Published:Updated:

மூன்றாவது கண்...! - குட்டி ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

பிறகு நான் பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல், மெதுவாக பின்புறம் வாசல் வழியாக உள்ளே சென்றான். சிறிது நேரம் அவனை காணவில்லை. " கத்தி கூச்சல் போடலாமா? என்று நினைத்தேன். ஆனால்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எதிர் வீட்டு வாசலில் ஒரு பூனை நின்று மெதுவாக எட்டிப் பார்த்தது. நான் அதை கவனித்துக் கொண்டிருப்பது அதற்கு தெரியவில்லை. அப்போது, சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்றவுடன் சுவரில் குதித்து சென்றது.

இப்பொழுது நேரம் இரவு சுமார் 2 மணி இருக்கும், எனக்கு தூக்கம் வரவில்லை. எனக்கு எப்படி தூக்கம் வரும்? நாட்டில்தான் பல பிரச்னை இருக்கிறதே". பகல் இரவு என பல நேரங்களில் நான் தூங்குவதே இல்லை. "நாட்டில் பல பிரச்னைகள் இருந்தால் உனக்கு என்ன"? என்று கேட்பீர்கள்.

Representational Image
Representational Image
Pixabay

ஆனால், என்னை நம்பியவர்களை நான் எப்படி ஏமாற்றுவேன். இப்படி நான் விழிப்புடன் இருந்து என் குடும்பத்தை காப்பாற்றுவதில் தான் எனக்கு பெருமை. ஏதோ "தடக் தடக்"என்று சத்தம் கேட்டது. இப்போது நான் விழித்துக் கொண்டேன். ஒருவன் மெதுவாக எதிர்வீட்டு சுவரேறி குதித்தான், பிறகு நான் பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல், மெதுவாக பின்புறம் வாசல் வழியாக உள்ளே சென்றான். சிறிது நேரம் அவனை காணவில்லை. " கத்தி கூச்சல் போடலாமா? என்று நினைத்தேன்.

ஆனால், என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. இருப்பினும் அமைதியாக இருந்தேன். 15 நிமிடம் சென்றிருக்கும். அவன் வெளியே குதித்து என்னை கவனிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டான். இப்பொழுது "ஐயோ திருடன் திருடன்" என்று சத்தம் கேட்டது. அந்த வீட்டில் இருந்தவர்கள் அலறிக்கொண்டே ஓடிவந்தார்கள், எங்கள் வீட்டிலும் விழித்துக் கொண்டு "என்ன ஆச்சு" என்று பதறினார்கள்.

Representational Image
Representational Image

"திருடன் வந்தான் சத்தம் கேட்டதும் எங்கேயோ ஓடிட்டான்" இப்பொழுது எங்கள் வீட்டில், "கவலைப்படாதீங்க, நாம உடனே கண்டு பிடித்து விடலாம்" என்று என்னை காட்டினார்கள். பிறகு ஒளிந்திருந்த திருடனை என் துணையுடன் கண்டுபிடித்து உதைத்தார்கள். இவ்வளவு நேரம் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? நான் தான் மூன்றாவது எனக்கு கண் எனப்படும் "கேமரா". உங்களால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

-தேவி பெருமாள்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு