாழ்க்கையை நடத்தி செல்ல, நீங்க ரெண்டு பேரும் எனக்கு தராசு மாதிரி. என் அம்மாவுக்கு நான் கடன்பட்டிருக்கேன். உனக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். நாளை உனக்கும் வயது ஆகும். ஒருவேளை நான் இல்லாம போன, அந்த சூழ்நிலையில என் மகன் உன்ன பார்த்துப்பான். இன்னைக்கு நான் விதைக்கிறத நாளைக்கு நீ அறுவடை செய்வ.’’ என்றேன்.

அடுத்த நாள் முதல் என் மனைவியிடம் மாறுதல் தெரிந்தது. ஆம் என் அம்மாவை மாமியாராக பார்க்கவில்லை. அவள், அவளின் நிலையில் இருந்து பார்த்ததால். ஆம் நல்லதை விதைப்போம் நல்லதையே அறுவடை செய்யலாம்!

-கார்த்திக் எம்.எஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு