Published:Updated:

கோபம் நல்லது? | My Vikatan

Representational Image

கோபம் முழுமையாக தவறு என்று சொல்லிவிட முடியாது. அது எப்போது அளவை மீறுகிறதோ அப்போதுதான் அது நஞ்சாக மாறுகிறது. சில நேரங்களில்..

கோபம் நல்லது? | My Vikatan

கோபம் முழுமையாக தவறு என்று சொல்லிவிட முடியாது. அது எப்போது அளவை மீறுகிறதோ அப்போதுதான் அது நஞ்சாக மாறுகிறது. சில நேரங்களில்..

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கோபம் ஓர் உணர்வு. அதை அனைவருமே கடந்து வந்திருப்போம். பல நேரங்களில் கோபம் நம்மை மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்களையும் பாதிக்கிறது.

சில நேரங்களில் கோபத்தில் நாம் என்ன செய்கிறோமென்றே நமக்கு தெரிவதில்லை.

எப்போதெல்லாம் கோபம் வரும்?

1. நாம் எதிர்பார்ப்பது போல் மற்றவர்கள் நடந்துகொள்ளவில்லை என்றால் நமக்கு கோபம் வரும்,

2. நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்கவில்லை என்றால் கோபம் வரும்,

3. நம்மை அவமான படுத்துவோர் மீது கோபம் வரும்,

4. நம் இயலாமையை எண்ணி நம் மீதே நமக்கு கோபம் வரும்.

5. விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கோபம் வரும். என ஒவ்வொரு மனிதனுக்கும் பல கரணங்கள் உண்டு.

Representational Image
Representational Image

கோபத்தின் வகைகள் :

முதல் வகை:

கோபம் வந்ததால் சிலர் தங்கள் அருகில் இருக்கும் பொருள்களை தூக்கி எறிவார்கள், தகாத வார்த்தைகள் பேசுவார்கள். உடல் ரீதியாக மற்றவரை காய படுத்துவார்கள்.

இரண்டாம் வகை:

சிலர் மற்றவர் மீது உள்ள கோபத்தை தன் மீதோ அல்லது வேறு ஒருவர் மீதோ காட்டுவார்கள்.

தன்னை தானே காய படுத்திக்கொள்ளவது, உணவு உண்ணாமல் இருப்பது. தன்னுடன் இருப்பவர்களின் மீது எரிந்து விழுவது போன்ற காரியங்களை செய்வார்கள்.

மூன்றாம் வகை:

வேறு சிலர் கோபம் வந்தால் அந்த நபருடன் பேசுவதை நிறுத்தி விடுவார்கள், அவர்கள் எது சொன்னாலும் அதற்கு நேர்மாறாக செய்து தங்கள் கோபத்தை வெளிப்படுவார்கள்.

கோபத்தின் நன்மைகள்:

கோபம் முழுமையாக தவறு என்று சொல்லிவிட முடியாது. அது எப்போது அளவை மீறுகிறதோ அப்போதுதான் அது நஞ்சாக மாறுகிறது.

சில நேரங்களில் நம் கண் முன்னே நடக்கும் தீய காரியங்களை கண்டு நாம் கோபப்படுகிறோம். அந்த கோபம் நம் சுற்றத்தை மாற்ற முயற்சி செய்ய சொல்கிறது.

நம் குழந்தைகள் தவறு செய்தால் கோபத்தில் திட்டுகிறோம், அது அவர்களை நல்வழி படுத்தத்தான்.

நம்மால் சாதிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் கோபமும் நம்மை நம் இலக்கை நோக்கி உந்தித்தள்ளுகிறது.

Representational Image
Representational Image

கோபத்தின் தீமைகள்.

கோபம் நம் மனதிற்கு மட்டுமல்ல, உடலுக்கும் கேடுதான்.

கோபத்தால்,

1. மன அழுத்தம் உண்டாகும்.

2. ரத்த கொதிப்பு ஏற்படும்,

3. இதயம் பலவீனமாகும்,

4. மூளையில் பாதிப்பு ஏற்படும்,

இன்னும் பல,

கோபம் வரும் பொழுது என்ன செய்வது?

1. மௌனமாக இருக்க பழகுவோம். கோபத்தில் நாம் பேசுகின்ற வார்த்தைகள் நம் வாழ்க்கையில் தீராத வலியை ஏற்படுத்திவிடுகிறது.

2 ஓர் சூழ்நிலை நம்மை கோபமடைய செய்யும் என்றால் அந்த இதை விட்டு வெளியே சென்று விடுவது மிகவும் நல்லது.

இவை இரண்டுமே கோபத்தால் ஏற்பட போகின்ற விளைவை கட்டுப்படுத்தும்.

கோபத்தை எவ்வாறு குறைப்பது:

1 தினமும் குறைந்தது 10 நிமிடமாவது கண்களை மூடி தியானம் செய்வோம்.

2. நேர்மறையான சிந்தனைகளை சொல்லும் புத்தகங்களை காணொளிகளை பார்ப்போம்.

3. நாம் மற்றவர்களை மாற்ற நினைப்பதற்கு முன் நம்மை நாம் மாற்றிக்கொள்வோம்.

கோபத்தை கொல்ல முயற்சிக்கவேண்டாம் ஆனால் அதை வெல்ல முயற்சி செய்வோம்.

நன்றி,

நரேந்திரன் பாலகிருஷ்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.