Published:Updated:

90'ஸ் தீபாவளி சேட்டைகள்! | My Vikatan

Representational Image

என்னதான் நாலு மாசத்துக்கு முன்னாடியே இந்தந்த பட்டாசு தான் வாங்கனும்னு பக்கம் பக்கமா லிஸ்ட் எடுத்து வச்சிருந்தாலும்... கடைசியில கிடைக்குறது என்னவோ ஒரு துப்பாக்கியும், ஒரு பாக்ஸ் ரோல் கேப்பும் தான்... ஆனா அது தான் கெத்தே...

90'ஸ் தீபாவளி சேட்டைகள்! | My Vikatan

என்னதான் நாலு மாசத்துக்கு முன்னாடியே இந்தந்த பட்டாசு தான் வாங்கனும்னு பக்கம் பக்கமா லிஸ்ட் எடுத்து வச்சிருந்தாலும்... கடைசியில கிடைக்குறது என்னவோ ஒரு துப்பாக்கியும், ஒரு பாக்ஸ் ரோல் கேப்பும் தான்... ஆனா அது தான் கெத்தே...

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஒரு‌ நாள் தான் லீவு கிடைக்கும்... ஆனாலும் எந்தவொரு பண்டிக்கைக்குமே இல்லாத சந்தோஷம்,எதிர்பார்ப்பு கொண்டாட்டம் தீபாவளிக்கு உண்டு. 90'ஸ் கிட்ஸ் கொண்டாடுன தீபாவளியெல்லாம் வேற வேற... வேற லெவல் தான். இப்போ நெனைச்சாலும் மனசெல்லாம் சந்தோஷமும் கண்ணுல லேசா கண்ணீரும் இருக்கும். ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே அந்த ஒரு நாளுக்காகத் தான் காத்துக்கிட்டிருப்போம்... தவமா தவம் கெடப்போம்..!

அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்த காலம்... 90'ஸ் காலம்... இப்ப மாதிரி அப்போ கொரோனா எல்லாம் இல்ல... எப்படா பண்டிக்கை வரும், எப்படா மழை வரும் எப்படியாவது ஒரு நாள்... ஒரு அரை நாள் லீவு கிடைக்காதானு ஏங்கி காத்துக்கிட்டு கெடப்போம். எந்த டெக்னாலஜியுமே இல்லாத ஒரு காலம்...

சந்தோஷமான, சொர்க்கமான ஒரு காலம். எல்லாமே நண்பர்கள், உறவினர்கள்... ஸ்கூல் விட்டா வீடு... வீடு விட்டா ஸ்கூல்... எந்நேரமும் விளையாட்டு அப்பப்போ கொஞ்சம் படிப்பு..!

Representational Image
Representational Image

சரி அதவிடுங்க..! ஆமா... அப்போ எங்களுக்கு எல்லாமே தீபாவளி தான். தீபாவளியை விட சுவாரஸ்யமான பண்டிகை எதுவுமே இல்ல. வருஷம் முழுக்க அந்த ஒரு நாளுக்காகத் தான் சில்லறைகளை சேர்த்து வைச்சு காத்துக்கிட்டிருப்போம்.

புது துணி போடனும்னாலும் தீபாவளி, புது படம் பாக்கனும்னாலும் தீபாவளி... இவ்வளவு ஏன் இட்லி, தோசை வாசனையே தீபாவளி அன்றுதான் கிடைக்கும். இட்லியோ, தோசையோ... தட்டுல போட்டு நல்லா கறி கொழம்ப மேலாக்க ஊத்தி சுட... சுட... ஆவி பறக்குறத... பாக்கும் போதே இது தாண்டா தீபாவளினு இருக்கும். சுவையா சமைக்கிறதும் அதை எல்லாரும் ஒன்னா சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுறதும் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளிக் கொண்டாட்டம்.

அடுத்த நாள் தீபாவளி... இவ்வளவு சந்தோஷங்களையும் எதிர்பார்ப்புகளையும் வச்சிக்கிட்டு முன்னாடி நாள் தூங்க சொன்னா... எப்படி தூக்கம் வரும்... அந்த ஒரு நாள் இரவு முடியறதுக்குள்ள நாங்க படுற பாடு இருக்கும் பாருங்க. புள்ளதாய்ச்சி புள்ள கூட அவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டாங்க. அடுத்த நாள் விடிஞ்சதும் விடியாததுமா எழுந்த உடனே ஊதுபத்திய தேடி... பட்டாசு திரிய கிள்ளி... பதட்டத்தோட ஒரு பட்டாசை பத்த வைக்கிறதுக்குள்ள பட்டாசுக்கூட கபடி விளையாட்டுத்தான். ஒரு வழியா பத்த வச்சி தூரமா ஓடி வந்து ... காத மூடி நிப்போம்... அப்ப மட்டும் தான் பட்டாசுக்கு பயந்தது. அப்புறம் எல்லாம் கைலயே வச்சி ஆட்டம் பாம் வெடிச்சது

எல்லாம் தனிக் கதை...! அந்த பட்டாசு ஒரு குழந்தைய போல துள்ளி குதிச்சு ஒவ்வொன்னா சிதறி வெடிச்சு முடிச்சு வாசல் எல்லாம் காகிதமா கிடக்கிறத பாக்கும் போது ஒரு ஃபீல் வரும் பாருங்க... ப்ப்ப்ப்பா... அப்படி இருக்கும்..!

"குப்பையைக் கண்டு சந்தோஷப்பட்ட நாட்கள் அது. குப்பையில் கூட மகிழ்ச்சியை கண்டு பிடிச்ச நாட்கள் அது..!

குப்பையாய் இருந்தாலும் நம் வீட்டு வாசலில் இருக்கும் பட்டாசு

காகிதங்களாய் இருக்க வேண்டுமே..." (அடடே... கவிதை... கவிதை..)

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்த நாள் தீபாவளினா முன்னாடி நாள் ஸ்கூல் சீக்கிரமே விட்டுருவாங்க... அப்படியொரு கொண்டாட்டமா இருக்கும்... சீனியர் அண்ணாங்க சிலர் கிளாஸ் ரூம்லயே பட்டாசு கொளுத்திட்டு ஓடிடுவாங்க... அந்த நேரத்துல யாரும் கேட்கவும் முடியாது. யாருனு கண்டுபுடிக்கவும் முடியாது.  

தீபாவளி முடிச்சு அடுத்த நாள் ஸ்கூல் போகும் போது தீபாவளி டிரஸ் போட்டுட்டு போவோம். அதுக்காகவே அடம்புடிச்சு பேண்ட் வாங்கி குடுக்க சொல்வோம். வருஷம் முழுக்க டவுசர்லயே சுத்துன நமக்கு தீபாவளி வந்தா தான் பேண்டே கண்ணுல பாக்க முடியும். ஒரு மாசத்துக்கு முன்னாடியே அப்பா கூட்டிட்டு போய் டெய்லர் அண்ணா கிட்ட அளவு குடுத்துட்டு வந்திடுவாரு... நல்லா எறக்கமா வைச்சு தைங்க வளர்ற பையன்னு சொல்லி அடுத்து வருஷம் தீபாவளிக்கும் சேர்த்தே அளவு குடுப்பாரு... அட போ பா...!

Full Hand Shirt, கீழ மடிச்சு விட்ட பேண்ட்'னு... தீபாவளி அன்னைக்கு "சின்ராச கையிலேயே புடிக்க முடியாது" ரேஞ்சுக்கு மைனர் மாதிரி ஊரையே சுத்தி வருவோம். வம்படியா போய் எல்லார்கிட்டையும் பேசுவோம் புது துணிங்கிறது காட்டுறதுக்காகவே..!

Representational Image
Representational Image

என்னதான் நாலு மாசத்துக்கு முன்னாடியே இந்தந்த பட்டாசு தான் வாங்கனும்னு பக்கம் பக்கமா லிஸ்ட் எடுத்து வச்சிருந்தாலும்... கடைசியில கிடைக்குறது என்னவோ ஒரு துப்பாக்கியும், ஒரு பாக்ஸ் ரோல் கேப்பும் தான்... ஆனா அது தான் கெத்தே... அந்த துப்பாக்கிய கையில வச்சிருக்கும் போது ஒரு முறை சூப்பர் ஸ்டார்  மாதிரியும், ஒரு முறை விஜயகாந்தாகவும் நிறைய முறை ஜேம்ஸ் பாண்டாகவே மாறி கெத்து காட்டி வாழ்ந்த நாட்கள் அது. வேணும்னே பொண்ணுங்க வரும் போது பட்டாசு வைக்கிற மாதிரி ஆக்ஷன் காட்டுறது... அவங்க அம்மா கிட்ட திட்டுவாங்குறதுனு சில வாலிப வயசு சேட்டைகளுக்கும் பஞ்சமிருக்காது. பட்டாச இப்படி தான் பாதுக்காப்பா வெடிக்கனும்னு சில ரூல்ஸ் இருக்கும்... ஆனா அதுக்கு Opposite ஆ என்னென்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் செய்யுறது தான் நம்ம வேலையே... சாணில ஆட்டம் ஃபாம் வச்சி வெடிக்கிறது... மண்ணுல மூடி வைச்சு வெடிச்சி தெறிக்க விடுறது, கொட்டாங்குச்சி, ப்ளாஸ்டிக் பாக்ஸ பறக்க விடுறதுனு செய்யாத சேட்டைகளே இல்ல. வெடிக்காத பட்டாச எல்லாம் பொறுக்கி அதுல ஒரு புது பட்டாசு செய்யுறது...வெடிச்ச லட்சுமி வெடிக்குள்ள ஊசி பட்டாச சொறுகி பில்டப் குடுக்கிறதுனு நாள் முழுக்க நாசாவுல வேலை செய்யுற சைன்டிஸ்ட் கணக்காவே சுத்திட்டு இருப்போம்... ஆனா ராக்கெட், டபுள் ஷாட், டிரிஃப்ள் ஷாட்... செவன்ஷாட்னு அத்தனை பட்டாசும் தராத சந்தோஷத்த ஒரே ஒரு பாம்பு மாத்திரை கொடுத்திடும். 

இப்ப இருக்கவங்க பிபி, சுகர் மாத்திரை இல்லாம கூட இருந்திடுவாங்க...ஆனா எங்க தீபாவளிக்கு பாம்பு மாத்திரை இல்லாம தீபாவளியே இல்ல..! அத பத்த வைச்ச உடனே பாம்பு படம் எடுத்து வரும் பாருங்க... அட.. அட.. அட...

நாம அன்னைக்கு தான் புதுசா ரிலீஸ் ஆன புதுபட ஹீரோ மாதிரி சுத்திட்டு இருப்போம்... அப்பதான் அம்மா கூப்பிடுவாங்க...

"டேய் தம்பி.. இந்தா இந்த பலகாரத்த பக்கத்து வீட்ல குடுத்துட்டு வா'னு.." "நீ தான செஞ்ச நீயே போய் குடுத்துட்டு வர வேண்டியது தானனு சொல்ல தோணும் ஆனாலும் எதுவும் பேசாம எடுத்துட்டு வேக வேகமா போய் குடுத்துட்டு அவசரமா விளையாட ஓடுவோம்... ஆனா அஞ்சு நிமிஷம் கூட ஆகாது... மறுபடியும் அம்மா கூப்பிடுவாங்க..."

"அட... என்னமானு "ஆட்டம் பாம்" மாதிரி வெடிச்சிப்போய் நின்னா..."

"கொஞ்ச மாச்சு பொறுப்பு இருக்கா... இப்படி பொறுப்பில்லாம இருந்தா நீயெல்லாம் பெரியவனாகி எங்க உருப்பட போற. ம்ம்ம்... பக்கத்து வீட்ல பலகாரம் குடுத்தியே கிண்ணத்த வாங்கிட்டு வந்தியானு ஒரு போடு போடுவாங்க..."

" ம்மா... அத நீ சொல்லவே இல்ல... "

"ஆமா... எல்லாத்தையும் சொன்னா தான் செய்யுறது... இல்லனா இல்ல... ஒரு விஷயத்தை சொல்லாமலே செய்யனும் அதுக்கு பேர் தான் பொறுப்புங்கிறது"னு சொல்லி முடிக்கும் போது 100 வாலா பட்டாசு மாதிரி வெடிக்க போன நாம புஸ்வானம்

மாதிரி திரும்பி வருவோம்..."

ஆனா அன்னைக்கு அம்மா திட்டுன மாதிரி எல்லாம் இப்போ இல்ல... பொறுப்பா இருக்கேன்... எல்லாம் பண்றேன்... கை நிறைய சம்பாதிக்கிறேன்... தீபாவளிக்கு ரெண்டு மூனு செட் பேண்ட் சர்ட் எடுக்குறேன்... மூனு வேலையும் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தினு சாப்பிடுறேன், டிசைன், டிசைன்னா பெரிசு பெரிசா பட்டாசு

பாக்ஸ் வாங்குறேன்... எல்லாமே இருக்கு... எல்லாத்தையும் வாங்கிடுறேன் ஆனா அம்மா கையால செஞ்சு அக்கம் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் ஓடி ஓடிப் போய் குடுத்த பலகார கிண்ணங்கள்ல இருந்த சந்தோஷத்த மட்டும் எவ்வளவு விலை

கொடுத்தாலும் திரும்ப வாங்கவே முடியல..!

-கோ.ராஜசேகர், தருமபுரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.