Published:Updated:

வாழ்க்கையே போராட்டம் தான்! - அரசியல் நிர்ணய சபையும் அம்பேத்கரின் வெற்றியும்

அம்பேத்கர்

அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபைக்குள் நுழையும் கதவு அல்ல ஜன்னல் கூட மூடப்பட்டுவிட்டது. அவர் சபைக்கு வருவதை தடுப்போம் என சர்தார் வல்லபாய் பட்டேல் வெளிப்படையாகவே பேசினார்..

வாழ்க்கையே போராட்டம் தான்! - அரசியல் நிர்ணய சபையும் அம்பேத்கரின் வெற்றியும்

அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபைக்குள் நுழையும் கதவு அல்ல ஜன்னல் கூட மூடப்பட்டுவிட்டது. அவர் சபைக்கு வருவதை தடுப்போம் என சர்தார் வல்லபாய் பட்டேல் வெளிப்படையாகவே பேசினார்..

Published:Updated:
அம்பேத்கர்

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் , இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றியதில் முதன்மையானவர் என்று போற்றப்படும் புரட்சியாளர் அம்பேத்கர் அரசியல் நிர்ணயசபையில் நுழைவதற்கு ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருந்தது.

இந்தியாவில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் 1946 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது . ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் வாக்களித்து (ராஜ்ய சபா தேர்தல் போல ) அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் இருந்தது.

அரசியல் நிர்ணய சபை மூலமாக தான் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட வேண்டுமா ? என்று 06.05.1945 இல் கூட்டம் ஒன்றில் பேசும் போது அம்பேத்கர் அப்படி ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார். ஆனால் அரசியல் நிர்ணயசபை தான் அதை செய்யப்போகிறது என்றதும், அந்த சபையில் நுழைவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்தார். அம்பேத்கர் அவர்கள் வெற்றிபெற்று அரசியல் நிர்ணய சபைக்குள் வருவதை பலரும் விரும்பவில்லை . அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபைக்குள் நுழையும் கதவு அல்ல ஜன்னல் கூட மூடப்பட்டுவிட்டது. அவர் சபைக்கு வருவதை தடுப்போம் என சர்தார் வல்லபாய் பட்டேல் வெளிப்படையாகவே பேசினார் .

அம்பேத்கர்
அம்பேத்கர்

296 தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு 31 தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது . சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து அரசியல் நிர்ணய சபைக்கு பிரதிநிதிகளை அனுப்பவேண்டும் என்ற சூழலில் மும்பை பகுதி அம்பேத்கருக்கு எதிராக இருந்தது . இதனால் கொல்கத்தாவில் இருக்கும் சிலரை தனக்கு ஆதரவு தரும்படி அம்பேத்கர் கோரினார். அவர்களை நேரில் சந்தித்து பேசினார் . ஆனால் அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்கிறோம் என காரணம் காட்டி முடியாது என்று சொல்லிவிட்டார்கள் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்னும் மூன்று வாரங்கள் தான் (ஜூலை 17 , 1946) தேர்தலுக்கு இருந்தது . மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர் , பரப்புரை என தேர்தல் பணியில் தீவிரம் காட்டிக்கொண்டு இருக்க அம்பேத்கர் அவர்கள் போட்டியிடும் தொகுதி மட்டும் இன்னும் உறுதியாகாமல் இருந்தது . 1943 இல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஒரு ரயில்வே நிலையத்தின் ஒய்வு அறையில் இருந்த போது அவரை சந்தித்து பேசி நட்புறவு ஏற்படுத்திக்கொண்டு பிறகு அவருடைய தலைமையில் இயங்க தொடங்கிய ஜோகிந்தர் நாத் மண்டலுக்கு அன்று நிலவிய அரசியல் நெருக்கடியை கடிதம் வாயிலாக அம்பேத்கர் தெரிவித்தார்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

இந்திய அரசியல் நிர்ணய சபைக்குள் அம்பேத்கர் செல்லாமல் போனால் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்து யார் பேசுவது ? அவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை உணர்ந்த ஜோகிந்தர் நாத், ``மும்பை , கொல்கத்தா கைவிட்டால் பரவாயில்லை இந்த கிழக்கு வங்கத்தின் அமைச்சர் நான் அழைக்கிறேன் கிழக்கு வங்கத்தில் உள்ள ஜெசூரே -குல்னா தொகுதி சார்பில் வந்து போட்டியிடுங்கள்’’ என்று அம்பேத்கருக்கு துணிச்சலாக அழைப்பு கொடுத்தார் . இயல்பாக தலைவர்கள் தான் தொண்டர்களுக்கு தொகுதி ஒதுக்குவார்கள். ஆனால் அம்பேத்கர் விவகாரத்தில் அம்பேத்கரின் உண்மை தொண்டராக அன்று இருந்த ஜோகிந்தர் நாத் தன்னுடைய தலைவர் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை தீர்மானித்தார். தொண்டரின் அழைப்பை ஏற்றார் அம்பேத்கர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிழக்கு வங்கத்தின் முக்கியமான முஸ்லீம் லீக் தலைவராகவும் பிற்காலத்தில் பாகிஸ்தான் பிரதமராகவும் இருந்த கவாஜா நஜிம்முதின் அம்பேத்கருக்கு ஆதரவு தந்தார். அவரும் ஜோகிந்தர் நாத் மண்டலும் அம்பேத்கருக்கு ஆதரவு திரட்டினர். ஜோகிந்தர் நாத் மண்டல் பிற்காலத்தில் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார் என்பதும் பிறகு முரண்பட்டு இந்தியா வந்து குடியேறினார் என்பதும் கவனிக்கத்தக்கது .

அம்பேத்கர்
அம்பேத்கர்

அம்பேத்கரின் எதிர்ப்பாளர்கள் அவரின் தோல்வியை உறுதிப்படுத்த எல்லா முயற்சியும் எடுத்தார்கள் . அவர் வெற்றி பெறவே கூடாது என போராடினார்கள் . காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கயநாத் பிஸ்வாஸ் , என்பவர் கடத்தப்பட்டார் . எப்படியோ அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து சென்று வாக்குபதிவில் கலந்துக்கொண்டார். இந்நிலையில் அம்பேத்கரின் வெற்றியை தடுத்து நிறுத்த பார்க்கிறார்கள் என்கிற செய்தி வேகமாக பரவ, தங்கள் தலைவருக்காக பஞ்சாப் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணிபுரிந்த தலித் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தில் வாயிலில் கைகளில் வாளோடு காத்துக்கொண்டு வெற்றி முழக்கமிட்டுக்கொண்டு இருந்தார்கள். ( ஜெய் பீம் ! ஜெய் பீம் என்று முழங்கி இருக்கலாம் ) பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டம் தல்லம் பகுதியில் இருந்து வந்திருந்த புத்சிங் இதில் குறிப்பிடத்தக்கவர். இந்தியாவின் கவனம் முழுவதும் அம்பேத்கர் வெற்றி பெற்றாரா ? இல்லையா என்பதிலேயே இருந்தது .

ஒருவழியாக தேர்தல் முடிவுகள் வெளியானது

1. ஜோகிந்தர் நாத் மண்டல் ( பட்டியல் சாதி கூட்டமைப்பு ) / தலித் / பாரிசல் தொகுதி 2. முகுந்த் பெஹாரி மாலிக் ( சுயேச்சை ) / தலித் / குல்னா தொகுதி 3.துவரிக்காநாத் பருரி / காங்கிரஸ் / தலித் / பாரிட்ப்பூர் தொகுதி . 4.கயநாத் பிஸ்வாஸ் / காங்கிரஸ் / தலித் / தங்கேல் தொகுதி .5.நாகேந்திர நாராயண ரே / சுயேச்சை / ராஜபன்ஷி சமூகம் ( சில இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் , சில இடங்களில் பட்டியல் பிரிவிலும் இருக்கிறார்கள் ) / ரங்க்பூர் தொகுதி 6.க்ஷேத்ர நாத் சிங்ஹா / காங்கிரஸ் / ராஜபன்ஷி சமூகம் / ரங்க்பூர் தொகுதி 7.பிர் பிர்சா / காங்கிரஸ் / பழங்குடியினர் / முர்ஷிதாபாத்

ஆகியோரின் ஆதரவை பெற்று அரசியல் நிர்ணய சபைக்குள் நுழைந்தார் புரட்சியாளர் அம்பேத்கர் .

அம்பேத்கர்
அம்பேத்கர்

தேர்தல் நடந்த நாளில் பல இடங்களில் தலித் மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது . சீக்கிய மதத்தை சார்ந்த தலித்கள் வாளோடு வீதிக்கு வந்து போராட வேண்டி இருந்தது . சில காலத்திற்கு பிறகு இந்திய - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட புரட்சியாளர் அம்பேத்கர் வெற்றி பெற்ற தொகுதி பாகிஸ்தானோடு இணைந்தது . அம்பேத்கருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது . பிறகு காங்கிரஸ் கட்சியே முன்வந்து ,மும்பையில் முகுந்த் ராமராவ் ஜெயகர் என்பவரை பதவி விலக செய்து அந்த இடத்தில் இருந்து மீண்டும் புரட்சியாளர் அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கு அழைத்து கொண்டது . அதன் பிறகு அவர் சட்ட அமைச்சராக இருந்து பதவி விலகினார் , ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இறக்கும் வரை அந்த உறுப்பினராகவே இருந்தார் .

"வாழக்கையில் சிலருக்கு போராட்டம் என்பது ஒரு பகுதி

ஆனால் சிலருக்கு வாழ்க்கையே போராட்டம் தான்"

என்கிற இந்த வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ புரட்சியாளர் அம்பேத்கருக்கு பொருந்தும்.

-வழக்கறிஞர் அ .அசோக்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism