Published:Updated:

அசுரன் படத்தின் உண்மையான ஹீரோ யார்?

அசுரன்

வெக்கை நாவலை படித்தவர்களுக்கு, "அசுரன்" படத்தில் எது புத்தகத்தில் உள்ள காட்சிகள், எது வெற்றிமாறனால் இணைக்கப்பட்ட காட்சிகள் என்பது தெளிவாய் தெரியும். அதன்படி பார்த்தால்....

அசுரன் படத்தின் உண்மையான ஹீரோ யார்?

வெக்கை நாவலை படித்தவர்களுக்கு, "அசுரன்" படத்தில் எது புத்தகத்தில் உள்ள காட்சிகள், எது வெற்றிமாறனால் இணைக்கப்பட்ட காட்சிகள் என்பது தெளிவாய் தெரியும். அதன்படி பார்த்தால்....

Published:Updated:
அசுரன்

வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட "அசுரன்" படத்தில் அப்பா-மகன் உறவு அவ்வளவு உணர்வுபூர்வமாக காட்டப்பட்டிருக்கும். வெக்கை நாவலிலும் அந்த எமோசன் தான் பெரிதும் பேசப்படும்.

வெக்கை நாவலை படித்தவர்களுக்கு, "அசுரன்" படத்தில் எது புத்தகத்தில் உள்ள காட்சிகள், எது வெற்றிமாறனால் இணைக்கப்பட்ட காட்சிகள் என்பது தெளிவாய் தெரியும். அதன்படி பார்த்தால் பிளாஷ்பேக் காட்சிகளும் அதில் வரும் சிவசாமி, மாரியம்மா, விஸ்வநாதன், முருகன் போன்ற கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க வெற்றிமாறனால் எழுதப்பட்டது.

ஆனால் புத்தகம் படிக்காமல் அசுரன் படம் பார்த்தவர்களுக்கு பிளாஷ்பேக் தான் படத்தின் தொடக்கம் என்பது போல் தெரிய வாய்ப்பு உண்டு. படத்தை அங்கிருந்து பார்க்கத் தொடங்கினால் "அப்பா - மகன்" உறவைக் காட்டிலும் "அண்ணன் - தம்பி" எமோசன் தான் அதிகமானதாய் தெரிகிறது.

அசுரன்
அசுரன்

முருகன் - சிவசாமி:

ஒருபக்கம் தம்பி சிவசாமி சாராயம் காய்ச்சுகிறான். இன்னொரு பக்கம் அண்ணன் முருகன் நில உரிமைக்காகப் போராடுகிறான். ஒருகட்டத்தில் சாதிவெறி பிடித்த சாராயக்கடை முதலாளி, சிவசாமியை "நீ என் கால நக்கிப் பிழைக்கற நாய்" என்பதுபோல் நடத்துகிறான். இவ்வளவு நாள் முதலாளியை அப்பாவாகப் பார்த்த சிவசாமி, "முதலாளி என்னை என்னவாகப் பார்த்தார்" என்பதை உணர ஆரம்பிக்கிறான். அப்போது அண்ணன் முருகனின் தொடர் போராட்டங்களும் அவர் பேசும் "போராடுனும்டா, போராடுனாத்தான் கிடைக்கும்" வார்த்தைகளும் சிவசாமிக்கு சரியெனப் படுகிறது.

அண்ணன் முருகன் வழியில் தம்பி சிவசாமி பயணத்தை தொடங்க அதிகாரவர்க்கத்தினர் சூழ்ச்சி செய்து, முதலில் புரட்சி பேசுபவனை போட்டுத்தள்ளனும் என்று முருகனை வெட்டுகின்றனர். அந்த இரவுநேரத்தில் வேற விஷயத்திற்காக சைக்கிளை மிதிக்க தொடங்கிய சிவசாமி, "டேய் சிவசாமி உங்கண்ணன் முருகன வெட்டிப்புட்டாங்கடா" என்ற குரலை கேட்டதும் அதிர்கிறான். அதன்பிறகு அவன் குடும்பத்தையும் அழித்துவிட்டார்கள் எனத் தெரிந்ததும் சிவசாமி அண்ணனை கொன்ற சாதிவெறி மிருகங்களை வெட்டிச் சாய்க்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முருகன் - சிதம்பரம்:

சிவசாமிக்கும் பச்சையம்மாளுக்கும் இரண்டு மகன்கள். அதில் முதல் மகனுக்குத் தன் அண்ணன் பெயரான முருகன் என்ற பெயரையும் இரண்டாவது மகனுக்குச் சிதம்பரம் என்ற பெயரையும் சூட்டுகிறான் சிவசாமி. எந்நேரமும் புரட்சி, போராட்டம், உரிமை என்றே சுற்றிக்கொண்டிருக்கும் தன் அண்ணன் முருகன் பெயரை வைத்ததாலோ என்னவோ "நமக்குத் தேவையானத நாம தான்பா அடிச்சு வாங்கனும்... நம்ம நிலத்த எதுக்குப்பா விடனும்" என்று அதிகாரவர்க்கத்துக்கு அடிபணியாதவனாக இருக்கிறான் மூத்த மகன் முருகன். அவனை வடக்கூரான் அணி வெட்டிச் சாய்க்கிறது. "அண்ணன் தைரியம் யாருக்கும் வராது, இன்னிக்கும் எல்லாமே அப்படியேதான் இருக்கு... அதே காத்து, அதே பாறை, தேன்தட்டு, ஆனா அண்ணன் மட்டும் இல்ல" என்று வருந்தும் தம்பி சிதம்பரம் இப்போது தன் அண்ணன் முருகனோட சட்டையை அணிந்துகொண்டு சென்று வடக்கூரானை வெட்டிச் சாய்க்கிறான்.

அசுரன்
அசுரன்

சிவசாமி - சிதம்பரம்:

சிவசாமி, சிதம்பரம் இருவரும் தன் அண்ணன்களை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். இருவரும் அப்பா - மகன் என்பது ஒருபக்கம் இருந்தாலும், இருவருமே அண்ணன்களை பலிகொடுத்துவிட்டு எதிரியைப் பழிக்குப் பழி வாங்கிவிட்டு மிச்ச வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்காக ஓடிக் கொண்டிருக்கும் வெவ்வேறு வயதுடைய இரண்டு தம்பிகள். இருவருடைய உள்மனதிலும் "எனக்கொரு அண்ணன் இருந்தான்... சும்மா நெருப்பு மாதிரி இருப்பான்... ப்ச் அண்ணன் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்..." என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கிறது. கிளைமேக்ஸில் படிப்பின் அவசியம் பற்றி பேசிய பிறகு சிவசாமி - சிதம்பரம் இருவரும் மாறிமாறி புன்னகைப்பார்கள். அப்போது சிதம்பரத்துக்கு அருகில் அவனுடைய அண்ணன் முருகன் (டீஜே அருணாச்சலம்) ஆத்மாவும், சிவசாமிக்கு அருகில் அவனுடைய அண்ணன் முருகன் (சுப்ரமணிய சிவா) ஆத்மாவும் புன்னகையுடன் நிற்பதுபோல ஒரு கற்பனை காட்சி இன்னமும் கண்முன் நிற்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெற்றிமாறன்:
வடசென்னை படத்தில் ராஜன் - அன்பு இருவருக்குமிடையில் உள்ள உறவு அண்ணன் தம்பியா, குரு சிஷ்யனா என்பதை தாமாக விளக்காமல் ரசிகர்கள் தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடுவார் வெற்றிமாறன். ராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் மீண்டும் அன்புவின் வாழ்க்கையில் வேறொரு வடிவில் வரும். நம்ம முன்னோடிக்கு நடந்ததுதான் நமக்கு திரும்ப வேறொரு வடிவில் நடக்கிறது, எந்தெந்த மனிதர்களை எந்தெந்த விஷயங்கள் எப்படி "இணைக்கிறது" என்பதைத் தான் வெற்றிமாறனின் வடசென்னை காட்சிகள் விளக்குகின்றன.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

வடசென்னை படத்தில் செந்தில், குணா, வேலு, தம்பி இவர்கள் எல்லோரையும் "அன்பு" வாழ்க்கையோடு இணைப்பது "ராஜன்" என்றால், அசுரன் படத்தில் மாரியம்மாள், விஸ்வநாதன், பச்சையம்மாள், முருகேசன், வடக்கூரான், வேணுகோபால் ஷேசாத்திரி, சிதம்பரம் இவிங்க எல்லோரையும் "சிவசாமி" வாழ்க்கையோடு இணைப்பது "முருகன்". அந்த முருகன் இருவரல்ல, ஒருவர்! அந்த முருகன் என்ற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது, அதன் பெயர் "தோழர்!".

- யுவராஜ் மாரிமுத்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism