Published:Updated:

பசியாற்றும் அம்மா உணவகங்கள்! - சில யோசனைகள் | My Vikatan

அம்மா உணவகம்

சரியாக பராமரிக்கப்படவில்லை, குடிநீர் வசதி சரியில்லை என்று விமர்சனங்கள் எழுந்தாலும் பெரும்பாலான அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் பலருக்கு தேவாமிர்தமாய் இருக்கின்றன.

பசியாற்றும் அம்மா உணவகங்கள்! - சில யோசனைகள் | My Vikatan

சரியாக பராமரிக்கப்படவில்லை, குடிநீர் வசதி சரியில்லை என்று விமர்சனங்கள் எழுந்தாலும் பெரும்பாலான அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் பலருக்கு தேவாமிர்தமாய் இருக்கின்றன.

Published:Updated:
அம்மா உணவகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட "அம்மா உணவகங்கள்" ஏழை எளிய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. எழுத்தாளர் வீரபாண்டியன் எழுதி யுவபுரஸ்கார் விருது வென்ற "பருக்கை" நாவல், அரசு கல்லூரி விடுதிகளில் வழங்கப்படும் தரமற்ற உணவுகள் குறித்து ஆழமாகப் பேசியிருக்கும். அதுபோல சரியான உணவு வசதி இல்லாத கல்லூரி மாணவ மாணவிகளும், போதுமான வருவாய் இல்லாத போதும் அரக்கப்பறக்க வேலைக்கு கிளம்பி ஓடும் பல இளைஞர் இளைஞிகளும் நகர பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு செயல்பட்டு வரும் உணவகங்களில் ஒருசில இடங்களில் உணவு முறையாக சமைப்பதில்லை, தட்டு டம்ளர் போன்றவை சரியாக பராமரிக்கப்படவில்லை, குடிநீர் வசதி சரியில்லை என்று விமர்சனங்கள் எழுந்தாலும் பெரும்பாலான அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் பலருக்கு தேவாமிர்தமாய் இருக்கின்றன. அப்படிபட்ட உணவகங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால் தற்போதைய அரசு மேலும் சில அம்மா உணவகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தது. அதற்கான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

வரவேற்கப்பட வேண்டிய விஷியம் என்றாலும் சில முதியவர்கள் கையில் போதுமான சில்லரை இல்லாமல் அம்மா உணவக வாசலில் நின்று சில்லறைகளை எண்ணிப் பார்த்து அதற்கு தகுந்தது போல பத்தும் பத்தாமல் சாப்பிட்டு செல்வதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அல்லது அவர்கள் கையில் பணம் இருக்கும் நேரத்தில் உணவகங்களில் சாப்பாடு தீர்ந்து போயிருக்கிறது. ஆக, அம்மா உணவகங்களில் இருந்து அரைவயிற்றுடன் திரும்புபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய உண்மை மனிதர்களின் கதை தொகுப்பான "அறம்" புத்தகத்தில் "சோற்றுக்கணக்கு" என்று ஒரு சிறுகதை இடம்பெற்றுள்ளது. அந்தச் சிறுகதை கேரளாவில் ஹோட்டல் நடத்தும் ஒருவர் லாப நோக்கில் ஹோட்டல் நடத்தாமல் மற்றவர் பசி போக்கும் சேவை நோக்கில் உணவுகள் வழங்குவார். பணம் இருப்பவர்கள் சாப்பிட்ட உணவுக்கு உரிய பணத்தை அந்த ஹோட்டல் உண்டியலில் போட்டுச் செல்லலாம். பணம் இல்லாதவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு கையில் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது வந்து அந்த ஹோட்டலில் உள்ள உண்டியலில் பணம் போட்டுவிட்டு செல்லலாம். யாரிடமும் அந்த ஹோட்டல் நிர்வாகி பணம் குறித்து கொஞ்சமும் அலட்டிக்கொள்ள மாட்டார்.

வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்தச் சிறுகதையை போலவே, "ஜெய் பீம்" திரைப்பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கிய "கூட்டத்தில் ஒருத்தன்" படத்தில் பெரிய பெரிய உணவகங்கள், விசேஷ வீடுகள் போன்றவற்றில் மிச்சமாகும் உணவுகளை சேகரித்து வந்து பசியால் வாடும் எளிய மக்களுக்கு உணவளிப்பார் நாயகன். பிறகு சுயமாக உணவு சமைத்து எளிய மக்களுக்கு அதை கிடைக்க செய்து பணம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்காமல் நீங்கள் விருப்பபட்டது கொடுக்கலாம் என்று சொல்ல, மக்கள் தங்களால் முடிந்த பணத்தை அவர் கடைகளில் உள்ள உண்டியலில் செலுத்திவிட்டு செல்வார்கள். "ஆரம்பத்துல இதெல்லாம் சரிவராது என்று நினைத்தோம், ஆனால் மக்கள் எங்களை கைவிடவில்லை" என்று நாயகன் நம்பிக்கையுடன் வசனம் பேசுவார். அந்தக் காட்சிகளில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷியம், மிச்சமான உணவுகளை சேகரிப்பது.

Representational Image
Representational Image

எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம் மலையாளத்தில் எழுதிய "பிரியாணி" சிறுகதையை எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் "பிரியாணி" என்று அதே தலைப்புடன் மொழிபெயர்த்துள்ளார். விகடன் தடம் இதழில் வெளியான அந்தச் சிறுகதையில் வடமாநில தொழிலாளி ஒருவர் செல்வ செழிப்பான ஒரு வீட்டிற்குச் செல்ல, அந்த வீட்டு விசேஷத்தில் மிச்சமான பிரியாணியை குழிதோண்டி புதைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். குழிக்குள் இறங்கி மிச்சமான பிரியாணியை காலால் மிதித்து மிதித்து சமதளப்படுத்தியபடியே அந்த வடமாநில தொழிலாளி தன் குடும்ப நபர்கள் இறந்துபோனதை பற்றி இன்னொரு நபரிடம் சொல்வார்.

"எப்படி இறந்து போனார்கள்?" என்று அந்த நபர் கேட்க, மிஞ்சிய பிரியாணியை காலால் மிதித்து புதைத்தபடியே வடமாநில தொழிலாளி சொல்வார் "பசியால" என்று. அச்சிறுகதையில் வருவது போல பெரும்பாலான வீட்டு விசேஷகளில் மிஞ்சும் உணவுகள், திருவிழாவின் போது மிஞ்சும் அன்னதான உணவுகள் போன்றவற்றை குழிதோண்டி புதைக்கும் சம்பவங்கள் இன்றும் நம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒருபக்கம் பசியால் வாடி இறந்துபோன மனிதர்கள் மண்ணுக்குள் புதைவதும், இன்னொரு பக்கம் மிஞ்சிய உணவுகள் மண்ணுக்குள் புதைக்கப்படுவதும் காலங்காலமாக நடந்து வருகிறது. மிகச் சிலரே அந்தந்த பகுதிகளில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் போன்றவற்றிற்கு எடுத்துச் சென்று மிஞ்சிய உணவை (எச்சில் படாத - பந்தியில் பரிமாறப்படாத பாத்திரத்தில் புத்தம்புதிதாய் மிச்சமிருக்கும் சாப்பாடு) அங்கிருப்பவர்களுக்கு தங்களது கைகளால் பரிமாறிவிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாதிரி எல்லோரும் செய்ய முன்வருவதில்லை. அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.

Representational Image
Representational Image

ஆதலால் விசேஷ வீடுகள், திருவிழாக்கள் போன்றவற்றில் மிச்சமாகும் உணவுகளை (கெட்டுப்போகாத - நஞ்சு போகாத உணவுகளாக இல்லாமல் அன்றைய நாளில் புதிதாக சமைத்தது) அம்மா உணவகங்களில் கொண்டுவந்து கொடுக்க அரசு மக்களிடம் அறிவுறுத்தலாம். அப்படி கொடுப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக அரசு சிறுதொகையை அளிக்கலாம்.
சமீபத்தில் புதுச்சேரி திண்டிவனம் அருகே பூவரசன் என்கிற 25 வயது இளைஞர் "சோற்றுக்கணக்கு", "கூட்டத்தில் ஒருத்தன்" போன்ற படைப்புகளில் உள்ளது போலவே தள்ளுவண்டி கடை வைத்து மக்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கு விலை நிர்ணயிக்காமல் உண்டியலை தான் பயன்படுத்துகிறார். இதை போலவே அரசு நடத்தும் அனைத்து அம்மா உணவகங்களில் சமைக்கும் உணவுகள் மட்டுமின்றி, அந்தந்த பகுதிகளில் மிச்சமாகும் உணவுகளை முறையாக சேகரித்து அதற்கு விலை என்று எதையும் நிர்ணயிக்காமல் உண்டியல் வைத்து "சோற்றுக்கணக்கு" சிறுகதையை போல பயன்படுத்தினால் எளிய மக்கள் பலருடைய வாழ்க்கை காப்பாற்றப்படும்.

ஆறிப்போன, மிச்சமான பழைய சாப்பாட்டை கொடுத்து அதற்கு பணம் வசூலிப்பது முறையன்று என்று சிலர் விமர்சிக்க நேரிடலாம். ஆதலால் சாப்பிடும் சாப்பாட்டிற்கு பெரிய தொகை என்று எதுவுமில்லாமல் அதை உருவாக்க உழைத்தவர்களுக்கு, வீணாக்காமல் பகிர நினைத்த நல்உள்ளத்திற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய்க்குள் ஏதேனும் தொகையை உங்களது விருப்பத்திற்கேற்ப உண்டியலில் போட்டாலே போதுமானது என்றும் விருப்பமிருந்தால் அதை விட அதிகமான பணத்தையும் உண்டியலில் செலுத்தலாம் என்றும் பயனாளர்களுக்கு அரசு அறிவுறுத்தலாம். இதை நடைமுறைக்கு கொண்டு வந்தால் சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், வரம்பின்றி மது அருந்தும் பொருப்பற்ற ஆண்களுக்கு இது சாதகமாகவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சிலர் கருதுகின்றனர். உண்மையில் அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. எல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது.

லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செயல்படும் எளியவர்களின் பசிப்பிணி போக்கும் அம்மா உணவகங்களை அதிகப்படுத்தும் தற்போதைய அரசு, வீணாகும் உணவுப் பொருட்களையும் அதை மக்களிடம் முறையாக கொண்டு செல்வதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.