Published:Updated:

`அம்மா தந்த உத்வேகம்!’ - எஸ்.ஐ பணிக்கு தாய் - மகளிடையே போட்டாபோட்டி; தெலங்கானா சுவாரஸ்யம்!

திரிலோகினியுடன் தாய் டேரெல்லி ( twitter )

அம்மாவின் கம்பீரம், அவரது திறமை, காவல்துறை சீருடையின் மிடுக்கு உள்ளிட்டவற்றை பார்த்து ஈர்க்கப்பட்டார், மகள் திரிலோகினி. அத்துடன், காவல்துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து முறையாக விண்ணப்பித்தார்.

`அம்மா தந்த உத்வேகம்!’ - எஸ்.ஐ பணிக்கு தாய் - மகளிடையே போட்டாபோட்டி; தெலங்கானா சுவாரஸ்யம்!

அம்மாவின் கம்பீரம், அவரது திறமை, காவல்துறை சீருடையின் மிடுக்கு உள்ளிட்டவற்றை பார்த்து ஈர்க்கப்பட்டார், மகள் திரிலோகினி. அத்துடன், காவல்துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து முறையாக விண்ணப்பித்தார்.

Published:Updated:
திரிலோகினியுடன் தாய் டேரெல்லி ( twitter )

அம்மாவும், பெண்ணும் ஒரே நேரத்தில் கல்லூரித் தேர்வு எழுதுவது, ஒரே துறையில் வேலை செய்வது என்று பார்த்திருப்போம். ஆனால், தெலங்கானாவில் அம்மா டேரெல்லி நாகமணி மற்றும் அவரின் மகள் திரிலோகினி இருவரும் சேர்ந்து காவல்துறை தேர்வில் போட்டியிட்டு, இருவரும் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றதோடு, எழுத்துத் தேர்வுக்கும் தேர்வாகி உள்ளனர்.

காவல்துறை
காவல்துறை

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், நெலகொண்டப்பள்ளி அருகே சென்னாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேரெல்லி. விவசாய குடும்பத்தை சேர்ந்த தொல்ல வெங்கண்ணாவை திருமணம் செய்தார். இந்த தம்பதியின் மகள், திரிலோகினி. அங்கன்வாடி ஆசிரியராகப் பணிபுரிந்தார் டேரெல்லி. விளையாட்டு மற்றும் உடற்கல்வித்தகுதி ஆகியவற்றில் தனக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்த அவர், அது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்தார். அவரின் கணவரும், இவற்றை தொடர உதவி செய்து ஊக்குவித்தார்.

அந்த வகையில் கைப்பந்து, கபடி மற்றும் கோ-கோ போன்ற விளையாட்டுகளை விளையாடத் தொடங்கினார் டேரெல்லி. அத்துடன், அந்த விளையாட்டுகளில் தனது திறமையை நிரூபித்து, சிறந்த வீராங்கனையாகவும் திகழ்ந்தார். தொடர்ந்து பல்வேறு மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று ஐந்து கோப்பைகள், பத்து பதக்கங்கள் மற்றும் ஏராளமான அங்கீகாரச் சான்றிதழ்களைப் பெற்றார். 2007-ம் ஆண்டில், தெலங்கானா காவல்துறையில் வீட்டுக் காவலராகச் சேர்ந்தார். கடந்த 2020-ம் ஆண்டு முதல் காவல்துறை காவலராகப் பணியாற்றி வரும் அவர், தற்போது முலுகுவில் பணியில் இருக்கிறார்.

மகள் திரிலோகினியுடன் தாய் டேரெல்லி
மகள் திரிலோகினியுடன் தாய் டேரெல்லி
twitter

இதனிடையே, அம்மாவின் கம்பீரம், அவரது திறமைகள், காவல்துறை சீருடையின் மிடுக்கு உள்ளிட்டவற்றை பார்த்து ஈர்க்கப்பட்டர், மகள் திரிலோகினி. அத்துடன், காவல்துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து முறையாக விண்ணப்பித்தார். தற்போது இருவரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில், கம்மம் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். இதில், இவர்கள் இருவருமே அடுத்து நடக்கவிருக்கும் எழுத்துத் தேர்விற்கு தேர்வாகியுள்ளார்.

`இது அம்மா தந்த உத்வேகம்’ என்று மகள் சொல்ல, `இப்படி... காவல்துறை பணியில் மகளுடனேயே போட்டியிடும் செயல் எல்லாம் வாழ்வில் அரிது. எழுத்துத் தேர்விலும் இருவரும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது’ என்று அம்மா டேரெல்லி கூறியுள்ளார்.

இருவருக்கும் ஆல் தி பெஸ்ட்!