வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
"ஆடி" என்ற உடனே நினைவுக்கு வருவது 'ஆடித்தள்ளுபடி' . 30 ஆண்டுகளுக்கு முன்புவரை 'ஆடி' என்றால் ,'ஆடி அமாவாசை',' ஆடிக் கிருத்திகை',' ஆடித்தபசு', ஆடி வெள்ளி... புதுமண தம்பதிகள் ஆடி மாதத்தில் அவரவர் வீட்டில் இருப்பது... இவையெல்லாம் நினைவுக்கு வரும் ஆனால் இப்பொழுது எல்லாம்,'ஆடி'ன்னா "ஆடித்தள்ளுபடி' மட்டும்தான் நினைவுக்குவருகிறது.
உண்மையாகச் சொல்லப்போனால், ஆடி மாதத்தில் அப்படி எந்த சிறப்பும் கிடையாது. பொதுவாக திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் குறைவாகவே நடைபெறுவதால் ஏற்படும் மந்த நிலையை குறைக்கவும், ஆண்டு முழுதும் தேங்கி கிடக்கும் பொருட்களை விற்றுத் தீர்க்கவும் இந்த 'விற்பனை உத்தி' மேற்கொள்ளப்படுகிறது என்றே சொல்லலாம்.
சில வருடங்களுக்கு முன்பு வரை நகை, புடவை கடைகளில் மட்டுமே இருந்த இந்த தள்ளுபடி இப்பொழுது' பல வீட்டு பயன்பாட்டு பொருள்' விற்கும் கடைகளுக்கும் பரவி உள்ளது .
50 சதவிகித தள்ளுபடி என்பதெல்லாம் சுத்த ஹம்பக். இவையெல்லாம் சாத்தியமே இல்லை! 'அக்ஷ்யதிருதியையில் நகையின் விற்பனை ஒரு நாள் என்றால், ஆடி தள்ளுபடி ஒரு மாதம் அவ்வளவே தான்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆடித்தள்ளுபடியில் பொருட்களை வாங்குவதற்கு நான் எதிரி அல்ல! ஆனால் சில விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆடித்தள்ளுபடிக்கு செல்வதென முடிவாகிவிட்டால், காலை உணவை முடித்த கையோடு கிளம்பி விடுங்கள். விற்பனை பிரிவில் இருக்கிறவர்களும் உற்சாகத்துடன் துணிகளை எடுத்துப் போடுவார்கள். பகல் என்பதால் துணிகளின் உண்மையான நிறத்தைப் பார்க்க முடியும். சின்ன சின்ன டேமேஜ்களை கூட எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
வித் பிளவுஸ் புடவைகளில் கூடுதல் கவனம் தேவை. பிளவுஸின் நீளத்தை சரிபார்த்து வாங்குவது மிகவும் நல்லது. 40 அல்லது 50 சென்டிமீட்டரில் கூட பிளவுஸ் பிட் இருக்கும் .(அவற்றை கைகுட்டையாகத் தான் பயன்படுத்த முடியும்)
காட்டன் துணிகளை இந்த சமயத்தில் முடிந்தவரை வாங்காமல் இருப்பது நல்லது .என் தோழி தன் கணவருக்கு ஆசை ஆசையாக வாங்கிய காட்டன் சட்டை ஒரு சலவைக்கு பிறகு அவளது மகனுக்கு தான் சரியா இருந்தது.
அதேபோல, தள்ளுபடி புடவைகளின் நீளம் குறைவாக இருக்கக்கூடும். அதனால் புடவையைப் பிரித்து நீளத்தைச் சரி பார்த்து வாங்குங்கள். (புடவை வாங்க போய் தாவணி வாங்கிய கதையாகிவிடப்போகிறது) இப்படிதான் கடந்த வருடம் ஆடித்தள்ளுபடியில் பள பள கவர்களில் பேக் செய்யப்பட்டிருக்கும் சுடிதார் செட்டுகளை வாங்கினாள் என் தோழி. தனக்கு மிகவும் பிடித்த எம்.எஸ் ப்ளூவில் ஜரி ஒர்க் செய்த சுடிதாரை தள்ளுபடியில் வாங்கி வந்தாள்.(ஓரேபெருமைவேறு) வீட்டிற்கு வந்த பிறகுதான் சுடிதாரின் பாட்டம் இல்லை என்று தெரிய வந்தது. பேக் செய்யப்பட்டிருந்தாலும் நிறத்தை மட்டும் பார்த்து செலக்ட் செய்யாமல் டாப் ,பாட்டம் ,துப்பட்டா எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்து வாங்குவது முக்கியம் பாஸ்.

சில சமயம் டாப்பும், பாட்டமும் மேட்சிங் இல்லாமல் நிறம் மாறி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல சிவப்பு ,பச்சை, மெரூன் ,நீலம் போன்ற அடர் நிறங்களில் துணிகளை வாங்குவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இவற்றில் டேமேஜ் கண்டுபிடிப்பது சிரமம் . பேண்ட் சட்டை வாங்கும்போது தையல் மற்றும் ஜிப்புகளை சரிபார்த்து வாங்கும்போது பாக்கெட்டுகளையும் செக் செய்யவும் என் கல்லூரி தோழிஒருவர் தன் கணவருக்கு வாங்கிய பேண்ட்டில் பாக்கெட் கிழிந்திருக்க, அது தெரியாமல் அவர் அதில் பர்ஸை வைத்திருக்கிறார்.
அப்புறமென்ன?? (தொலைந்து போன பர்ஸூக்காக அவர் வீட்டில் திட்டு வாங்கியது ஆடி போனஸ்) எத்தனை சதவிகிதம் தள்ளுபடி கொடுத்தாலும் பட்டுப் புடவைகளை தயவு செய்து வாங்காதீர்கள். கடந்த வருடம் (என் பேச்சைக் கேட்காமல்) என் சகோதரி முப்பது பர்சன்ட் தள்ளுபடியில் தனக்கு பிடித்த ஆரஞ்சு கலரில் எம்எஸ் ப்ளூ பார்டர் போட்ட பட்டு புடவை எடுத்து வந்தார். வரலட்சுமி நோன்புக்கு அதை கட்டிக்கொண்டு சுவாமி முன் விழுந்து வணங்க, பட்டுச்சேலை காலில் பட்டு பட்டனை கிழிந்தது. (கூடவே அவள் மனதும் கிழிந்தது) ஜமிக்கி, ஸ்டோன்/ மிரர் ஒர்க், பேட்ச் ஒர்க் என வேலைப்பாடுகள் அதிகம் நிறைந்த ஆடைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இவற்றில் இருக்கும் டேமேஜ் அத்தனை சீக்கிரம் கண்ணுக்கு தெரியாது .பூதக்கண்ணாடி அணிந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.
கட்டும் போதுதான் காலைவாரிவிடும். அப்போதுயாரை நொந்தும் பயனிருக்காது.(கூடவே கணவர் மற்றும் பிள்ளைகளிடம் திட்டு வாங்குவது போனஸோ போனஸாக கிடைக்கும்). இவ்வளவு ரிஸ்க் இருக்கா? ஆடித்தள்ளுபடியில்ன்னு நீங்க யோசிக்கிறது புரியுது. ஆனா ஆடி மாதம் வந்து விட்டாலே காலும் கையும் பரபரங்குது .ஒருநாள் ரிலாக்ஸாக ஷாப்பிங் பண்ணா.. மனசு லேசாகுமே! என்று யோசிக்கும் ரகமா நீங்கள்...
அப்போ பெட் கவர், போர்வை, தலையணை உறை, திரைச்சீலை, மிதியடி ,டவல் ,மேஜை விரிப்பு, நவராத்திரி நாட்களில் சுமங்கலிகளுக்கு கொடுக்க டூ பைடூ 100 சென்டிமீட்டர் பிளவுஸ் பிட் போன்றவற்றை மட்டும் ஆடி தள்ளுபடியில் வாங்குங்கள். இவற்றில் அதிக டேமேஜ் இருக்காது. 90% ஸ்டாக் கிளியரன்ஸ் ஆகத்தான் இருக்கும். தரமான பொருட்கள் குறைவான விலையில் நாங்களும் வாங்கி தெறிக்க விடுவோமில்ல" "ஆடித்தள்ளுபடியில்" அப்படின்னு நீங்க சத்தமா சொல்லலாம்.

மொத்தத்தில் ஆடித்தள்ளுபடின்னு காதுல பூ சுத்திற போறாங்க... கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை வீண் விரயம் ஆக்கிடாதீங்க!
ஆடித்தள்ளுபடியில் பொருட்களைத்தான் வாங்க வேண்டுமா!? என்ன? அதற்கு பதில் உங்களால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை... பூக்கார அம்மாவுக்கு பூ வைப்பதற்கான கூடை, காய்கறிகளை தள்ளுவண்டியில் விற்பவருக்கு காலில் போட்டுக் கொள்ள நல்ல செருப்பு, வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு அத்தியாவசிய மளிகை சாமான்கள், இளநீர் விற்கும் அண்ணாவுக்கு இளநி வெட்டும் சமயம் கறை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு ஏப்ரன் அல்லது இரண்டு டி.ஷர்ட், தினசரிகுப்பை எடுக்க வரும் நபருக்கு தரமான கிளவுஸ்கள், மாஸ்க். அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு புதுத்துணி... இப்படி நம் கண் முன்னேநடமாடும் நபர்களுக்கு நம்மாலான உதவிகளை இந்த "ஆடித்தள்ளுபடியில்" செய்து சந்தோஷப்படலாமே!
" சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தானே!"
இப்படி பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் நபர்களுக்கு நீங்கள் உதவி செய்ய...
அடி அம்மாடி... ஆ(அ)டிஆத்தாடி.. இளமனசொன்னு'றெக்க' கட்டி பறக்குது சரிதானா என்று பாடுவீங்க!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.