Published:Updated:

புகுந்த வீட்டு பெருமை! - 80ஸ் மருமகள் பக்கங்கள் | My Vikatan

Representational Image ( Photo by Angshu Purkait on Unsplash )

உறவுகளிடமும், நட்புகளிடமும் எங்க அத்தை இப்படி? எங்க அத்தை இப்படி? என்று ஒப்பிட்டுப் பார்த்ததேயில்லை. குடும்ப உறுப்பினர் முன் கணவரிடம் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுவேன்.

புகுந்த வீட்டு பெருமை! - 80ஸ் மருமகள் பக்கங்கள் | My Vikatan

உறவுகளிடமும், நட்புகளிடமும் எங்க அத்தை இப்படி? எங்க அத்தை இப்படி? என்று ஒப்பிட்டுப் பார்த்ததேயில்லை. குடும்ப உறுப்பினர் முன் கணவரிடம் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுவேன்.

Published:Updated:
Representational Image ( Photo by Angshu Purkait on Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

புகுந்த வீட்டிற்கு பிறந்துவீட்டு உறவுகள் வரும்போது...

இதை நான்கு ஐந்து முறை (வாசித்து) சொல்லிப் பாருங்கள்... இதுவே ஒரு அழகிய கவிதையாக தெரியும்.

என்னைப் பொறுத்தவரை இதற்கு நான் சற்று விரிவாக பதில் தர வேண்டும் என எண்ணுகிறேன். திருமணம் இன்னாருடன் என்று முடிவானதுமே புகுந்த வீட்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்! என்ன வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் போன்ற விவரங்களை நான் விருப்பத்துடன் தெரிந்து கொண்டேன்.

புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் போதே,' இது நம் வீடு நம் குடும்பம்' இந்த வீட்டின் சுக துக்கங்களில் முழு மனதாக பங்கு எடுத்துக் கொள்வேன்' என்று உறுதி மொழியை மனதில் எடுத்துக் கொண்டுதான் வந்தேன். கணவரின் பெற்றோரை அன்பாக அழகாக அதே சமயம் அழுத்தமாக "அத்தை ,மாமா" என்றே அழைத்துப் பேசினேன். புகுந்த வீட்டில் யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும் என்று விரல் நுனியில் வைத்திருந்தேன். கூப்பிட்டா தான் போகணும், சொன்னால்தான் வேலை செய்யணும், பேசினாத் தான் பேசணும்ன்னு ஒரு போதும் நினைத்ததில்லை.

Representational Image
Representational Image
Photo by Pranav Kumar Jain on Unsplash

உறவுகளிடமும், நட்புகளிடமும் எங்க அத்தை இப்படி? எங்க அத்தை இப்படி? என்று ஒப்பிட்டுப் பார்த்ததேயில்லை. குடும்ப உறுப்பினர் முன் கணவரிடம் வீண் வாக்குவாதம் செய்வதை (முக்கியமாக சத்தமாக) அதாவது கோபமாக பேசுவதைத் தவிர்த்து விடுவேன். அத்தையோடு ஏதாவது ஒரு விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போகும் அவசியம் ஏற்பட்டால் கண்டிப்பாக விட்டு தந்து விடுவேன் எது சரி எது தவறு என்பதை பக்குவப்பட்ட உயர்ந்த நிலையில் இருந்து அலசி ஆராய்வது முக்கியம் பாஸ் "தானெனும் அகந்தையோடும், திமிர் பேச்சோடும் எடுத்ததற்கெல்லாம் அடுத்தவரைக் குற்றம் சாட்டியபடியே இருப்போர் எப்பொழுதும் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாதிருப்பதோடு இறுதியில் தனிமைப்பட்டு போவதும் உறுதி!"

புகுந்த வீட்டு உறவுகளை உள்ளன்போடு நேசிக்க ஆரம்பித்தேன். புகுந்த வீட்டில் ஒவ்வொருவரும் தனக்கு மிகவும் அந்தரங்கமானவர் என்று என்னை எடுத்துக் கொள்ளும் வகையில் என்னுடைய செயல்பாடுகள் இருந்தன... மொத்தத்தில் என்னால் என் புகுந்த வீட்டு உறவுகளுக்கு எப்பவுமே மகிழ்ச்சி மட்டுமே! என்னடா தலைப்புக்கும் இவள் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லை என்று யோசிக்கிறீர்களா?? இதோ வருகிறேன் சம்பந்தத்திற்கு! இப்படி எல்லாம் நான் இருந்ததால் என் பிறந்துவிட்டு உறவுகளிடம் மட்டுமல்ல... என் வீட்டிற்கு வருவோர் போவோர் அனைவரிடமும் எனது மாமாவும் அத்தையும் "ஆதிரை" போல் உண்டா?! மருமகள் என்றால் இவள் தான்! இப்படித்தான் இருக்க வேண்டும் என்றே பெருமையாக அனைவரிடமும் கூறுவார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என் அம்மாவிற்கு இதையெல்லாம் கேட்க மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இதில் ஒரு குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்... எனக்குத்தான் இவர்கள் அத்தையும் மாமாவும் ஆனால் என் சகோதரிகள் நான்கு பேருமே இவர்களை வாயார அத்தை மாமா என்றே அழைப்பர். அது மட்டுமா..! அவர்களின் மகன் /மகள் திருமணங்களின் போது மாமாவை கலந்த ஆலோசிக்காமல் எந்த ஒரு முடிவையும் எடுத்ததில்லை. ஆக எனது மாமாவும் அத்தையும் என்னை மட்டுமல்ல ( என் சகோதரிகளையும் சேர்த்து) உங்க வீட்ல உங்க எல்லாரையும் நல்லா வளர்த்திருக்காங்க அப்படின்னு அடிக்கடி கூறுவார்கள்.. மிகவும் பெருமையாக இருக்கும்.

Representational Image
Representational Image
Photo by Bella Pon Fruitsia on Unsplash

மேலே சொன்ன அனைத்தும் 20 பிளஸ் இல். நான் எப்படி நடந்து கொண்டேனோ அதேபோல் என் மகளும் (என்னைப் பார்த்து வளர்ந்ததனாலோ என்னவோ...) அவளின் அத்தை மாமாவிடம் நடந்து கொள்ள அவர்கள் என்னை பார்க்க வரும் போது என் மகளைப் பற்றி பெருமையாக சொல்லும் பொழுது நான் மானசீகமாக என் அம்மாவிற்கும் , அத்தை மாமாவிற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.. இது 50 பிளஸ் இல்.... உறவுகள் என்பது கண்ணாடி போல நாம் எப்படி பழகுகிறோமோ அப்படித்தான் அதன் பின்பங்களும். சின்ன குழந்தைகளைப் போல் எப்போதும் கலகலப்பாக இருப்போம். எப்பவும் மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வோம். அப்போதுதான்பிறந்த வீடு ,புகுந்த வீடு உறவுகள் நட்புகள் இப்படி எல்லோர் மனதிலும் நாம் ஃபெவிகால் போட்டு ஒட்டிக்கொள்வோம். அதில் சந்தேகமே இல்லை. புகுந்த வீட்டினர் 'உங்கள் மகள்' போல் உண்டா! எனபாராட்டி பெருமையாக சொல்லும் பொழுது , அதைக் கேட்கும் பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும்..!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.