Published:Updated:

ஆண்களுக்கும் 'மெனோபாஸ்' உண்டு! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

பெண்களுக்கு இறுதி மாதவிடாய் ஒரு இயற்கையாக விளைவு என்றால் ஆண்களுக்கும் அதற்கு சமமாக ஏதாவது இருக்கும் அல்லவா? உண்டு.

ஆண்களுக்கும் 'மெனோபாஸ்' உண்டு! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

பெண்களுக்கு இறுதி மாதவிடாய் ஒரு இயற்கையாக விளைவு என்றால் ஆண்களுக்கும் அதற்கு சமமாக ஏதாவது இருக்கும் அல்லவா? உண்டு.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பெண்களுக்கு இறுதி மாதவிடாய் போல் ஆண்களும் அப்படி ஏதாவது உண்டா? இது நியாமான, சற்று சிந்திக்கக்கூடிய கேள்வி. பெண்களுக்கு இறுதி மாதவிடாய் ஒரு இயற்கையாக விளைவு என்றால் ஆண்களுக்கும் அதற்கு சமமாக ஏதாவது இருக்கும் அல்லவா? உண்டு. அதைத் தான் ஆண்களின் மெனோபாஸ் (ஆன்ட்ரோபாஸ் Andropause) என்கிறார்கள்.


சமீபத்திய ஆராய்ச்சிகள் மூலமாக ஆண்களுக்கும் மெனோபாஸ் உண்டு என ஆதாரப்பூர்வமாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இதை ஆண்ட்ரோபாஸ் என்று சொல்கிறார்கள். ஒரு ஆணுக்கு சுமார் 17 18 வயதில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது. முப்பது வயது வரை இந்த ஹார்மோன் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும். அதன் பின் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும். அந்த ஹார்மோன் 10% குறைய ஆரம்பிக்கிறது. ஐம்பது வயதில் இது இன்னும் அதிகமாகக் குறையும். அதாவது சுமார் எழுபது வயதில், வாலிப பருவத்தில் இருந்ததில் வெறும் 10% மட்டுமே இந்த ஹார்மோன் சுரக்கும். பெண்களுக்கு எனில், அவர்களுடைய ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியாவது நின்று போகும் நிலைமையையே மெனோபாஸ் என்கிறார்கள். இந்த ஹார்மோன் சுரப்பது நின்று போய்விட்டால் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்களுக்கும் இதேபோல் ஒரு நிலை ஏற்படுகிறது. அவர்களது சிறப்பு ஹார்மோனான டெஸ்ட்டோஸ்டீரோன் உற்பத்தியாவது அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் நின்று விடும் அல்லது குறைந்து விடும். அந்த நிலையையே ஆண்களின் மெனோபாஸ் (ஆண்ட்ரோபாஸ்) என்கிறார்கள். ஆண்ட்ரோபாஸைக் கண்டு பயப்படத் தேவையில்லை. காரணம், இது இயற்கையாக எல்லா ஆண்களுக்குமே ஏற்படும் ஒரு கட்டாய நிகழ்வு.


உலகில் சந்ததி விருத்திக்காகத் தான் பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி, டீன்ஏஜ் வயதில் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐம்பது வயது வரை அவர்களுடைய சிறப்பு ஹார்மோன் சுரக்கிறது. அந்த ஹார்மோன் சுரப்பதால் தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் குழந்தையை உருவாக்கும் தகுதி. உடல் அழகு எல்லாம் வருகிறது. ஐம்பது வயதுக்குப் பின், அவர்களுடைய சந்ததி விருத்தி நல்ல படியாக முடிந்தபின், இயற்கையாகவே இந்த ஹார்மோன் குறைந்து விடுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆண்ட்ரோபாஸால் ஏற்படும் மாற்றங்கள்

  • உடலில் உருண்டு திரண்டுருக்கும் ஆணின் சதை மென்மையாகி சதையின் அளவும் குறையும்.

  • சின்ன செயல்களுக்கே உடம்பு அதிகம் களைப்பாகி விடும்.

  • ஞாபக சக்தி குறைவாக இருக்கும்.

  • தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைவாகி விடும்.

  • அப்படியே ஈடுபட்டாலும் ஆண்களின் இன உறுப்பின் விறைப்புத் தன்மை குறையும். விறைப்புத் தன்மை வந்தாலும்கூட விந்து உடனே வெளிவராது. மிகத் தாமதமாகத்தான் வரும்.

  • எந்த வேலையிலும் முழு கவனம் வைத்து செய்ய முடியாமல் போகும். துாக்கம் வராமல் அவதியுற நேரும்.

  • நெஞ்சில் படபடப்பு ஏற்படும்.

  • தோலின் பளபளப்புத் தன்மை குறைந்து தோல் வறட்சியாக மாறும். மனசு அடிக்கடி சோர்வுக்கு உள்ளாகும்.

  • முகச் சவரம் செய்வதும் குறையும்.

  • நடைதள்ளாடும், கீழே விழ வாய்ப்புண்டாகும். எலும்பும் பலவீனம் அடையலாம்.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

இந்த பாதிப்புகள் எல்லா ஆண்களுக்கும் வரும் என்று சொல்வதற்கில்லை. அவரவர் உடல் வளம், அவர்களுடைய வாழ்க்கை முறை, தவிர அவர்கள் உண்ணும் உணவு போன்றவற்றைப் பொறுத்து இந்த பாதிப்புகளின் அளவும் மாறலாம். மெனோபாஸ் அடையும் வயதும் மாறலாம். ஆண்ட்ரோபாஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கண்டு ஆண்கள் பயப்பட வேண்டியதில்லை. சிலருக்கு இந்த பாதிப்புகள் எவ்வித தொல்லைகள் இல்லாத அளவில் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆண்ட்ரோபாஸ் ஏற்படுவதற்கு வேறு சில காரணங்கள்

  • மருந்துகள் சிமிட்டடின், கீட்டகினோசால், ஒமிபிராசால், ரானட்டடின், எத்தினால்

  • புற்றுநோயுக்கு கொடுக்கும் சிகிச்சை - மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறைகள்

  • நோய்கள் பரிசோதனை கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு, நீரிழிவு நோய், காச நோய், தீவிர அறுவை சிகிச்சை மற்றும் தீக்காயங்களினால் ஏற்படும் மன உளைச்சல்,

பரிசோதனை

இரத்தத்தில் உள்ள டெஸ்ட்டோஸ்டீரோன் அளவு குறைந்து இருக்கும்.

Representational Image
Representational Image

சிகிச்சை

வயதான காலத்தினாலும் ஆண்ட்ரோபாஸ் பருவத்தில் ஏற்படும் சில தொல்லைகள், வரலாம். அப்படிப்பட்டவர்களுக்கு ஹார்மோன் சிகிச்சை முறையினால் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காது. ஹார்மோன் சிகிச்சையினால் பல தீயவிளைவுகளும் உண்டு. ஆகையால் மருத்துவர்கள், அவசியம் இந்த சிகிச்சை முறை தேவை என்றால் மட்டுமே பரிந்துரைப்பார். டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோனை பல வழிகளில் உடலில் செலுத்தலாம்.

அவை:

  • டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோனை ஊசி வழியாக செலுத்தலாம்.

  • இந்த ஹார்மோன் மாத்திரை வடிவிலும், தோலில் ஒட்டுக்கொள்ளும் தட்டைகள் வடிவிலும் (Patch) கிடைக்கிறது.

இந்த சிகிச்சை முறையினால் பாலுணர்வு அதிகரிக்கும், சதையின் பலம் கூடும், மனம் மகிழ்ச்சியடையும். ஆனால் ஹார்மோன் சிகிச்சைமுறையினால் பக்கவிளைவுகளும் வர வாய்ப்புண்டு. ஆண்களின் மார்பகம் பெரிதாகும், உடலில் நீர் கோர்த்துக் கொள்ளும். கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை தோன்றலாம். பிராஸ்ட்டேட் சுரப்பியில் புற்றுநோய் உள்ளவர்களுக்கும், P.S.A.எனும் பரிசோதனை இரத்தத்தில் அதிகம் உள்ளவர்களுக்கும் இச்சிகிச்சையை கொடுக்கக்கூடாது. இருதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஹார்மோன் சிகிச்சை முறை எல்லா ஆண்களும் தேவைப்படாது. முடிந்த அளவிற்கு இந்த மருந்து இல்லாமலேயே தியானம் மற்றும் பிராணயாமம் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்தி வாழ்க்கை முறையை சரியாக அமைத்துக் கொள்ளலாம். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஒரு சில ஆண்களுக்கே ஆண்ட்ரோபாஸ் தொல்லை சற்று அதிகமாக இருக்கும். அவர்களுக்கு மட்டும் இரத்தத்தில் உள்ள டெஸ்ட்டோஸ்டீரோன் அளவை வைத்து ஹார்மோன் சிகிச்சையை மிக்க கவனத்துடன் கொடுக்க வேண்டும். இச்சிகிச்சையை எந்த அளவிற்கு நன்மை உண்டோ அந்த அளவிற்கு தீமையும் உண்டு. ஆகையால் மருத்துவர்கள் மிக்க கவனத்துடன் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.