Published:Updated:

துல்லியமா கண்காணிக்குறாங்க! - க்வாரன்டீன் அனுபவம் பகிரும் அபுதாபி தமிழர்

நான் அரசு நிறுவனத்தில் பணி புரிவதால் கையில் டிராக்கிங் வாட்ச் கட்டப்பட்டு “Home Quarantine” செல்ல அனுமதிக்கப்பட்டேன்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலை நகரம் அபுதாபி. இதனை சுற்றி பல நூறு கிலோமீட்டர் தூரம் வரை பாலைவனத்தில் எண்ணெய் வயல்கள்நிறைந்து காணப்படுகின்றன. இதில் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்துக்குட்பட்ட எண்ணெய் வயல் பகுதியில் நான் பணிபுரிந்து வருகிறேன்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் முற்றிலும் தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி முதல் இந்திய விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

Abu Dhabi
Abu Dhabi

இரண்டு மாத விடுமுறைக்குப் பின்னர் கடந்த மாதம் 17-ந் தேதி நான் அபுதாபி வந்து சேர்ந்தேன். இங்கு தனிமைப்படுத்துதல் என்னும் Quarantine விதிமுறைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது, அதனை இந்தியா மற்றும் இதர வெளிநாட்டினர் எவ்வாறு கவனமுடன் பின்பற்றி வருகிறார்கள் என்பதை உங்களுடன் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

அபுதாபி சுகாதாரத்துறை குவாரண்டைனை இரு பிரிவுகளாக பிரித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்று ‘Home Quarantine’ மற்றொன்று ‘Government Quarantine’. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தியவர்களுக்கும் செலுத்தாதவர்களுக்கும் இந்த Quarantine பொருந்தும் .

அரசு நிறுவனங்கள் மற்றும் இதர தனியார் நிறுவனங்களில் வரையறுக்கப்பட்ட சம்பளத்தில் பணிப் புரிவோர் பெரும்பாலும் “Home Quarantine ” க்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதன்படி அபுதாபி விமான நிலையத்தை வந்தடையும் போது, நமது பாஸ்போர்ட், விசா விவரங்கள் சரிபார்க்கப்படும். இதனை தொடர்ந்து அதிகாரிகள் “Home Quarantine” செல்ல அறிவுறுத்துவார்கள். அப்போது நமது பாஸ்ப்போர்ட்டின் முன் பக்கத்தில் ஒரு பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

இதனைத் தொடர்ந்து Immigration, பின்னர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை, அதன் பிறகு “Home Quarantine” செல்பவர்களுக்கு அபுதாபி சுகாதாரத்துறையால் அனுமதிக்கப்பட்ட டிராக்கிங் வாட்ச் (Tracking Watch) கையில் அணிவிக்கப்படும்.

Abu Dhabi
Abu Dhabi

நான் அரசு நிறுவனத்தில் பணி புரிவதால் கையில் டிராக்கிங் வாட்ச் கட்டப்பட்டு “Home Quarantine” செல்ல அனுமதிக்கப்பட்டேன். இதன் படி நாம் வெளியே சென்று, நமக்காக புக்கிங் செய்யப்பட்ட ஹோட்டல் அல்லது வீடு இருப்பின் அங்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கை கடிகாரம் ஜிபிஎஸ் முறையில் இயங்கக்கூடியது. நமது இருப்பிடத்தை அடைந்தவுடன் அதனை “ஆன்” செய்ய வேண்டும். பின்னர் சுகாதாரத்துறையினால் வழங்கப்பட்டியிருக்கும் 'வாட்ஸ் அப்’' எண்ணிற்கு நமது இருப்பிடத்தை தெரிவிக்க வேண்டும். மொத்தம் 10 நாட்கள் கொண்ட இந்த “Home Quarantine” -ஐ மேற்கொள்ளும் போது 4-வது மற்றும் 8-வது நாட்கள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனை இலவசமாக அரசு அறிவுறித்தியுள்ள மையங்களில் செய்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு கொரோனா பரிசோதனைக்கு செல்லும்போது நாம் போகும் வாகனத்தை விட்டு கீழே இறங்கக்கூடாது, செவிலியர் வந்து நம் காரில் இருந்தபடியே நமக்கு பரிசோதனை செய்வார், பின்னர் வேறு எங்கும் செல்லாமல் மீண்டும் நமது இருப்பிடத்திற்கு வந்து தனிமைப் படுத்துதலை தொடர வேண்டும். இந்த தனிமைப்படுத்துதலின் போது நாம் நமது ஹோட்டல் அறையை விட்டோ அல்லது வீட்டை விட்டோ வெளியே கண்டிப்பாக செல்லக்கூடாது, மீறி வெளியே சென்றால் ஜிபிஎஸ் மூலம் சுகாதாரத்துறையின் கட்டுப்பாடு அறைக்கு தகவல் சென்று விடும்.

இந்த விதிமுறை மீறலுக்கு அபுதாபி சுகாதாரத்துறை 50 ஆயிரம் Dirhams -களை அபராதமாக விதிக்கும், இது இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகும்.

abudhabi
abudhabi

கொரோனா வைரஸ் வெளிநாட்டினர் மூலம் பரவுவதை தடுக்க இந்த கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளது. அதே சமயம் விதிமுறைக்காக அல்லது அவசர காரியங்களுக்காக தங்கள் நாடுகளுக்கு சென்று விமான தடையால் தத்தம் நாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகம் திரும்பி தங்கள் பணியை தொடரவும் குடும்பத்துடன் இணையவும் வசதியாக மேற்கண்ட விதிமுறையை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

10-வது நாள் அரசு ஏற்படுத்தியுள்ள Watch Removal Centre- க்கு சென்று கைக்கடிகாரத்தை கழற்றிக்கொள்ளலாம். அப்போது நாம் ‘Home Quarantine’ இருந்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும், அதனை நமது பணி இடங்களில் காண்பித்து பணியை தொடரலாம்.

இரண்டாவது வகை, அபுதாபி சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ள “Government Quarantine”. இது அபுதாபி நகரின் புற நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சாதாரண தொழிலாளர் பணிக்கான விசா மற்றும் இதர விசா உடையவர்கள் விமான நிலையத்தில் இருந்து பஸ்களில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு கையில் கை கடிகாரம் அணியும் முறை கிடையாது.

உணவு, இருப்பிடம், குடிநீர் மற்றும் கொரோனா பரிசோதனை என அனைத்தும் இங்கு இலவசமாக வழங்கப்படும். இந்த Quarantine-ன் கால அளவும் 10நாட்கள். இதனை நிறைவு செய்த பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்.

சில சமயங்களில் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருப்போரும் இங்கு அனுப்பி வைக்கபடுகிறார்கள், இது தவிர்க்க முடியாதது, இதன் பின்னர் அந்தந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட‘Govt Quarantine’ அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்கள் ஊழியர்களை அங்கிருந்து விடுவித்து ‘Home Quarantine’- க்கு அனுப்பி வைக்கின்றன. அப்போது கை கடிகாரம் அணிய தேவையில்லை.

Watch removal centre
Watch removal centre

'Home Quarantine’ சற்று சவாலானது. நமது கைகளில் கட்டப்படும் கைக்கடிகாரத்தை நாம் கழற்ற முடியாது. விமான நிலையத்தில் இதனை Screw மூலம் Lock செய்து விடுவார்கள். குளிக்கும் போது, உறங்கும் போது, என எல்லா நேரத்திலும் இந்த கடிகாரம் உடலில் ஒட்டியே இருக்கும். இது ஒரு Water Resistant Watch .இதனை சார்ஜ் செய்ய சார்ஜரும் ஒரு Power bank -ம் வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மூன்று முறை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சார்ஜ் சரியாக செய்யாவிட்டால் கைக்கடிகாரம் Low Battery ஆகி Off ஆகிவிடும். இது நேர்ந்தால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போன் மூலம் எச்சரிக்கை விடப்படும். இது தொடர்ந்தால் அபராதமும் விதிக்கப்படும்.

நான் 10-நாட்கள் Home Quarantine -ஐ முடித்து கைக்கடிகாரத்தை கழற்றிவிட்டேன். எனது நிறுவனம் கூடுதலாக 10 நாட்கள் Quarantine நிர்ணயித்தது. ஆகமொத்தம் 20 நாட்கள் ஒரே அறையில் எனது Quarantine -ஐ வெற்றிகரமாக நிறைவு செய்து எனது பணிக்கு திரும்பியுள்ளேன்.

Watch with power bank
Watch with power bank

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது இந்த மாதம் 5-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசியின் இரு தவணை டோஸ்களை செலுத்தியவர்கள் Home or Government Quarantine மேற்கொள்ள தேவையில்லை என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கு 10 நாட்கள் Quarantine கட்டாயம் உண்டு.

கொரோனா பரவலை தடுக்க அபுதாபி சுகாதாரத்துறை துல்லியமாக கண்காணித்து வரும் Quarantine கட்டுப்பாடுகள் உலகத்தரம் வாய்ந்தவை என்று சொன்னால் அது மிகையல்ல.

-மதிபிரபா

அபுதாபி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு