Published:Updated:

`ஐயோ Monday-வா?' - வாரத்தின் மோசமான நாளாக திங்கள்கிழமையை அறிவித்த கின்னஸ் உலக சாதனை அமைப்பு

Representational Image

கின்னஸ் உலக சாதனை அமைப்பு, திங்கள்கிழமையை வாரத்தின் மோசமான நாளாக அறிவித்து தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `வாரத்தின் மோசமான நாளாக ரெக்கார்டு செய்யப்பட்ட கிழமை, திங்கள்கிழமை என அதிகாரபூர்வமாக நாங்கள் அறிவிக்கிறோம்’ என்று ட்வீட் செய்துள்ளது.

தினமும் ஆபீஸ், வேலை, தொழில் என ஓடிக் கொண்டிருப்பவர் களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது மிக சந்தோஷமான மற்றும் ஓய்வை கொடுக்கக்கூடிய நாளாகும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து, பிடித்ததை சாப்பிட்டு என அந்நாள் எப்போதும் இனிமையாகக் கழியும்.

கின்னஸ் 
உலக சாதனை
கின்னஸ் உலக சாதனை

ஆனால், அந்த விடுமுறை நாள் முடியும் நேரத்தில் நம் மனதில் ஒரு கலக்கமும் வெறுப்பும் தோன்றும். அதற்கான காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும்... அதேதான்! அடுத்த நாள் திங்கள் என்பதுதான் அந்தக் காரணம். அப்படியான மோசமான நாளை, கின்னஸ் உலக சாதனை அமைப்பும் அவ்வாறே அங்கீகரிக்க, இப்போது இதுதான் இணையத்தில் ஹாட் டாபிக்.

கின்னஸ் உலக சாதனை அமைப்பு, திங்கள்கிழமையை வாரத்தின் மோசமான நாளாக அறிவித்து தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `வாரத்தின் மோசமான நாளாக ரெக்கார்டு செய்யப்பட்ட கிழமை, திங்கள்கிழமை என அதிகாரபூர்வமாக நாங்கள் அறிவிக்கிறோம்’ என்று ட்வீட் செய்துள்ளது. இதை நெட்டிசன்கள் ஆமோதித்து வருவதுடன், அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த ட்வீட் இதுவரை, 4.28 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் 79,000 ரி-ட்வீட்களையும் பெற்றுள்ளது. மேலும், `உங்களது திங்கள்கிழமையை நீங்கள் சரியாகப் பெற்றால் மீதமுள்ள வார நாள்களை சரியாகப் பெறுவீர்கள்' என்றும், `திங்கள்கிழமை காலை எவ்வளவு மோசமானதோ, ஞாயிற்றுக்கிழமை மாலையும் அவ்வளவு மோசம்' என்றும், `திங்கள்கிழமைக்குப் பின் வரும் செவ்வாய்க்கிழமையையும் தடை செய்யுங்கள், அதற்கடுத்து வரும் புதன்கிழமையையும், ஞாயிறு வரை வரும் அனைத்து நாள்களையும் தடை செய்யுங்கள், எங்களுக்கு இருக்கும் ஒரே நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான்’ எனவும்... நெட்டிசன்கள் சுவாரஸ்யமாக கமென்ட் செய்து வருகின்றனர்.