பயமாக இருக்கிறது இன்றைய தலைமுறை வளர்கின்ற விதத்தை பார்த்தால்.. மாணவர் ஆசிரியரை மரியாதை இல்லாமல் நடத்தும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இது நம்ம தமிழ்நாட்டில் நடந்த சம்பவமா என்னும் அதிர்ந்து போனேன். இன்றைய தலைமுறை பிள்ளைகளிடம் இருக்கும் சில ஆபத்தான பழக்க வழக்கங்களை இங்கே குறிப்பிடுகிறேன்..
2K கிட்ஸில் பலருக்கு,
பிடித்த சாப்பாடு - புரோட்டா, நூடுல்ஸ், பிட்ஸா
பிடித்த பொழுதுபோக்கு: ஆன் லைன் கேம், இன்ஸ்ட்டா கிராம் , வாட்சப், பேஸ் புக்கில் மணிக்கணக்கில் மூழ்கி கிடப்பது
பிடித்த பொருள் - செல்ஃபோன்
படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.
கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்.
பெற்றோர் உட்பட வயதில் மூத்தவர்கள் யாருக்குமே சரியாக மரியாதை தர தெரியவில்லை.
தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற அலட்சியமான மனநிலை.
கஷ்டப்படாமல் எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.
சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்.
நமது குடும்ப உறவுகள் பற்றி தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை.
ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை ஒன்றும் தெரியாத முட்டாள்கள்.
நமது வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல், குடும்ப உறவுகள், கடவுள் வழிபாடு, சடங்கு சம்பிரதாயங்கள் குறித்த அடிப்படை புரிதல்கள் கிடையாது.
பணத்தின் அருமை கொஞ்சமும் தெரிவதில்லை.

பெற்றோர்களின் கடின உழைப்பு மற்றும் அதனால் வாழ்வில் அடைந்து இருக்கும் முன்னேற்றம் பற்றி தெரியாது, தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை. நாம் அதை பற்றி சொன்னால் " உங்க பழைய கதையை திரும்ப திரும்ப சொல்லி போர் அடிக்காதீங்கன்னு " ரொம்பவே அலட்சியமான பேச்சு.
பொது அறிவையும், சமுதாய பொறுப்பையும், சொந்த வாழ்வையும் மேம்படுத்தும் வகையில் எந்த புத்தகத்தையும் வாசிப்பதில்லை. மேற்கத்திய ஹாரி பாட்டர் கதையை புத்தகம் மேல் புத்தகமாக வாங்கி வாசிக்கும் இவர்களில் சிலருக்கு பாரதியாரை பற்றி, திருவள்ளுவரை பற்றி அறிந்து கொள்ள கூட விருப்பமில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவாயை திறந்தாலே சர்வசாதாரணமாக நுனிநாக்கு ஆங்கிலத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட கெட்ட வார்த்தைகள்,
10 ஆம் வகுப்பு போவதற்குள் காதல், பார்ட்டி , மூவி, ஓவர் நைட் ஸ்டே, வீக் எண்டு அவுட்டிங்.
நான் இங்கே பேசுவது ஏற்கெனவே ஆபத்தான பழக்க வழக்கங்களை பின்பற்றி கொண்டிருக்கும் மேற்கத்திய நாட்டு பிள்ளைகளை பற்றி மட்டும் அல்ல , அவர்களுக்கு இணையாக போட்டி போட்டு நம் கலாச்சாரத்தையும், குடும்ப நிம்மதியையும் சிதைத்துக் கொண்டிருக்கும் நம் இந்திய நாட்டு இளம் தலைமுறையை பற்றியும்தான். மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இருபாலருக்கும் பொருந்தும்.

நான் பேசுவது 2k kids ன் பொதுவான மனநிலை மற்றும் குணாதிசயங்கள் குறித்துதான். சில விதிவிலக்குகளாக இருக்கும் பிள்ளைகளை பற்றி அல்ல. பல பெற்றோர்கள் தம் பிள்ளைகள் அந்த ஒரு சில விதிவிலக்குகளில் தம் பிள்ளையும் ஒரு ஆள் என்று பொய்யாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். நாம் பேசுவதை கேட்கும் திறன் இல்லாமலே பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையிடம் நாம் அறிவுரை என்னும் ஆறிப்போன பழங்கஞ்சியை போன்று பார்க்கப்படும் பழைய சொற்களோடு போராடி தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நம்மில் பெரும்பான்மையான பெற்றோர்கள் இன்னும் உணரவே இல்லை .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்படி எந்த வாழ்வியல் கட்டுப்பாடுகளையும் பின்பற்ற விரும்பாமல் இருக்கும் இளம் தலைமுறையால் வருங்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வுகளை பெற்றோர்களாகிய நம்மில் பலர் இன்னும் உணரவே ஆரம்பிக்கவில்லை.
பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம். பெற்றோர்கள் தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள். இப்படி இவர்களால் ரொம்பவே செல்லம் கொடுத்து ஜோம்பிகள் போல வளர்க்கப்பட்டு வரும் தங்கள் நலன் பற்றி மட்டுமே சிந்திக்கும் இந்த இளம் தலைமுறை, பெற்றோர்களின் வயதான காலத்தில் அவர்களை சரியான முறையில் பேணுவார்கள் என்ற எந்த உத்திரவாதமும் கிடையாது.
பெற்றோர்கள் தங்கள் வயதான காலத்திற்கான திட்டமிடலை இந்த இளம் தலைமுறையினரை மையப்படுத்தி செய்தால் அது அவர்களுக்கு வயதான காலத்தில் பெரும் ஏமாற்றம் மற்றும் மன வருத்தம் ஏற்படுத்தும்.
அவர்களை சாராமல் கடைசி காலத்தை திட்டமிட்டால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கவனமாக தப்பிக்க உதவும்.
பெற்றோர்கள் வெளியில் பார்க்கிற செல்ல பிள்ளைகள் இல்லை இவர்கள். உள்ளுக்குள் யாருமே உணரமுடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் சுயம் உணராமல் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில நூற்றாண்டுகளில் இப்படி ஒரு சுய சிந்தனையற்ற, திட்டமிடல் இல்லாத , கட்டுப்பாடுகள் இல்லாத, வாழ்வில் எந்த உயர்ந்த குறிக்கோள்களும் இல்லாத, சுயநலமான, சோம்பலும், அலட்சியமும் உடலின் ஒவ்வொரு செல்லிலும் கொண்ட , வாசித்து அறிவை விரிவாக்கிக்கொள்ள விரும்பாத , பெரியவர்களையும், குடும்ப உறவுகளையும் மதிக்க விரும்பாத இளம் தலைமுறையை உலகம் இதுவரை சந்தித்ததில்லை.
ரொம்பவே பயமாக இருக்கிறது இன்றைய தலைமுறை வளர்கின்ற விதத்தை பார்த்தால்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.