
என்ன தாத்தா எப்போவாச்சும் வர்றீங்க நான் தூங்குறப்போ ஆள் இருக்க மாட்டேங்கிறீங்க... இந்தத் தடவை இங்கதான் இருக்கணும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
''அப்பா... அப்பா... நாய் வண்டி பா... நம்ம பக்கத்து வீடு ரோஹிணி ஆண்டி இருக்காங்க இல்ல... அவுங்க நாய் யாரையோ கடிச்சுடுச்சாம். நாய் வண்டில பிடிச்சுட்டு போய்ட்டாங்கப்பா.'' சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் பிரணவ். ஸ்கூல் பேக்கை பொத் என்று சோஃபாவில் போட்டான்.
''டேய்... தாத்தா வந்திருக்காருடா... மாடில இருக்கார் போய்ப் பாரு.''
மாடிக்கு ஓடினான் பிரணவ்.
''அடடே... வாடா வாடா என் செல்லமே...''
அவனை அப்படியே அள்ளிக்கொண்டார் தாத்தா.
''என்ன தாத்தா எப்போவாச்சும் வர்றீங்க நான் தூங்குறப்போ ஆள் இருக்க மாட்டேங்கிறீங்க. இந்தத் தடவை இங்கதான் இருக்கணும்.''
சிரித்தார்... அதில் சற்று இறுக்கம் இருந்தது. மறுநாள் தடால் புடால் கவனிப்பு அவருக்கு. பிரணவ் ஸ்கூலுக்கு மட்டம் போட்டிருந்தான் தாத்தா கூடவே இருந்தான். அவரை சாப்பிட விடவில்லை.
''பிரணவ், அவரை சாப்பிட விடேன்டா...''

அம்மா அதட்டலுக்கு எல்லாம் அவன் செவிசாய்க்கவில்லை. அப்பா அம்மா இருவரும் கொஞ்சம் கலக்கமாக இருந்ததால் பிரணவ் சுதந்திரமாக சேட்டை பண்ணிக் கொண்டிருந்தான்.
தாத்தா தாத்தா என்று வீட்டையே ரெண்டாக்கினான். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்ததும் அம்மா சற்று கண்டிப்புடன்,
``பிரணவ் ரூம்குள்ள போய் படி...’’ என்றாள்.
``ஏம்மா..?’’
அப்பாவும் அதட்டினார்... ``போடா...’’
உள்ளே போய்விட்டான். லேசாக தயக்கத்துடன்,
``அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வண்டி வந்துடும்ப்பா...’’ என்றார் பிரணவின் அப்பா.
``தெரியும்ப்பா ...தோ, கிளம்பிட்டேன்...’’
என்றார் தாத்தா.
வெளியில் முதியோர் காப்பக வண்டி வந்து நின்றது. ஜன்னல் வழியாக பிரணவ் பார்த்தான். தாத்தாவை மெதுவாக ஏற்றி உக்கார வைத்தார் பிரண்வின் அப்பா. வண்டி கிளம்பியது. இனி அடுத்த மாதம்தான் வருவார். மாதம் ஒரு முறை வீட்டிற்கு வரும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். தளர்வாக வீட்டிற்குள் வந்த அப்பாவிடம் பிரணவ் கேட்டான்.
``தாத்தா, யாரப்பா கடிச்சாரு..?’’
- ராம் பிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.