Published:Updated:

மயிலையில் அரங்கேறிய சிறுமிகளின் அற்புத நாட்டியம்!

பக்தியில் பலவிதம், அதை எடுத்துணர்த்த ``நவவித பக்தி" என்று ஒரு நாட்டிய நாடகத்தை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் அரங்கேற்றினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை பரதநாட்டிய கலாலயாவின் மாணவிகள், குரு கீதா வெங்கடேஷ்வர் தலைமையில், ஜனவரி மாதம், 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நான்கு நாள்கள் சென்னையின் பல்வேறு மன்றங்களில் மிகச்சிறப்பாக ஆடி பாராட்டுகளைப் பெற்றனர்.

 கலாலயாவின் மாணவிகள்
கலாலயாவின் மாணவிகள்

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் தொடங்கிய, சிறுமிகள் ஷர்மிளா ரங்கநாதன் மற்றும் வர்ஷா சுந்தர் அவர்களின் ஆடுபாம்பே தமிழ்ப் பாடலுக்கான நடனம் இவர்களது கலை உலாவின் முதல் சிறப்பு அம்சமாக அமைந்தது. அன்றய தின இறுதிப் பாடலான சாய்பாபா ஆர்த்தி, குருவின் நடனக் கோவைக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது.

பக்தியில் பலவிதம், அதை எடுத்துணர்த்த ``நவவித பக்தி" என்று ஒரு நாட்டிய நாடகத்தை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் அரங்கேற்றினர். தாஸ்யம் - ராமனின் தொண்டனான அனுமனின் பக்தியைக் கண்முன்னே கொண்டு வந்தார் அனுபமா தேவராஜன்.

மயிலையில் அரங்கேறிய சிறுமிகளின் அற்புத நாட்டியம்!

ரத்னகிரீஸ்வரர் ஆலயத்தில் சிவனைப்பற்றிய அர்த்தநாரீஸ்வரர் நடனம் மற்றும் தாண்டவலாஸ்ய நடனம்; ப்ரஹ்மகான சபாவில் தேவியைப்பற்றிய தேவி ஸ்துதி மற்றும் ஸ்ருங்காரலஹரி நடனமும் பார்த்த அனைவரையும் கவர்ந்தன.

நான்கு நாள்கள், நான்கு மேடைகள், நாற்பது நடனங்கள், பரதநாட்டிய கலாலயாவின் முதல் மார்கழி பதிவே முத்திரைப் பதிவு. அதிதி மூர்த்தி, அர்ச்சனா ஆனந்த், அனுபமா தேவராஜன், காமினி தீபக், ரீம் பதாமி, ஸ்ம்ருதி ரங்கநாதன், ஸ்துதி பாக்ரி, ஸுனைனா சாப்ரியா, தன்வி கபூர், வர்ஷா சுந்தர் சிறுமிகள் ப்ரக்யா தீபக், ஷர்மிளா ரங்கநாதன் மற்றும் ஸ்ரேயா தேவராஜன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு