Published:Updated:

இப்படியொரு அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா? | My Vikatan

Representational Image

ஒரு நாள் என் வீட்டுப் பணிப்பெண்னிடம் அவரைப் பற்றி சொல்லி "பாவம் அந்தம்மாவுக்கு யாரும் இல்லை போல ..இப்படி எல்லாம் கஷ்டப்படற பெரியவங்களைப் பாரத்தால் மனசெல்லாம் வலிக்குது" என்றேன்.

இப்படியொரு அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா? | My Vikatan

ஒரு நாள் என் வீட்டுப் பணிப்பெண்னிடம் அவரைப் பற்றி சொல்லி "பாவம் அந்தம்மாவுக்கு யாரும் இல்லை போல ..இப்படி எல்லாம் கஷ்டப்படற பெரியவங்களைப் பாரத்தால் மனசெல்லாம் வலிக்குது" என்றேன்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நான் எப்போதும் வீட்டில் செய்யும் உணவுகளை கொஞ்சம் அதிகம் செய்து அதை பேக் பண்ணி சாலையில் உணவுக்கு வழியற்று இருக்கும் ஆதரவற்றோருக்கு அளிப்பது வழக்கம். பெரும்பாலும் மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து வழங்குவேன் .

ரெகுலராக ஒரு முதிய பெண் கையில் குச்சியுடன் என்னிடம் வந்து வாங்குவார் .அவரைப் பார்த்தால் நன்றாக வாழ்ந்து இப்படி ஆனவர் போல் பாவமாக இருக்கும் .கைகளை ஐயா அம்மா என ஏந்தியபடியே சாலையில் செல்லும் யாரையும் விடமாட்டார் .அவரின் கையேந்தல் பலரையும் நிறுத்தி அவரிடம் காசுகளை போட வைக்கும் .

ஒரு நாள் என் வீட்டுப் பணிப்பெண்னிடம் அவரைப் பற்றி சொல்லி "பாவம் அந்தம்மாவுக்கு யாரும் இல்லை போல ..இப்படி எல்லாம் கஷ்டப்படற பெரியவங்களைப் பாரத்தால் மனசெல்லாம் வலிக்குது" என்றேன்.

உடனே அவர் "யாரு அந்தக்குச்சி போட்டு நடக்குமே அந்தம்மாவா ? அட நீங்க வேற ..ரெண்டு பசங்க இருக்காங்க ..ரெண்டு பெரும் நல்ல நிலமையில இருக்காங்க ..இந்தம்மா மருமகள்கள் கிட்ட ஒழுங்கா இருக்கப் பிடிக்காம தனியா இருக்குது. அவனுகளும் கூப்பிட்டுப் பார்த்தாங்க ..இது பிடிவாதமா போக மாட்டேன்னு இப்படி பிச்சை எடுத்து அவங்க பேரைக் கெடுக்குது . அவனுங்களும் என்ன பண்ணுவாங்க ..பிரச்சினை இல்லாம இருந்தா சரின்னு கம்முனு இருக்காங்க . " என்றாரே பார்க்கலாம் .

Representational Image
Representational Image

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது . இப்படிக் கூட இருப்பாங்களா? மருமகள்களிடம் சகித்துப் போகாமல் தனியே இருந்து இப்படி அடுத்தவரிடம் கையேந்துவது எவ்வளவு தரமற்ற வாழ்க்கை ? அடுத்த முறை அவரைப் பார்த்த போது இதைப்பற்றி கேட்டேன் ..அதற்கு அவர் சொன்ன பதில் .." உனக்கு இஸ்டம் இருந்தா தா ..கஷ்டமா இருந்தா போடாதே "

இப்போதெல்லாம் அவரைக் கடந்து சென்று விடுகிறேன் .என்ன செய்வது ? நியாயமற்ற செயலைக் கண்டால் கோபமே வருகிறது .இவரைப் போன்ற பெரியவர்களை நினைத்தால் அந்தக் குடும்பத்தின் பிள்ளைகள் எப்படி இருப்பார்களோ எனும் வருத்தமும் வருகிறது ..!

-சுபா தியாகராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.