Published:Updated:

``நான் வளர்கிறேனே அம்மா..!’’ - மகளதிகாரம் #கவிதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

அம்மா பகிரும் மகளதிகாரம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

கைகளைக் கட்டிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு கோபப்படுவதில்லை.

நீ வளர்கிறாய்!

தரையில் படுத்து புரண்டு அடம் பிடிப்பதில்லை.

நீ வளர்கிறாய்!

முடி வெட்ட அழகு நிலையம் செல்வதில்லை.

நீ வளர்கிறாய்!

என்னை இன்னொருவருடன் பேச விடுகிறாய்.

நீ வளர்கிறாய்!

Representational Image
Representational Image
Pixabay

கண்டித்தால் அழாமல் பதில் பேசுகிறாய்.

நீ வளர்கிறாய்!

உன் பொருள்களை பத்திரமாய் எடுத்து வைக்கிறாய்.

நீ வளர்கிறாய்!

எனக்கு முடியாதபோது ஓய்வு கொடுக்கிறாய்.

நீ வளர்கிறாய்!

பிறர் மனது நோகாதவாறு பேச முயற்சி செய்கிறாய்.

நீ வளர்கிறாய்!

ஆசைப்பட்டாலும் அடம் பிடிப்பதில்லை பெரும்பாலும்.

நீ வளர்கிறாய்!

புகைப்படத்துக்கு pose செய்ய நாட்டமில்லை. அந்தத் தருணத்தை 'வாழ' விரும்புகிறாய்.

இதை விட்டு விடாதே!

கோபப்பட்டாலும் நிமிடங்களில் தெளிவடைகிறாய்.

இதை விட்டு விடாதே!

Representational Image
Representational Image
Pixabay

அழுகையே இருந்தாலும் அழுது தீர்த்து தெளிந்து விடுகிறாய்.

இதை விட்டு விடாதே!

எல்லாரையும் நேசிக்கிறாய்.

இதை விட்டு விடாதே.

சிறு சிறு விடயத்துக்கும் அகம் / முகம் மலர மகிழ்கிறாய்.

இதை மட்டும் விடுத்து வளர்ந்து விடாதே!

மகிழ்ச்சியை சில சமயம் மற்றவரிடத்தில் தேடுகிறாய்.

கட்டாயம் இதை மட்டும் விடுத்து வளர்ந்து விடு!

- வி.சுதா சத்யநாராயணா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு