Published:Updated:

அறிஞர் அண்ணா ஒரு அரசியல் வரலாறு ! | My Vikatan

அறிஞர் அண்ணா

1967 இல் ஆட்சியை கைப்பற்றியது திமுக, அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது அவர் கொண்டு வந்த முத்தான மூன்று திட்டங்கள்....

அறிஞர் அண்ணா ஒரு அரசியல் வரலாறு ! | My Vikatan

1967 இல் ஆட்சியை கைப்பற்றியது திமுக, அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது அவர் கொண்டு வந்த முத்தான மூன்று திட்டங்கள்....

Published:Updated:
அறிஞர் அண்ணா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அறிஞர் அண்ணா, திராவிட நிலமும், தமிழ் இனமும் உள்ளவரை வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு அரசியல் தலைவன். 15 செப்டம்பர் 1909 இல் காஞ்சிபுரத்தில் நடராசன் மற்றும் பங்காரு அவர்களுக்கும் மகனாக ஒரு மாமனிதன் பிறந்த போது, அந்த காஞ்சிபுரத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, திராவிட இனமும், ஒட்டுமொத்த தமிழுலகும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் தங்கள் ஊரிலிருந்து, தங்கள் இனத்திலிருந்து ஒரு பெர்னான்சா உருவாவர் என்று. ஆம் அவர்தான் தென்னாட்டு பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா. இவரை தென்னாட்டு பெர்னாட்ஷா என்று வெறுமனே இந்திய துணைக்கண்டத்தோடு மட்டும் சுருக்கி கொள்ளாமல், "ஆசியாவின் பெர்னாட்ஷா" என்று சொல்வதே சிறந்ததாக இருக்கும். ஏன்? தன் எழுத்து மற்றும் பேச்சுக்கள் மூலம் ஆசியாவிலே அரசியல் சார்ந்த கருத்துக்களை மிக நேர்த்தியாக, மிக விளக்கமாக மக்களிடம் எடுத்துச் சென்றவர் அறிஞர் அண்ணாவை தவிர வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் என்னவோ அறிஞர் அண்ணா அவர்கள் இந்த உலகை விட்டு சென்ற போது கண்ணீரோடு வழியனுப்ப வந்த கூட்டம் மட்டும் ஏறக்குறைய ஒன்று அரை கோடி, அப்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏறக்குறைய மூன்றை கோடி. உலக வரலாற்றில் ஒரு தலைவனை வழியனுப்ப இப்படி ஒரு கூட்டம் என்றும் கூடியதும் இல்லை, இனி கூடுமா என்பதும் சந்தேகமே. அண்ணா என்ற இந்த மூன்று எழுத்தை இந்த மக்கள் எந்த அளவு நேசித்திருப்பார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

பள்ளி இறுதி படிப்பை முடித்த அண்ணா அவர்கள் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத காரணத்தால் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். அதன் பின் 1928 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி. ஏ பட்டம் பெற்றார். 1930 இல் திருமதி ராணி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். 1935 இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் நீதி கட்சி சார்பில் பெத்து நாயக்கன் பேட்டையில் போட்டியிட்டு அவர் தன் தேர்தல் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். நீதி கட்சி, அதன் பின் திராவிடர் கழகம் என்று பயணித்த அண்ணா அவர்கள் 17 செப்டம்பர் 1949 அன்று திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துவதாக அறிவித்து, அதன் பின் சென்னை ராபின்சன் பூங்காவில் முதல் பொதுக்கூட்டத்தை தொடங்கி தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை புரட்டி போட்ட ஒரு அரசியல் இயக்கத்தை தலைமையேற்று நடத்த தொடங்கினார்.

1957 ம் ஆண்டு, சென்னையில் நடந்த தேர்தல் சிறப்பு மாநாட்டில், அதிகாரமும், வரி விதிக்கும் உரிமையும், வருவாயும் மத்திய அரசுக்கே பெருமளவில் உள்ளன, மாநில அரசுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருவாய்க்கு வழியில்லாமல் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.எனவே மாநிலங்களுக்கான வரிவிதிக்கும் உரிமையும், அதிகாரங்களும் வெகுவாக அதிகரிக்கப்பட்டு, மத்திய ஆட்சிக்கான வரிவிதிப்பு, அதிகார வரம்பும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் போன்ற மாநில சுயாட்சி சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

26 ஜனவரி 1965 அன்று அப்போதைய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி இந்தி தான் ஆட்சி மொழி என்று கொண்டு வந்தார். இதை எதிர்த்து பாராளுமன்றத்தில் " விளைவு குறித்து அஞ்சாமல் இந்தியை எதிர்த்து போராடுவோம். இந்தியை எதிர்க்கும் போராட்டத்தில் 4 ஆண்டுகள் அல்ல, 40 ஆண்டுகள் ஆனாலும் சிறைக்குப் போக தயாராக இருக்கிறேன்” என்று அண்ணா அவர்கள் முழங்கினார்கள். இதன் மூலம் அண்ணா அவர்கள் அந்த அந்த மாநிலங்களுக்கென தனி தனி மொழி உள்ளது, அது காக்கப்பட்டு மாநில சுயாட்சியின் ஒரு வடிவமான மொழி பாதுகாப்பை அன்றே வலியுறுத்தினார். எப்போதெல்லாம், இந்தி திணிப்பு என்ற அரக்கன் மத்திய அரசிடமிருந்து பீறிட்டு வருகிறதோ, அப்போதெல்லாம் அதற்கெதிராக குரல் கொடுப்பதன் மூலம் தமிழுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மாநில மொழிகளுக்கும் ஆதரவாக இந்திய ஒன்றியத்தில் எழுந்த ஆதரவு குரல் அண்ணாவின் குரலே. மேலும், இந்தி மொழி ஆட்சி மொழி என்றபோது, பாராளுமன்றத்தில் அது பற்றி பேசிய அண்ணா " பெரும்பான்மை அடிப்படையிலே எல்லாம் முடிவு செய்யப்படும் எனில், பெரும்பான்மையாக உள்ள எலியை தேசிய விலங்காக அறிவிக்காமல் புலியை அறிவித்தது ஏன்? பெரும்பான்மை அடிப்படையில் காக்கையை தேசிய பறவையாக அறிவிக்காமல் மயிலை அறிவித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பி எதிராளிகளை திணறடித்தார்.

அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர்.
அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர்.

இந்தி திணிப்பை அப்படியே விட்டால், அது தமிழ் என்ற ஒரு மொழி இந்த நிலத்தில் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் செய்து விடும் என்று திடமாக நம்பிய அண்ணா அவர்கள். உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமும், இந்தியாவிற்குள் தொடர்பு கொள்ள இந்தி என்று இரு மொழிகள் தேவை இல்லை என்பதை விளக்கும் விதமாக " பெரிய நாய் நுழைய பெரிய கதவும், சிறிய நாய் நுழைய சிறிய கதவும் என்று வைப்பதை விட பெரிய கதவு வைத்து விட்டால் பெரிய மற்றும் சிறிய நாய் என்று இரு நாய்களும் சென்று வர முடியும் என்று கூறினார். இதன் மூலம் ஆங்கிலம் படிப்பதன் மூலம் உலகத்துடனும் மற்றும் இந்திய ஒன்றியத்துடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். இதற்கு எதற்கு இந்தி என்றார். அவரது சொல்வது படி இந்தி என்பது இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஒரு வெற்று சுமை(Extra Lugage)  என்பது நமக்கு விளங்குகிறது.   

1967 இல் ஆட்சியை கைப்பற்றியது திமுக, அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது அவர் கொண்டு வந்த முத்தான மூன்று திட்டங்கள் " சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது, இந்தியற்ற இருமொழி கொள்கை, புரோகிதரற்ற சுயமரியாதை திருமணம்." சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர்  பெற்றது தமிழ் பேசும் இந்த பெரும் நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களுக்கு ஒரு பெருமையை பெற்று தந்தது. இரண்டாவது இருமொழி கொள்கை என்பது நாற்பதாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட அன்னை தமிழை காத்து, ஐநூறு ஆண்டு பழமையான இந்திக்கு தமிழ் மண்ணில் சாவு மணி அடித்தது. மூன்றாவது சுயமரியாதை திருமணம், தமிழர்களின் வாழ்வில் சுயமரியாதையை காத்தது. இப்படி பல அளப்பரிய சாதனைகளை இந்த மண்ணில் நிகழ்த்தி காட்டியதால் என்னவோ, அண்ணாவின் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற கூக்குரலும் அவர் நிகழ்த்திய சாதனைகளோடு சேர்ந்தே வந்தது. அண்ணாவுக்கு எதிராக அன்று வந்த கூக்குரல், நேற்று கலைஞர், இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிராகவும் தொடர்கிறது.  இன்னும் தொடரும், அதைப்பற்றியெல்லாம் எள்ளளவும் அஞ்சாத இயக்கம் தான் திமுக என்று அன்றே அண்ணாவும், கலைஞரும் உணர்த்தி விட்டார்கள். இது தவிர, இந்திய வரலாற்றில் காங்கிரஸ் எனும் தேசிய கட்சியை வீழ்த்தி ஒரு  மாநில கட்சி ஆட்சியை பிடித்தது என்றால் அது அண்ணா தலைமையிலான திமுகவே, அண்ணா தொடங்கி வைத்த அந்த அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது, ஆம், 1967 க்கு பிறகு இதுவரை தேசிய கட்சிகள் ஆட்சியை பிடிக்க முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு.

Annadurai.C.N
Annadurai.C.N

1949 இல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் அடுத்த சில ஆண்டுகளிலேயே  15 சட்டமன்ற உறுப்பினர்கள், 50 சட்டமன்ற உறுப்பினர்கள், என்று அடுத்தது சென்னை மாகாண ஆட்சியை பிடித்து விடக்கூடும் என்று எண்ணி அஞ்சிய டெல்லி இந்தி ஏகாதிபத்தியம் திமுகவை ஒழித்து கட்ட வேண்டும் என்று எண்ணி, 1962 இல் நேஷனல் இண்டெகரேஷன் கமிஷன் ஒன்றை சி.பி. ராமசாமி அய்யர் அவர்களின் தலைமையில் நேரு அவர்கள் அறிவித்தார்.  இதன் மூலம் திமுகவை தடை செய்ய எண்ணி நெருக்கடி கொடுத்த அந்த வேளையில், இதை எல்லாம் நன்கு அறிந்த அண்ணா அவர்கள், கொள்கை பிடிப்புடன் லட்சக்கணக்கான இளைஞர்களை கொண்டிருந்த திமுக என்ற என்ற இந்த மாபெரும் இயக்கத்தை சிதைந்து விடாமல் கட்டி காக்கும் பொருட்டு திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டு மாநில சுயாட்சியை நோக்கி குரல் எழுப்ப தொடங்கினார்.

 அரசியல் சிந்தனையற்று பின்தங்கி கிடந்த தமிழ் சமுதாயத்தை அண்ணா அவர்கள் தன் எழுத்துக்களாலும், பேச்சுகளிலும் தட்டி எழுப்பியவர். தமிழ் நாட்டை அண்ணா ஆட்சி செய்தது என்னவோ இரண்டு ஆண்டுகள் என்றாலும் யாரும் செய்ய முடியாத அளப்பரிய சாதனைகளை செய்து காட்டியவர் அவர். "காஞ்சிபுரத்திலிருந்து வந்து மாபெரும்  கழகத்தை கட்டியவர், பாமரனாக இருந்து பாராளுமன்றத்தை தன் வசப்படுத்தியவர், குடிசையிலிருந்து வந்து கோபுரம் ஏறியவர்" அன்று அண்ணாவைப் பற்றிய பெருமைகளை அடுக்கி கொண்டே போகலாம். அதனால் தான் சொல்கிறோம் அறிஞர் அண்ணா ஒரு சாதாரண மனிதரல்ல , அவர் ஒரு "அரசியல் வரலாறு."

 மேலும், திராவிட சமுதாயத்திற்கு தன் அரசியல் சிந்தனை மூலம்  அறிவொளி ஏற்றிய அறிஞர் அண்ணா அவர்களை அவருடைய 113 வது பிறந்த நாளில் நினைவு கூறுவோம்.  

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.