Published:Updated:

`ஊருக்குச் செல்ல வேறு வழி தெரியவில்லை!’ -சைக்கிள் திருட்டுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய தொழிலாளி

Representation image
Representation image

வறுமையில் சாவதைவிட சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே சென்றுவிடலாம் என ஊரடங்கு காலத்தில் மக்கள் பயணமாகின்றனர்.

லாக்டெளன் 4.0 தொடர்பான அறிவிப்பை மக்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். சொந்த மாநிலத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற கூலித்தொழிலாளர்கள் அரசின் அடுத்தகட்ட அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். வேலை இல்லாததால் வருமானம் இல்லை. வறுமையில் சாவதைவிட சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே சென்றுவிடலாம் என மக்கள் பயணமாகி வருகின்றனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் ராஜஸ்தானுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளார். இதையடுத்து, நடந்து செல்வது சாத்தியமில்லை என நினைத்த அந்தத் தொழிலாளி ராஜஸ்தானில் கிராமம் ஒன்றில் வீட்டின் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிளை நள்ளிரவில் திருடிக்கொண்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் அடுத்தநாள் காலையில் வெளியில் வந்து பார்த்தபோது சைக்கிளைக் காணவில்லை. இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. வீட்டுத் திண்ணையை தூய்மை செய்யும்போது ஒரு கடிதம் கிடைத்துள்ளது. சைக்கிளைத் திருடிச்சென்ற கூலித்தொழிலாளி மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்துச் சென்றுள்ளார்.

மன்னிப்பு கடிதம்
மன்னிப்பு கடிதம்

அந்தக் கடிதத்தில், `நான் ஒரு தொழிலாளி.. உதவியற்ற நிலையில் இருக்கேன். நான் உங்களின் திருடன். நான் உங்களுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். நான் என்னுடைய வீட்டை அடைவதற்கு இதைத்தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. நான் மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துள்ளேன். நான் பரேலிக்குச் செல்ல வேண்டும்” என தனது நிலையை எடுத்துக்கூறி மன்னிப்புக் கோரியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு