Published:Updated:

மியாட் மருத்துவமனை - விபத்துக் காயங்கள் மேலாண்மையில் "பொன்னான நேரம்" என்றால் என்ன?

பெரும்பாலான நேரங்களில் குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமாக இருக்கும் இளம் உழைக்கும் நபர்களின் மரணத்துக்கு சாலைப் போக்குவரத்து விபத்துகள் முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன.

விபத்துக் காயங்கள் ஒரு அமைதியான கொள்ளைநோயாகும். இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2019-ம் ஆண்டு நமது நாட்டில் நடந்த 4,49,002 சாலை விபத்துகளில் 1,51,811,3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

“விபத்துகள், குறிப்பாக சாலைப் போக்குவரத்து விபத்துகள் நடப்பவை அல்ல - ஏற்படுபவையாகும்”

சாலை விபத்துகள்
சாலை விபத்துகள்
உலகளவில் 199 நாடுகளில் சாலைப் போக்குவரத்து விபத்துகளில் இந்தியா முதலிடத்திலும், சீனா மற்றும் அமெரிக்கா முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன. சாலை விபத்து காரணமாக ஏற்படும் உலகளாவிய உயிரிழப்புகளில் இந்தியாவின் பங்கு 11 சதவிகிதம் ஆகும். இந்த அதிகரிப்பு உலக சராசரியான 8 சதவிகிதத்தைவிட அதிகமாகும். தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா, மற்றும் கேரள மாநிலங்களில் இறப்பு விகிதங்கள் அதிகமாக உள்ளன.

பெரும்பாலான நேரங்களில் குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமாக இருக்கும் இளம் உழைக்கும் நபர்களின் மரணத்துக்கு சாலைப் போக்குவரத்து விபத்துகள் முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன. (LANCET பொது சுகாதார ஆய்வு).

இன்றைய நவீன உலகில், வாகனங்களின் எண்ணிக்கை சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. புதிய மேம்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம் காரணமாக போக்குவரத்துகளில் விரைவான ஏற்றம் ஏற்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக சாலைப் போக்குவரத்து விபத்துகளை அதிகரிக்கவும் வழிவகுத்துவிட்டது.

சாலை விபத்துகள்
சாலை விபத்துகள்

தமிழக அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2020-ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 ஆயிரம் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சென்னை, கடலூர் மற்றும் கோயமுத்தூர் ஆகியவை இதில் முதல் மூன்று மாவட்டங்களாக உள்ளன.

இந்த இறப்புகளில் பெரும்பாலானாவை சாலை காயங்கள் காரணமாக இருசக்கர வாகனங்களில் நடக்கிறது. இந்தியாவில் (15-39 வயது) இளம் வயது ஆண்களின் மரணத்திற்கு இதுவொரு முக்கியக் காரணமாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் சைக்கிள் ஓட்டுபவர்கள், கார் ஓட்டுநர்கள் அல்லது பயணிகளைவிட குறைவான பாதுகாப்பைக் கொண்டிருப்பதால் இந்தக் காயங்களுக்கு அதிகம் ஆளாக நேரிடும். மொத்த சாலை விபத்து இறப்புகளில் இருசக்கர வாகனங்களின் பங்களிப்பு 35 சதவிகிதம் ஆகும். அதைத் தொடர்ந்து கார்கள், டாக்சிகள், வேன்கள் & எல்எம்விக்கள் (18.6%), பாதசாரிகள் (14%), டிரக்குகள் (10%), பேருந்துகள் (4.9%) மற்றும் சைக்கிள்கள் (2.9%) பங்களிப்புகளைக் கொண்டுள்ளன.

இந்தச் சாலைப் போக்குவரத்துக் காயங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும், முதன்மை வருவாய் ஆதாரங்களாக இருப்பவர்களைப் பாதிக்கையில் அவர்களது இழப்பு உட்பட பெரும் பொருளாதார தாக்கத்தை உண்டாக்குகின்றன என்றும் பெரும் சிகிச்சைச் செலவை ஏற்படுத்துகிறது. இது அவர்களை வறுமையில் தள்ளுகிறது மற்றும் பெரும் பொருளாதார இழப்பிற்கு வழிவகுப்பதோடு, தேசத்திற்கும் ஒட்டுமொத்தமாக இழப்பை ஏற்படுத்துகிறது.

விபத்து
விபத்து

ஒரு பெரிய காயத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில் அவசர மருத்துவச் சேவையைப் பெற்றால் காயமடைந்த நபர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்பது நன்கு நிறுவப்பட்ட உண்மையாகும்.

பொன்னான நேரம்

நோயாளின் முடிவை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காலகட்டம் விபத்து காயத்திற்குப் பிறகான முதல் 60 நிமிடங்களாகும். இது பொன்னான நேரம் (கோல்டன் ஹவர்) என்று அழைக்கப்படுகிறது.

பால்டிமோர் பல்கலைக்கழகத்தின், ஷாக் டிராமா சென்ட்ரைச் சேர்ந்த R.ஆடம்ஸ்கௌலி,

- வாழ்விற்கும் இறப்பிற்கும் இடையே ஒரு பொன்னான நேரம் உள்ளது.

- நீங்கள் கடுமையாகக் காயமடைந்தால், உயிர்பிழைக்க உங்களுக்கு 60 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே இருக்கும்.

- நீங்கள் அப்போது இறக்காமல் இருந்தாளும், மூன்று நாட்கள் கழித்தோ அல்லது இரண்டு வாரங்கள் கழித்தோ பாதிக்கப்படலாம் - சரிசெய்ய முடியாத ஏதோ ரொஉ மாற்றம் உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கலாம்

சிகிச்சை
சிகிச்சை

இந்த ஆரம்ப காலகட்டத்திற்குள், மீள் உயிர்ப்பித்தலுக்கான வரையறுக்கப்பட்ட விபத்துக் காய பராமரிப்பு (DEFINITIVE RESUCITATIVE TRAUMA CARE) தொடங்கப்பட வேண்டும். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இது உலகம் முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. கற்றுத்தரப்பட்டுள்ளது மற்றும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் சரியான மீட்பு வசதிகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பொன்னான நேரத்திற்குள் மருத்துவமனையை அடைய முடிவதில்லை.

மீள் உயிர்ப்பித்தலுக்கான வரையறுக்கப்பட்ட விபத்துக் காய பராமரிப்பு (DEFINITIVE RESUCITATIVE TRAUMA CARE)

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை அடைந்த பின், பல காயங்களைக் கொண்டிருக்கும் நோயாளிகளை நிர்வகிப்பதற்கான முக்கியப் படிகள்:

1) முதன்மை மதிப்பீடு - உயிருக்கு ஆபத்தான காயங்களைக் கண்டறிதல்

2) சேதக் கட்டுப்பாட்டு மீட்டெடுப்பு - அதிர்ச்சி மற்றும் தீவிரமான காயங்களுக்குச் சிகிச்சையளித்தல்.

இவ்விரண்டும் ஒன்றாகச் செய்யப்படுகின்றன. இது நோயாளியின் உயிர்வாழ்வதற்கு அவசியமான பொன்னான மணிநேரத்தின் மதிப்புமிக்க தருணங்களை இழப்பதைத் தவிர்க்கிறது.

சிகிச்சை
சிகிச்சை

இரத்தம், இரத்தப் பொருள்கள் அல்லது இரத்த மாற்றீடுகளுடன் காயத்தினால் ஏற்படும் இரத்த இழப்பை ஈடேற்றுதலை உள்ளடக்கிய முதன்மை மதிப்பீடுகளுடன், ஒரே நேரத்தில் மீள் உயிர்ப்பித்தலும் தொடங்கப்பட வேண்டும்.

மீள் உயிர்ப்பித்தலும் செயல்முறை ஒரே நேரத்தில் செய்யப்படுவதால், இத்தகைய உயிருக்கு ஆபத்தான காயங்களும் அடையாளம் காணப்படலாம்:

1) மூளைக் காயம் (இறப்பில் 50%)

2) ரத்தப் போக்கு/அதிர்ச்சி (இறப்பில் 35%)

3) இரண்டும்

4) இரண்டு நேரம் சார்ந்தவை, ஒவ்வொரு நிமிடமும் பெரும் தாக்கத்தை உண்டாக்குபவை

இதயத் துடிப்பு 120-க்கு மேலும், ரத்த அழுத்தம் 80-க்குக் கீழும் இருந்தும், மயக்கம் மற்றும் நிலையற்ற நிலையில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

வயிறு / மார்பு காயங்கள் ஏற்பட்டால் குறிப்பாக உட்புற ரத்தப் போக்குகளின்போதும், நீண்டகால ஹைபோவோலெமிக் அதிர்ச்சியின் விளைவுகளிலிருந்து காக்கவும், உடனடி அறுவை சிகிச்சைத் தலையீடு தேவை.

சிகிச்சை
சிகிச்சை

RTA பாதிப்படைந்தவர்களின் மிகவும் பொதுவான ஆபத்துக் காரணி உள் அல்லது வெளிப்புற ரத்தப்போக்கு ஆகும். குறிப்பாக அதிக அளவு ரத்தம் இழக்கப்படும்போது, நபரின் ரத்த அழுத்தம் மிகக் குறைவாக குறைந்து ஹைபோவோலெமிக் அதிர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் ரத்த இழப்பின் விளைவாக, முக்கிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம் குறைந்து முதன்மையாக சிறுநீரக பாதிப்பு மற்றும் மூளை உள்ளிட்ட பிற உறுப்புகள் பாதிக்கபப்டும்.

விபத்துக் காயங்களினால் ஏற்படும் சிக்கல்கள் பொன்னான நேரத்திற்குள் சரியான முறையிலும், விரைவாகவும் நிர்வகிக்கப்படாவிட்டால், சேதத்திற்கான காரணம் சரிசெய்ய முடியாத நிலையை அடையும்.

என்ன செய்ய வேண்டும்?

மேற்கூறிய காரணங்களுக்காக, தீவிர விபத்துக் காயங்களைக் கொண்டவர்களை, இயன்ற அளவு விரைவாக ஒரு டிராமா & ரீசச்சினேஷன் மையம் அல்லது ஒரு டெர்ஷியர் கேர் டிராமா ரெஃபரல் மையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியது முக்கியமாகும்.

காயத்தின் தீவிரத்தை அடையாளம் காணவும், அதிர்ச்சியைக் கையாளவும் டிராமா & ரீசச்சினேஷன் மையம் ஒரு பிரத்யேகக் குழு மற்றும் உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். காயங்களுக்கு, உயர் தர சிகிச்சை தேவைப்பட்டால், நோயாளியை டெர்ஷியர் கேர் டிராமா ரெஃபரல் மையத்திற்கு மாற்ற வேண்டும்.

சிகிச்சை
சிகிச்சை

எளிமையாகக் கூற வேண்டுமெனில், விபத்தில் பாதிக்கப்படவர்கள் சரியான நேரத்தில் சரியான மருத்துவமனைக்குச் சென்றால் உயிர்பிழைக்கவும் விரைவில் குணமடையவும் அதிக வாய்ப்புகள் இருக்கும்.

பல காயங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொன்னான நேரம் முறையாகப் பயன்படுத்தப்பட்டு, மீள் உயிர்ப்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவே அவர்கள் எதிர்பார்த்த வாழ்வை வாழ அவர்களுக்கு உதவும்.

சமூகத்தின் கூட்டுச் சமூகப் பொறுப்பு

இந்த ‘பொன்னான நேரம்’ கருத்தாக்கம் பற்றி விழிப்புடன் இருப்பது சமுதாயத்தின் ஒட்டுமொத்த சமூகப் பொறுப்பாகும். இதில் ஃபீல்டு டிரியாஜ் வழிகாட்டல்கள், அவசரநிலை மருத்துவச் சேவைகள் மற்றும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு டிராமா & ரீசச்சினேஷன் மையம் அல்லது ஒரு டெர்ஷியரி கேர் மையத்திற்குக் கொண்டு செல்லுதல் மிகவும் முக்கியமாகும்.

WHO - நிலைத்திருக்கத்தக்க மேம்பாட்டு நிரலின்படி, மக்களுக்காக, புவிக்காக (2015)-ல் 17 இலக்குகள் உருவாக்கப்பட்டன.

WHO
WHO

இலக்கு எண் 3 - நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, 2020-ம் ஆண்டின் இறுதிக்குள் RTAவினால் ஏற்படும் உலகளாவிய இறப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வலியுறுத்துகிறது. மேலும் சாலைப் பாதுகாப்பு குறித்த மூன்றாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் 19 மற்றும் 20 பிப்ரவரி 2020 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்தியா உட்பட அனைத்து பங்கேற்பாளர்களூம் சாலை விபத்து தொடர்பான இறப்புகளை 2030-க்குள் குறைந்தது 50 சதவிகிதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த உறுதிப்பாட்டை ஈடேற்றி, சாலை விபத்து மற்றும் இறப்பு எண்ணிக்கைகளைக் குறைப்பது இந்தியக் குடிமக்களாக நமது பொறுப்பாகும்.

இந்திய அரசின் ஊக்குவிப்பு

சாலைப் போக்குவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில், பொன்னான மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்வோருக்கு ரூ.5,000 வழங்குவதன் மூலம் பொதுமக்களை ஊக்குவிக்க ‘குட் சமாரிட்டன்ஸ்’ திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

நமது நாட்டின் இளைஞர்களின் உயிரைக் காக்கும் டிராமா கேர் வழங்குனர்களின் முயற்சியில், சமூகமும் பங்கேற்க வேண்டும்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

மியாட் மருத்துவமனை

எலும்பியல் மற்றும் டிராமா கே சென்டராக தொடங்கப்பட்ட மியாட் மருத்துவமனி, ஆரம்பம் முதல் மீள் உயிர்ப்பித்தலுக்கான வரையறுக்கப்பட்ட விபத்துக்காய பராமரிப்பு முறையைப் பின்பற்றி, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிலை 1 பாலி டிராமா மையமாகத் திகழ்கிறது. ஒரு முன்னணி டெர்ஷியரி ட்ராமா ரெஃபரல் மையமாகவும், மேலும் கற்பித்தல் மருத்துவமனையாகவும் இருக்கும் மியாட், ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிதீவிர விபத்து மற்றும் காயங்கள் நேர்வுகளைக் கையாளுகிறது.

மியாட் விபத்து மற்றும் ட்ராமா குழுவில், பயிற்சி பெற்ற துணை மருத்துவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கியுள்ளனர். அவர்கள் சேதத்தின் அளவைக் கட்டுப்படுத்த 24/7 ஒன்றாக வேலை செய்கிறார்கள் மற்றும் கடுமையாக காயமடைந்த நோயாளிகளுக்குத் தேவையான சிறப்பான மற்றும் முழுமையான கவனிப்பை வழங்குகிறார்கள்.

Dr. Ramprasad J, Director of Trauma & HOD – Orthopaedic Surgery, MIOT Hospitals
Dr. Ramprasad J, Director of Trauma & HOD – Orthopaedic Surgery, MIOT Hospitals

கடுமையான விபத்து மற்றும் அதிர்ச்சி தலை முதல் கால் வரை வெளி அல்லது உள்காயங்கள் தீவிர விபத்து மற்றும் டிராமாவில் ஏற்படலாம் என்பதாள், MIOT விபத்து மற்றும் டிராமா நிபுணர்கள் எலும்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரகம், மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை மற்றும் புனரமைப்பு மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, நுரையீரல், அறுவை சிகிச்சை இரைப்பைக் குடல், இன்டென்சிவ் கேர் ஆகியவற்றின் அறுவை நிபுணர்கள், உடலியல் மற்றும் தொழில்சார் சிகிச்சையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் இணைந்து செயலாற்றி, நோயாளிகளுக்கு விரைவான, முழுமையான கவனிப்பை வழங்குகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு